சமுதாயத்திலும், உங்கள் வீட்டிலும், நண்பர்களிடமும், உங்கள் பணிகளிலும் மிகச் சிறந்த ஒருவனாக உங்களை இந்த உலகம் எதிர்பார்க்கிறது, கோருகின்றது. இதற்கு ஆயுர்வேதம் எவ்வாறு உங்களுக்கு துணைபுரிகிறது? ஆயுர்வேதம் பெண்களுக்கு உதவுவது போலவே பல வழிகளிலும் ஆண்களுக்கும் ஒன்று போலவே உதவுகிறது. குறிப்பாக தினசரி வாழ்க்கையில் ஆரோக்கியமாக செயல்பட ஆண்மகனுக்கு சிறப்பாக உதவுகிறது. ஒவ்வொரு வருடமும் கடந்து செல்லும் போது மேலும் மேலும் நாம் மனச் சோர்வும் அழுத்தமும் தான் அடைகிறோம். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை ஆண்கள் குடும்பத்துககு உழைக்கப்படவேண்டியவனாக இருக்கின்றனர். எனினும் இக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்கின்றனர்.
அவனது குடும்பத்திற்காக அவனுடைய கடமைகள், வாழ்க்கை மாற்றங்கள், சுற்றுலா, பணியிடத்தில் அவன் சந்திக்கும் பலவித பிரச்சனைகளின் காரணமாக இளம் வயதிலேயே ஆணின் உடல் நலம் பாதிப்படையத் தொடங்குகிறது. 50 வயதுக்குமேல் காணப்படும் எலும்பு மூட்டு தேய்மான நிலைகள் சற்று முன்னதாகவே இக்கால ஆண்களுக்கு ஏற்படுகிறது. இளநரை, இரத்த அழுத்தம், தூக்கமின்மை, உடலுறவுக் கோளாறுகள், வளர்சிதை மாற்ற பிரச்சனைகளான உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதி போன்ற நோய்கள் பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். ஆரோக்கியமான, திறன்மிக்க, அர்த்தமுள்ள வாழக்கைக்கு கொண்டு செல்ல ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும் மேற்கூறிய வியாதிகளை குணப்படுத்தவும், நோய் எற்படாமல் தடுக்கவும் ஆயுர்வேதம் முககியப் பங்காற்றுகிறது.
ஆண்கள் ஆரோக்கியத்தை கடைசிப் பட்டியலில் வைத்துள்ளனர்.
சமுதாயத்தில் தங்கள் கடமையில் முழுவீச்சாக செயல்படுவதாக தெரிந்தால் உடல் ஆரோக்கியமாக உள்ளோம் என்று பெரும்பான்மையான ஆண்கள் எண்ணுகின்றனர். அவர்கள் பெண்களைப் போல உடனுக்குடன் செயல்பட்டு மருத்துவரிடம் செல்வது மிகவும் குறைவாக காணப்படுகிறது. மேலும் அவ்வாறு மருத்துவரிடம் ஆண்கள் செல்லும பட்சத்தில் அவர்கள் உடல் நிலையை மோசமாக்கிக் கொண்டுதான் செல்கிறார்கள் என்று மருத்துவ ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ஆண்கள் பொதுவாக எவ்வளவுக்கவ்வளவு தாங்கள் பணிபுரியும் வேலைகளிலும், உணர்வுகளிலும் மிகச் சிறப்பாக உள்ளோம் என்று கருதும் வரை அவர்கள் தங்கள் உடல் நலம் பாதிப்புக்குண்டான வாய்ப்புகளைப்பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் இன்றளவும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்ந்தாலும் அதே நிலையில் நீடித்து இருக்க ஒரு சில சிறிய திட்டமிடுதலினால் சாத்தியமாகும்.
