பஞ்ச கர்மா ஆயுர்வேத மருத்துவத்தின் சிகிச்சை முறைகளில் முக்கியமானதொன்று.
மனித உடல் கடவுளின் வரப்பிரசாதம். சிருஷ்டிகளில் சிறந்தது. தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் திறனுடையது. ஆனால் இயற்கைக்கு மாறான நடவடிக்கையால் மனித உடலின் இயற்கையான நோய் தடுக்கும் சக்தி, குறைந்து விட்டது. வீடானாலும் சரி, வாகனங்கள் ஆனாலும் சரி, அடிக்கடி சுத்தம் செய்து பழுது பார்த்தால் தான் சரிவர இயங்கும். அதே போல மனித உடலும் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
இன்றைய உலகம் அதிவேக உலகம். வாழ்க்கை வசதிகள் பெருகி மனிதன் மகிழ்ச்சியாக வாழ, பல வழிகள் இருக்கும் காலம் இது. மனிதனின் ஆயுள் நீடிக்கப்பட்டாலும் புதுப் புது வீரியழிக்க வியாதிகள் மனிதனை வாட்டுகின்றன. நீரிழிவு போன்ற ‘பாரம்பரிய‘ நோய்களிலிருந்து மனிதன் இன்னும் விடுபடவில்லை. வியாதிகள் வருமுன் காப்பது நல்லது.
இந்த வகையில் ஆயுர்வேதம் சிறந்த வைத்திய முறையாகும். வியாதிகளில் அறிகுறிகளை மட்டும் களையாமல், கூடவே வியாதியின் வேரையும் கிள்ளி எறிந்து குணப்படுத்துவது ஆயுர்வேதத்தின் தனிச் சிறப்பு. வருமுன் காக்கும் திறன் ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ளது. இதை அறிந்து மீண்டும் ஆயுர்வேதத்தை நாடும் மக்கள் அதிகரித்து வருகின்றனர்.
வசதிகளும், செழிப்பும் பெருகினாலும் அதற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. உணவு உற்பத்தியை பெருக்க உபயோகிக்கும் மருந்துகள், செயற்கை உரங்கள், மாறிய உணவு முறைகள், உழைப்பின்மை, சுற்றுப்புற சூழல் மாசுபடுதல், தீய பழக்க வழக்கங்கள் இவற்றால் மனித உடலின் கழிவுப் பொருட்களும், நச்சுப் பொருட்களும் தேங்கிவிடுகின்றன இதனால் இளமையில் முதுமை, மனச் சோர்வு, பலவீனம், புற்றுநோய்கள், நீரிழிவு போன்றவற்றால் மனித உடல் பாதிக்கப்படுகிறது. இந்நிலையை மாற்றும் சிகிச்சை பஞ்ச கர்மாவாகும்.
பஞ்ச என்றால் ஜந்து, கர்மா என்றால் முறைகள் – செயல்பாடுகள் பஞ்ச கர்மா ஜந்து வழிகளால் உடலில் உள்ள கழிவு நச்சுகளை இயற்கை முறையில் உடலின் துவாரங்கள் வழியே வெளியேற்றுகிறது.
பஞ்சகர்மா ஆரம்பிக்குமுன், முன்னேற்பாடாக “பூர்வகர்மா” சிகிச்சை தரப்படும்.
