வெயிலுக்கு குளுகுளு பாதாம் பிசின்

Spread the love

குழந்தைகளுக்கு ரோஸ் மில்க் என்றால் மிகவும் பிடிக்கும். கோடை வெயிலுக்கு பாதாம் பிசினால் ரோஸ் மில்க்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெயிலுக்கு குளுகுளு பாதாம் பிசின் ரோஸ் மில்க்

தேவையான பொருட்கள் :

பால் – கால் லிட்டர்

சீனி – கால் கப்

ரோஸ் மில்க் எசன்ஸ் – கால் தேக்கரண்டி

ஊற வைத்த பாதாம் பிசின் – 3மேசைக்கரண்டி

முதலியவை.

செய்முறை :

பாலை நன்றாகக்காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.பாதாம் பிசினில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைக்கவேண்டும். காலையில் மேலே இருக்கும் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.ஆற வைத்த பாலுடன் சர்க்கரையைச் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்ததும் ரோஸ் மில்க் எசன்ஸுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலந்து அதை பாலில் ஊற்றி நன்றாக கலந்தபின்னர்அதில் ஊற வைத்த பாதாம் பிசினை போட்டு நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்துப்பருகக்கொடுக்கலாம். கோடை வெயிலுக்கு ஏற்ற இயற்கைமற்றும்குளிர்ச்சியான பாதாம் பிசின் ரோஸ் மில்க் ரெடி.

ஜெல்லியை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

ஜெல்லி, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பிடித்த ஒரு வகைஇனிப்பாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதனைவிரும்பி சுவைப்பார்கள் என்று விளம்பரப்படுத்தும் அளவிற்கு ஜெல்லியின் புகழ் பரவிக் கிடக்கிறது. ஆனால், ஜெல்லிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதை எப்படி தயாரிக்கின்றன என்று பல்வேறு சமூக வலைதளங்களிலும், யூடியுப் முதலிய காணொளித் தளங்களிலும்பல்வேறு வகையான தயாரிப்பு முறைகளை சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக பன்றிகளின் கொழுப்பால் ஜெல்லி தயாரிக்கும்  முறை மிகப் பிரபலமாக பார்த்துபகிரப்பட்ட காணொளிக்காட்சியாகும். இது உண்மை என்றால்நாம்இதுவரைநமது குழந்தைகளுக்கு பன்றிகளின் கொழுப்பையா கொடுத்து வந்திருக்கிறோம் என்றால். அதற்கு விடையாக ஆம் மற்றும்இல்லை என இரண்டையுமே கூறலாம்!. சில நிறுவனங்கள் தாங்கள்ஜெல்லி தயாரிக்க பன்றிகளின் கொழுப்பை உபயோகிப்பதில்லை எனக் கூறுகின்றன. நமக்கு எதற்க்கு இந்த குழப்பம்? சரி இப்போது எவ்வாறு குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவது. அதற்கு நமது தமிழ் உணவு வகைகளிலேயே ஒரு மாற்று உள்ளது. ஆம், ஜெல்லிக்கு மாற்று நமது முன்னோர்கள் பரவலாக பயன்படுத்திய “பாதாம் பிசின்”தான். “பாதாம் பிசின்” என்பதை ஆங்கிலத்தில் அல்மோன்ட் கம் (Almond Gum) என அழைப்பார்கள். இது பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகையான பசை.  ஒரு காய்ந்த பசை போல் இருக்கும். அதை தண்ணீருடனோ அல்லது பாலிலோ, சர்க்கரை, சிறிது ஏலக்காய்த் தூள் மற்றும் தேவைப்பட்டால்நிறத்திற்காக கேசரித் தூள். சேர்த்து நன்கு கலந்து ஒரு ஏழுஅல்லதுஎட்டு மணி நேரம் ஊற வைத்தால்இதுபளபளப்பான  ஜெல்லி போன்ற கெட்டியான வடிவில் அது மாறிவிடும். பாதாம் பிசின்(தமிழ் நாட்டில் பிரபலமான ஒரு குளிர் பானம் தயாரிப்பதற்கு பயன் படுகிறது.) அதை இந்த கட்டுரையின் கடைசியில்குறிப்பிட்டு இருக்கிறோம். பாதாம் பிசின் ஜெல்லிக்கு மாற்றாக மட்டும் இல்லை. பாதாம் பிசின் நமது உடல் நலத்திற்குமிகவும் நல்லது. இங்கிருக்கும் தனியார் குளிர் பானங்களால் உண்மையில் நம்உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கலோரிகள்எதுவுமில்லாத குளிர் பானங்கள் நமக்கு, நமது உடல் குளிர்ச்சி அடைந்ததுபோலஒரு உணர்வை கொடுத்தாலும், உண்மையில் அவை நமது உடலை குளிர்விப்பது இல்லை. ஆனால் நமது முன்னோர்கள் அதிகமாக உபயோகித்த பாதாம் பிசின் ஒரு சிறந்த குளிரூட்டும் குணங்களைக் கொண்டு உள்ளது என்று நம்மில்எத்தனைபேருக்குத் தெரியும்? ஆம், பாதாம் பிசின் ஒரு இயற்கையிலேயேகுளிர்ச்சியையும்மேலும்ஜெல்லி போன்ற குணங்களைக்கொண்டது. நமது சூடானஉடலைக் குளிரூட்டும் ஒரு சிறந்த பொருளாகும்.

பாதாம் பிசினின் குணங்கள்:

பாதாம் பிசின் நம்உடலுக்கு மிகச்சிறந்தகுளிரூட்டியாகப் பயன்படுகிறது. வயிற்று எரிச்சலுக்கு மிக நல்லது, மேலும் விலை மலிவானது மற்றும் இயற்கையானது. உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல், மற்றும்அல்சர் முதலான வயிறு சம்மந்தப்பட்டநோய்களையும் குணப்படுத்துகிறது.

பேதிக்கு சிறந்த மருந்தாக பயன் படுகிறது. கொழுப்பை குறைக்க உதவுகிறது. வட இந்தியாவில் இது பொதுவாக கர்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதில்உள்ளகால்ஷியம், எலும்புகளை பலப்படுத்தி உடலுக்கு சக்தி கொடுக்கிறது. இயற்கையான உணவும், இதில் செயற்கையான நிறங்கள் ஏதும் சேர்க்கப்படுவதில்லைஇதனால் இவை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும்மிகவும்எளியபொருளாகஉள்ளது.இதைப்பாலுடன் சேர்த்து பருகினால்உடல் எடையை கூட்ட வல்லது, உடல் எடையை அதிகரிப்பதால் எடை தூக்குபவர்கள்(weight lifters)மற்றும்உடற்பயிற்சிசெய்பவர்கள்இதனை உபயோகிக்கிறார்கள்.  உணவிற்கு பிறகு உண்ணப்படும் இனிப்புகளிலும் குளிர்பானங்களிலும் இதனை சேர்ப்பதால் அசிடிட்டி தவிர்க்கப்படுகிறது.

பாதாம் பிசின் அதிக குளிர்ச்சி அடைய செய்யும் ஒரு உணவுப் பொருள் என்பதால். அவற்றை ஆஸ்துமா, சைனஸ், சளி தொல்லை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

இப்போது நாம் முன்பு குறிப்பிட்ட, பாதாம் பிசின் கொண்டு தயாரிக்கப்படும் தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்துபானம், “ஜிகர்தண்டா” தான்.


Spread the love