இதய நாள நோய்
ஆண்களின் ஆரோக்கியத்தில் முன்னணியில் இருக்கும் அச்சுறுத்தலான நோய். ஆங்கிலத்தில் அதெரோஸ்கிளரோசிஸ் என்று கூறப்படும். இதன் அர்த்தமானது தமனிகள் தடித்தல் அல்லது கடினமாகுதல் ஆகும்.மனிதனின் மிகப் பெரிய மோசமான எதிரி இது. இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் என்ற முதல் இரண்டும்தான் உலக அளவில் அதிக இறப்புக்கு (ஆண்கள் மற்றும் பெண்களிடையே காணப்படும்) காரணமாக அமைந்திருக்கறது. இதய நாள நோயில் கொலஸ்ட்ரால் சிறிது சிறிதாக இதயத்தில் தமனிகளையும் மூளை இரத்தக்குழாயையும் அடைத்துவிடுகிறது. இதய நாள நோயினால் மரணம் அடையும் ஆணின் சராசரி வயதாக கூறப்படும் 65 வயது எனில் பெண்களுக்கு மேலும் ஆறு வருடங்களுக்கு தாமதமாகிதான் மரணம் அடைகிறார்களாம். ஆகையால் மேற்கூறிய இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் வாய்ப்புகள் ஏற்படுவதை குறைக்க ஆண்கள் கடின உழைப்பு இருக்க வேண்டும்.
இதய நாள நோய், ஸ்ட்ரோக் வராமல்
தடுக்க சில டிப்ஸ்
உங்கள் உடலில் கொலஸ்டிரால் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை உங்கள் 20 வயது ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக காணப்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் சிகரெட், மது பழக்கங்கள் உள்ளவராக இருந்தால் அதனை விட்டுவிடுங்கள்.
நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் நோயானது மிகவும் கொடூரமானது. நுரையீரல் புற்றுநோய் இருக்கிறது என்ற அறிகுறி தெரிவதற்கு முன்பே, எக்ஸ-ரே எடுத்து நாம் அறிந்துகொள்வதற்கு முன்பே மிக வேகமாக உடலில் புற்றுநோயாக உள்ளது என்று அறிந்து கொள்ளும் சமயத்தில், அது குணப்படுத்துவதற்கு இயலாத முற்றிய நிலையில் காணப்படுகிறது. அவ்வாறு நுரையீரல் புற்றுநோய் என கண்டறிந்த பின்பு நோயாளிகளில் பாதிக்கும் குறைவானவர்கள் ஒரு வருடத்திற்கு மேல் உயிர் வாழ்வதில்லை. அதனால்தான் கேட்கிறோம். நீங்கள் இன்னமும் சிகரெட் பிடிக்கும் வழக்கம் உள்ளவரா? பெரும்பாலான நுரையீரல் புற்று நோய்களுக்கு 90 சதவீத புகையிலைதான் காரணமாக அமைந்துள்ளது. எந்த வயதிலும் புகைப்பிடிப்பதை நிறுத்துவதுதான் நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்புக்களை குறைக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்துவது ஒரு சவாலாக இருக்கும். புகைப்பிடிப்பதில் இருந்து வெளியே வர மனநல, உடல் நல ரீதியாக மருத்துவ சிகிச்சைகள் பெறலாம்.
பிராஸ்டேட் புற்றுநோய்
புராஸ்டேட் சுரப்பி என்பது சிறுநீர்பைக்கு கீழே, மலம் செல்லும் பாதைக்கு சற்று முன்னால் இருக்கக்கூடிய சுரப்பி. இதன் வழியேதான் சிறுநீரானது வெளியேறும். பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் மாதிரி ஆண்களுக்கு பிராஸ்டேட் புற்றுநோய் தோன்றுகிறது. உடலுறவு செயலில் ஈடுபடும்பொழுது விந்து வெளியேற்றுவதற்கு முன் வழவழப்பான ஒரு திரவத்தை சுரக்கிறது. தோல் புற்று நோயைத் தவிர்த்து ஆண்களிடம் காணப்படும் ஒரு கேன்சர் இதுதான். வாழநாளில் ஆறில் ஒருவர் பிராஸ்டேட் புற்றுநோய் உள்ளவராக பரிசோதனையில் தெரிய வருகிறது. அவர்களில் 35ல் ஒரு நபர் இந்த புற்றுநோய் காரணமாக இறக்கிறார் என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. பெரும்பாலான பிராஸ்டேட் புற்றுநோய்கள் மெதுவாக பரவக்கூடியது மற்ற தீவிரமாக தாக்கும் புற்று நோய்கள் போல இப்புற்றுநோய் பரவுவதில்லை.