பூர்வகர்மா:
1. ஸ்நேஹனா: உடலில் எண்ணை ‘பசையை‘ ஏற்றுவது. உடலை மிருதுவாக்கும். பலவீனமானவர்கள், உடலுறவால் சக்தி இழந்து சோர்வுடையவர்கள், சோகை, பரபரப்பு, வரண்ட சரீரம், முதியோர் இவர்களுக்கு ஸ்நேஹனா நல்ல பலனளிக்கும்.உள்ளுக்கு நெய், எண்ணை. கொடுக்கப்படும். இவை, சூர்ய உதயத்திற்கு பின் 15 – 30 நிமிடங்கள் கழிந்த உடனே கொடுக்கப்படும். நோயாளியின் உடல் கோளாறைப் பொறுத்து கொடுக்க வேண்டிய அளவு, மருந்துகள் முன்பே முடிவுசெய்யப்படும். நெய் அல்லது மூலிகைகளை சேர்த்து காய்சாப்பிட தைலம் உள்ளுக்கு கொடுக்கப்படும். இந்த உள்ளுக்கு கொடுக்கும் மருந்துக்கு ஸ்நேக பானம் என்பார்கள். இது 3 லிருந்து 7 நாட்களுக்கு கொடுக்கப்படும். உடலில் எண்ணை பசை ஏற ஏற உடல் வரட்சி நீங்கி, நல்ல பசி உண்டாகும். எண்ணை பசையால் மலம் சுலபமாக வெளியேறும். திரவ உணவு கொடுக்கப்படும் ஸ்நேஹனா தனிச்சிகிச்சையாகவும் சில நோய்களுக்கு, பயன் படுகிறது.
ஸ்நேஹன முறையில் உள்ளுக்குள் கொடுக்கும் நெய் போன்றவை தவிர உடல் வெளியே ‘மசாஜ்‘ ஜும் செய்யப்படும். உத்வர்த்தனம் என்ற முறையில் மூலிகை பொடிகளால், உடலின் கீழிருந்து மேலாக மசாஜ், செய்யப்படும். இது உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்றது. தவிர சுப்யங்கம் என்ற முறையில் உடம்பு முழுவதும் அல்லது தேவைக்கேற்ப சில பகுதிகளில் (தலையிலும், பாதங்களிலும்) மசாஜ் செய்யப்படும். வாத நோய்களுக்கு நல்ல சிகிச்சை இது.
ஸ்நேஹனா சிகிச்சையின் போது நோயாளியை கண்காணிப்பது அவசியம். ஸ்நேஹா பலனளித்தால் ஜுரணசக்தி மேம்பாடு, கொழுப்பு உணவு பிடிக்காமல் போதல், அபான வாயு பிரிதல், பேதி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
2. ஸ்வேதனம்:- இது வியர்வை உண்டாக்கும் சிகிச்சை. இருமல், தலைவலி, பாரிசவாயு, மூட்டுவலி, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு ஏற்றது. உடலுக்கு பலவழிகளில் ‘சூடு‘ கொடுக்கப்படும் மொத்தம் 23 வகைகளில் 13 சூட்டாலும் 10 முறைகள் சூடில்லாமலும் இந்த சிகிச்சை செய்யப்படும் வெளிச்சூட்டை கொடுக்காமல் உடலில் வியர்வை வர, உடற்பயிற்சிகள், உடலை சுற்றி கம்பளியால் மூடுவது, பசி, வெய்யில் போன்றவை கையாளப்படும். சுச்ருதரும், வாகபட்டரும் ஸ்வேதானவை நான்கு பிரிவுகளாக சொல்லியிருக்கிறார்கள்.
1. செங்கல், மணல், கற்கள் – இவை சூடாக்கப்பட்டு துணியால் கட்டி ஒத்தடம் கொடுக்கப்படும்.
2. ‘பற்று‘ போடுவது, சமைத்த தானியங்களை மூட்டை கட்டி ஒத்தடம் தருவது.
3. நீராவியால் சூடேற்றுதல்
4. சூடான எண்ணை, தண்ணீர், பால், உடலில் ‘கொட்டுவது‘
இந்த மாதிரியான சிகிச்சையின் மூலம் வியர்வை பெருகி, அத்துடன் கழிவுப் பொருட்களும் வெளியேறும்.
பஞ்ச கர்மா: ஜந்து கட்டங்களுடையது. பஞ்ச கர்மா. அவை 1. வமனம், 2. விரேசனம் 3. தைல வஸ்தி 4. கஷாய வஸ்தி 5. நஸ்யம்.
