யோகசனங்கள் செய்வதற்கு ஆயுர்வேத அறிவுரைகள்

Spread the love

ஆயுர்வேதத்தின் அடிப்படை தத்துவம் “தீரிதோஷம்” (வாதம், பித்தம், கபம்). வாதத்தை மலர் போலவும், பித்தத்தை நண்பணாகவும், கபத்தை எதிரியாகவும் நடத்த வேண்டுமென்கிறது ஆயுர்வேதம்.

வாத பிரகிருதிகள் மலர்களை போல், தொட்டாற்சிணுங்கி போல, உணர்ச்சி மிக்கவர்கள், அவர்களுக்கு அன்பான இனிமையான ஆதரவும் தேவை.

பித்த பிரகிருதிகள் தனித்து செயல்படுவதைவிட, சேர்ந்து செயல்படுவதை விரும்புவார்கள். கபப்பிரகிருதிகளை “தார்க்குச்சி” போட்டு உசுப்ப வேண்டும்.

உடல் எளிதில் வளைந்து நிமிர்ந்து செயல் பட தசை, எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு “மசாஜ்” உதவும். ஆசனங்கள் செய்ய முற்படுமுன் சிறிதளவு நல்லெண்ணை தடவிக் கொள்வது வாத மிகுந்த நபர்களுக்கு நல்லது. இந்த எண்ணண தடவல் சர்மத்தை ஈரமாக, மிருதுவாக வைக்க உதவும். கபபிரகிருதிகள் ஆசனங்கள் செய்யுமுன் எந்த வித தைலத்தையும் தடவிக் கொள்ளக் கூடாது. தூக்கம் வந்து விடும். ஆசனங்களின் பிறகு நல்லெண்ணண / எள்எண்ணண உபயோகிக்கலாம். கடுகெண்ணண கப ஆசாமிகளுக்கு உகந்தது பித்த நபர்களுக்கு தேங்காய் எண்ணண குளியல் நல்லது.

நீங்கள் தீவிரமான, முன்னேறிய ஆசனங்களை செய்ய, ஆயுர்வேத மூலிகைகள் உதவும். மூலிகைகள் உடல் கழிவுகளை நச்சுகளை வெளியேற்றி, புத்துணர்ச்சி உண்டாக்கி, இளமையாக உதவும்.

வாதமுள்ளவர்கள், சூடான பால் அல்லது லவங்க பட்டை (பால், சர்க்கரை சேர்த்து) கஷாயத்தை, யோகாசனங்கள் செய்யுமுன் குடிக்கலாம். இதை ஆசனங்கள் செய்தபின்னும் குடிக்கலாம். இதே போல, பித்த பிரகிருதிகள் பழரசம் (ஆப்பிள், மாதுளம்பழம், அன்னாசி, திராட்சை) இஞ்சி சீரணசக்தியை தூண்டும். உடலிருந்து விஷப்பொருட்களை நீக்கும். தவிர, லவங்கப்பட்டை, துளசி, ஏலக்காய், கிராம்பு போன்றவைகளும், இஞ்சி போன்ற செயல்பாடுகளை உடையவை. மஞ்சள் குங்குமப்பூ, குக்குல், கற்றாழை சாறு, அஸ்வகந்தா சதவாரி, நெல்லி, இவையெல்லாமே உபயோகிக்கலாம்.

கபப்பிரகிருதிகள் தேன் கலந்த இஞ்சி ‘டீ’ குடிப்பது நல்லது. அருந்தால். யோகாசனங்களின் பிறகு, அதிக வியர்வை உண்டாகும். பழரசங்கள் குடிப்பதால் நீர்மச்சத்து குறைபாடு வராது. வாத கப நபரிகளுக்கு இஞ்சி போட்ட ‘டீ’ அல்லது லவங்க பயனளிக்கும்  நீங்கள் எந்த வகை பிரகிருதி என்று அறிந்து கொள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.


Spread the love