மருந்து வாங்கக் கூடையா?

Spread the love

சென்ற மாதம் வேடசந்தூரில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் என்னுடைய தம்பி மகளைப் பிரசவத்திற்காகச் சேர்த்திருந்தோம். பிரசவ அறையில் இருந்த குழந்தை பிறந்து அழுகின்ற குரல் கேட்டது. அப்போது ஒரு நர்ஸ் அறைக்கு வெளியே ஓடி வந்து ‘ இதை உடனே வாங்கிக் கொண்டு வாருங்கள் ‘ என்று ஒரு சீட்டை என் கையில் கொடுத்து எதிரில் இருந்த மருந்துக் கடையைக் காட்டினார். நான் சீட்டை வாங்கிப் பார்த்தபோது அதில் என்ன எழுதியிருக்கிற தென்று எனக்குப் புரியவில்லை. சீட்டைக் கொண்டு போய் மருந்துக் கடையில் கொடுத்தேன்.

அதைப் படித்துப் பார்த்த மருந்துக் கடைக்காரர் ‘கூடை கொண்டு வந்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். நான் அசந்து போனேன். ‘மருந்து வாங்கக் கூடையா?’ என்று கேட்ட என்னிடம் மருந்துக் கடைக்காரர் சொன்னார் ‘ஆறு பாட்டில் குளுகோஸ் எழுதியிருக்கிறார்கள், கூடை இல்லாமல் எப்படிக் கொண்டு போவீர்கள்?’ என்றார். அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது.


Spread the love