நிறைவான உறக்கம்

Spread the love

மனதுக்கு உணவு தூக்கம் என்கிறது ஆயுர்வேதம். வயதானவர்களுக்கு 4 (அ) 5 மணி நேர தூக்கமே அமைகிறது.

படுக்கும் முன்பு சிறிதளவு சூடான எண்ணெய்யை உச்சந்தலை, கால் பாதங்களில் தடவி, சில நிமிடங்கள் மசாஜ் செய்யலாம்.

இதற்கு ஏற்ற தைலங்கள் – நல்லெண்ணெய், பிரம்மி தைலம், மல்லிகை எண்ணெய், பசும் நெய், ஜடமான்சி தைலம்.

நல்ல தூக்கம் வர பல ஆயுர்வேத மருந்துகள் நித்ரோதயரச, வடகுலாந்தகம், ஸ்வர்ணமாக்சிக் பஸ்பம் முதலியன உள்ளன. ஆயுர்வேத வைத்தியரை அணுகவும்.

ஆயுர்வேத சிகிச்சைகள்

சிரோதாரா – நெற்றியில் மருந்துகள் நிறைந்த தைலத்தை சொட்டு, சொட்டாக விழச் செய்தல். இதில் தைலதாரா, , தக்ர தாரா, ஜலதாரா முதலியன அடங்கும். இந்த சிகிச்சையால் மூளைக்கு அதிக ரத்தம் சென்று, அதிக ஆக்சிஜன் கிடைக்கும்.

முதுமையில் மறதியை தவிர்க்க வழிகள் மேற்சொன்ன உணவு முறைகள், சிகிச்சை முறைகள் மற்றும் நன்றாக தூங்குவது முதலியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

இவற்றைத் தவிர கீழ்க்கண்ட வாழ்க்கை முறை மாற்றங்களையும் தவறாமல் மேற்கொள்ளவும். மூளைக்கு பயிற்சி – உடலுக்கு பயிற்சி அளிப்பது போல், மூளைக்கும் வேலை கொடுங்கள். குறுக்கெழுத்துப் போட்டிகள் போன்றவற்றில் தினமும் ஈடுபடவும். ‘சுடோகு’ (Sudoku) மூளைக்கு ஒரு வரப்பிரசாதம். இவை தற்போது எல்லா பத்திரிகைகளிலும் வருகின்றன. இதைத் தவறாமல் செய்து விடைகளை கண்டுபிடிக்கவும்.

மூளையை முறுக்கும் விடுகதைகள், பயிற்சிகள், வினா – விடைகள், கணித கேள்விகள் முதலியவற்றில் மூளையை ஈடுபடுத்தவும். கணித பெருக்கல், வகுத்தல்களை மனதிலேயே செய்து பார்க்கவும். உதாரணமாக 49 ஐ ஏழால் மனதில் பெருக்கவும். ஒரு பத்து ரூபாய் நோட்டின் இருபுறங்களையும் 1 நிமிடம் பார்க்கவும். பார்த்தவை என்ன என்று எழுதிப்பார்க்கவும். Thesarus (ஒத்த பொருள் உடைய வார்த்தைகள்) புத்தகத்தில் ஏதாவது ஒரு வார்த்தையை பார்த்து புத்தகத்தை மூடி, பார்த்த வார்த்தைகளை எழுதிப்பார்க்கவும். மூளைப் பயிற்சிகள் அடங்கிய புத்தகங்களை வாங்கி பயன்படுத்தவும்.


Spread the love