இதில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…(பாதாம்)

Spread the love

புரதமும், கொழுப்புசத்தும் அதிகமாக அடங்கியிருக்கும் ஒரே பருப்பு வகைதான் பாதாம். பொதுவாக டயட்டில் இருப்பவர்களுக்கு கொழுப்பு உணவுகளை தவிர்க்க சொல்லுவார்கள். ஆனால் கொழுப்பு சத்து இருந்தும் அதை தாராளமாக உண்ணலாம். காரணம் பாதாம் தோலில் இருக்கும் ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ, இதயத்திற்கு மிகவும் நல்லது. பாதாமில் பாஸ்பரஸ், தாது உப்பு மற்றும் குளுட்டாமிக் அமிலம் நிறைந்திருப்பதினால், இது நினைவாற்றலை அதிகரித்து கொள்ளவும்,நரம்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது.

தினமும் 5 பாதாம் சாப்பிட்டால் அதில் இருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல், வைரஸ் போன்ற நோய் தொற்றிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது. ஆண்களுக்கு உயிரணுக்கள் அளவு அதிகரித்து ஆண்மை குறைபாடு போன்ற பிரட்சனை நீங்கும். மேலும் அது வராமலும் பாதுகாக்கலாம். குறிப்பாக பாதாமில் மூளையையும், சிறுநீரகத்தையும் பாதுகாக்கிற பாஸ்பரஸ் அதிக அளவில் காணப்படுகிறது. அதோடு இரத்த சோகை வராமல் தடுக்கும் இரும்பு சத்தும் நிறைவாகவே இருக்கிறது.

இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் 5 நாட்கள் பாதாம் உட்கொள்ள பழகினால் மாரடைப்பு வரும் அபாயம் 5௦% குறையும் என சொல்லப்படுகிறது. அனைவருக்கும் அத்தியாவசியமான நார்சத்தும், ஆண்டி ஆக்ஸிடன்டுகளும், பாதாம் சாப்பிடுவதால் குறைவில்லாமல் கிடைக்கிறது. இது புற்றுநோய் செல்களை வளரவிடாது என ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. அதற்கு பாதாமில் இருக்கும் B17 தான் காரணம். தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சுவாசகோளாறு, சர்க்கரை நோய், இதய பிரட்சனை, இரத்த சோகை, ஆண்மை குறைவு, சொரியாசிஸ் போன்ற பிரட்சனைகள் வராமல் தடுக்கலாம்.

ஆயுர்வேதம்.காம்  


Spread the love