1. வமனம்:- பாதிக்கப்பட்ட தோஷங்கள் வாய் வழி வெளியேற, வாந்தி உண்டாக்கப்படும் சிகிச்சை முறை வமனம். எடுத்த வாந்தியில் ஜீரணமாக உணவு, கபம், மற்றும் பித்தம் காணப்படும். கபப்பிரகிருதிகளுக்கு ‘வமன‘ சிகிச்சை ஏற்றது. ஜலதோஷம், ஷயரோகம், ஜுரம், இருமல் ஆஸ்துமா, மலச்சிக்கல், பிரட்டல், பருமனுள்ளவர்களுக்கு வமன சிகிச்சை பலனளிக்கும். நோயாளிகளுக்கு மூலிகை மருந்தை கொடுத்து வாந்தி உண்டாக்கப்படும். இந்த சிகிச்சை கவனமாக, மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வமன சிகிச்சை லகுவான சிறிதளவு திரவ உணவுக்குப்பின் மேற்கொள்ளப்படும்.
இந்த வமன சிகிச்சையிலும், பின்வரும் விரேசன சிகிச்சையிலும் ஏற்படும் சிக்கல்களை சரகர் விவரித்திருக்கிறார். இதில் சிலவற்றை கீழே காணலாம்.
சிகிச்சையில் ஏற்படும் தவறுகள்
பழைய மருந்து உபயோகித்தல் அளவுகளில் குறைவு
மிருதுவான குடலுடையவர்க்கு அதிக அளவு மருந்து கொடுத்தல்
மனம் போனவாறு ஏற்பட்ட தவறுகள்
வீரியம் மிகுந்த மருந்துகளை, மென்மையான குடல் உடைய நோயாளிக்கு கொடுப்படு
ஏற்படும் கோளாறுகள்
உடல் கழிவுகள் வெளியேறாது. அல்லது குறைவாக வெளியேறும்
உடல் கழிவுகள் ஓரேடியாக வெளியேறுவது பலவீனம், உலர்ந்த தொண்டை தலைசுற்றல், தாகம்
அதிக அளவில் வாந்தி
வாந்தியில் இரத்தம்
சிக்கல்களை சமாளிக்கும் முறை
எண்ணை உப்பு மசாஜ் ஒத்தடம், மறுபடியும் மூலிகை மருந்து, எண்ணை பசை இல்லாத “எனிமா” உணவில் மாமிச ‘சூப்‘, வாதத்தை போக்கும் எண்ணை பசையை ஏற்றும் சிகிச்சை.
வேறு இனிப்பு மருந்தால், முன் கொடுத்த மருந்தை வெளியேற்றவும். பிரத்யேக பானம் கொடுத்தல் திரவ உணவுபத்தியம், எனிமா
குளிந்த நீரை தெளிக்கவும். சிறிது புளித்த பானம் – இதில் நெய் தேன், பழச்சாற்றுடன் சேர்த்து குடிக்கவும்
பித்தம் குறையை சிகிச்சை, மூலிகை எனிமா
2. விரேசனம்:- பேதி உண்டாக்கும் மூலிகை மருந்துகளை கொடுத்து வயிற்றை சுத்தம் செய்வது விரேசனம். வயிற்றிலுள்ள வாதம், பித்தம், கபம் இந்த மூன்று தோஷங்களையும் சுத்தப்படுத்தும் சிகிச்சை இது. பேதியை உண்டாக்க மூலிகைப் பொடி (அ) கஷாயம் பயன் படுகின்றன. விரேசன சிகிச்சையை, ஸ்நேஹனா மற்றும் ஸ்வேதனா சிகிச்சை செய்த பிறகு தான் மேற் கொள்ள வேண்டும் என்கிறார் வாகபட்டர். விரேசனம் இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது.
1. எண்ணெயால் செய்யப்படும் விரேசனம் – இதில் ஆமணக்கு எண்ணை நேரடியாக அல்லது மூலிகைகளுடன் காய்ச்சப்பட்ட ஆமணக்கு எண்ணையை வைத்து செய்யப்படும். இது எலும்பு தேய்வு, முடக்குவாதம் இவற்றுக்கு நல்லது.
2. பொடியினால் செய்யப்படும் விரேசனம்:- த்ரிவிருதபொடி (சிவதை, கடுக்காய், நிலவரை) மற்றும் த்ரிபால சூரணம் கொடுக்கப்படுகிறது வெள்ளெருக்கு மற்றும் ஆமணக்கு சேர்ந்த மருந்தும், வயிற்றுப் போக்கை உண்டாக்கும். இது வாத பித்த நோய்கள், மஞ்சள் காமாலை, தோல் வியாதிகளுக்கு நல்லது.
வமண சிகிச்சைக்கு சிறிதளவு உணவு உட்கொள்ள வேண்டும் – ஆனால் என்று சொல் விரேசன மருந்துகள் வெறும் வயிற்றில் தான் கொடுக்கப்படும் விரேசண சிகிச்சைக்குப் பின், நோயாளி லகுவான ஆகாரம் உண்டு, ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. வஸ்தி: இது ‘எனிமா‘ வை குறிக்கும் சொல், சரகர் வஸ்தி, வாத நோய்களை முழுமையாக குணமாக்க வஸ்தி சிகிச்சை தேவை என்கிறார். மருந்துகள் நோயாளியின் ஆசன துவாரம் பழியே செலுத்தப்படுகின்றன. இது இருவகைப்படும்.
1. கஷாய வஸ்தி 2. தைல வஸ்தி (அன்னுவாசன வஸ்தி) நிரூகவஸ்தி
1. கஷாய வஸ்தி:- இந்த சிகிச்சை பெயருக்கேற்ப தேவையான மூலிகைகளின் கஷாயத்தால் செய்யப்படுகிறது. காலை வெறும் வயிற்றில் இந்த கஷாயங்கள் கொடுக்கப்படும்.
2. தைல வஸ்தி:- மூலிககைளால் காய்ச்சப்பட்ட எண்ணைகளால் செய்யப்படுகிறது. இந்த இரண்டு வஸ்திகளும், நோயின் கடுமைக்கு ஏற்ப, ஒன்றுக்கொண்டு மாறி, மாறி செய்யப்படும்.
இந்த வஸ்திகள் ஆண்மைக்குறைவு, பசியின்மை, நெய், தேன், எண்ணை போன்றவைகளும் சேர்க்கப்படலாம்.
4. நஸ்யம்:- நாசித் துவாரங்களின் வழியாக மருந்து செலுத்தும் சிகிச்சை ‘நஸ்யம்‘ எனப்படுகிறது. இதை ‘சிரோ விரேசனம்‘ என்றும் சொல்வார்கள் நாசித்து வாரங்கள் சிரசின் கதவுகள் எனப்படுவதால், இவைமூலம் செலுத்தப்படும் மருந்துகள் தலையில் பரவி, அங்குள்ள தோஷகுறைகளை சமன் செய்யும், மூக்கு, கண், காது நோய்கள், தலைவலி, திக்குவாய், போன்றவற்றுக்கு பலனளிக்கும். மருந்து கலந்த எண்ணை அல்லது மூலிகைச் சாறு நாசிகளின் வழியே, விடப்படும். நஸ்ய சிகிச்சையில் பொடி செய்த மூலிகைகள், ‘நாடி எந்திரம்‘ என்ற உபகரணத்தின் மூலம், நாசிகளால் நுகரப்படும். இந்த ‘நாடி எந்திரம்‘ அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது.
தூமபான நஸ்யத்தில், ஊதுவத்தி போன்றவற்றில் மூலிகை தைலம் தடவப்பட்டு அதை புகையை நாசியால் இழுக்கப்பட்டு, வாயின் வழியே வெளியேற்றப்படும். இந்த நஸ்யம் ‘சைனஸ்‘, தலைவலி இவற்றுக்கு நல்லது.
மேற்சொன்ன தவிர, சில ஆயுர்வேத நூல்கள் கெட்ட இரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சையும் பஞ்சகர்மாவில் சேர்த்து கூறுகின்றன.
சுருக்கமாக பஞ்சகர்மா முறைகள் கீழே அட்டவணையாக கொடுக்கப்படுகிறது.
பஞ்சகர்மாவமணம்
விரேசனம்
வஸ்தி இருமுறைகள்
ரத்தம் எடுத்தல்முறை
வாய் மூலம், சுலபமாக வாந்தி எடுத்தல் – இதன் மூலம் தோஷங்கள் வெளியேறும்.
பேதி மூலம் உடல் நச்சுப் பொருட்கள் வெளியேற்றம்.
எனிமாகெட்ட ரத்தத்தை வெளியேற்றுதல்
விவரங்கள்
ஆஸ்துமா, இதர மூச்சு சம்மந்த வியாதிகளுக்கு ஏற்றது. மனோ வியாதிகளுக்குமு நல்லது சோரியாஸிஸ் – தோல் வியாதிக்கும் நல்லது.
வயிற்றுக் கோளாறுகள், மஞ்சள் காமாலை, கல்லீரல் வியாதி, கட்டிகள், நீரிழிவு, மூட்டு நோய்கள், இவற்றுக்கேற்ற சிகிச்சை.
நரம்பு சம்மந்தப்பட்ட கோளாறுகள், முடக்கு வாதம், மூட்டுவலி, குழந்தையின்மை, பலவீனப்படுத்தும் நோய்கள். ஆண்மைக் குறைவு இவற்றுக்கு செய்யப்படும்.
தோல் வியாதிகள், வீக்கங்கள், ஒவ்வாமை கல்லீரல் வியாதிகள் இதன் உபயோகம் தற்போது குறைக்கப்பட்டு, மேற்சொன்ன வஸ்தி இருமுறைகளாக பிரிக்கப்பட்டு, அத்துடன் பஞ்சகர்மா முடிவடைகிறது.
மேற்சொன்னதை தவிர சில பிரதியே சிகிச்சைகளும் கையாளப்படுகின்றன. அவை சிரோவஸ்தி, கடி வஸ்தி, சிரோதாரா, தக்ரதாரா, காயசேகம், கண்டூஷம், சிரோலேபம் ஆகும். தவிர, கேரளாவின் ஆயுர்வேத நிபுணர்கள் செய்யும் பஞ்சகர்மா முறை சிறிது வேறுபட்டது.
சிகிச்சையின் போது கடைபிடிக்க வேண்டியவை
1. பூர்வகர்மாலில் ‘ஸ்நேஹனாவின் பிறகு – சுருநீனா உபயோகிக்க வேண்டும். உடலுறவு கூடாது. பகலில் உறங்க வேண்டாம்.
2. ஸ்வதனாவிற்கு பிறகு குளிர்ந்த நீஸி தவிர்க்கவும். பகலில் சிறிது உறங்கலாம்.
3. பஞ்சகர்மா – வமணத்திற்கு பின் அதிகம் உண்ணுதல், அதிகம் நடப்பது, கோபம், உடலுறவு இவை கூடாது.
விரோசனத்தின் பின் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
வஸ்திக்கு பின் அதிக நேரம் நிற்பது / உடகார்ந்திருப்பது, உடலுறவு, பகல் தூக்கம் இவை கூடாது.
நஸ்யத்தின் பின் குளிர்ந்த நீர், எண்ணை, நெய், தலைக்கு குளித்தல் இவற்றை தவிர்க்கவும்.
4. பொதுவான விதிகள்: பஞ்சகர்மா சிகிச்சையின் போது
மருத்துவர் சொன்ன பத்தியத்தை கடைப்பிடிக்கவும். சிகிச்சையின் போது புகைபிடித்தல், மது அருந்துதல், உடலுறவு இவற்றை தவிர்க்கவும்.
பஞ்சகர்மா ஒரு உன்னதமான சிகிச்சை முறை, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றி உடலின் இயற்கை வலிமையை அதிகரிக்கும்.