பற்களும் ஆயுர்வேதமும்

Spread the love

உடலில் உள்ள 9 துவாரங்களில் ஒன்று வாய். ஆயுர்வேதத்தின் படி,  இந்த 9 துவாரங்களுமே அழுக்கு தேங்குமிடங்கள்! அதுவும் பற்களின் ஒன்றுக் கொன்றின் இடையில் இருக்கும் இடுக்குகள், ஈறுகளும் பற்களும் கூடுமிடம், இங்கெல்லாம் சுலபமாக காரை படியும். பற்களின் ஊத்தை வயிற்றை கெடுக்கும். பற்கள் மிகவும் வலிமையான தாடை எலும்பின் குழியில் பதிக்கப்பட்டவை. குழியில் ஈறுகளின் தசையால் ‘கிடிக்கப்பட்டு ‘ இருக்கின்றன. ஈறின் தசைகள் “குஷன்” போல் பற்களை தாங்குகின்றன. எனவே தினசரி பற்களை தேய்க்கும் போது, ஈறுகளை துன்புறுத்தாமல் துலக்கவும் என்கிறது ஆயுர்வேதம்.

ஈறுகள், பற்களின் ஆரோக்கியத்தை காக்க ஆயுர்வேதம் சொல்வது – உணவு உண்பதற்கு முன், உண்ட பின் நன்றாக வாய் கொப்புளிக்க வேண்டும். துவர்ப்பும் கசப்பும் உள்ள, பசுமையான, காயாத பற்குச்சிகளால் துலக்கவும். ஆயுர்வேத வைத்தியர்கள் சிபாரிசு செய்வது மாவிலை, வேலங்குச்சி, ஆலம் போன்றவை. சுண்ணாம்பு, மெந்தால் நிறைந்த பற்பசைகளை தவிர்ப்பது நல்லது என்பது வைத்தியர்களின் கருத்து. பழங்காலத்தை விட தற்போது இந்தியர்களின் பல், ஈறு ஆரோக்கியம் மிகக்குறைவு, இதன்காரணம் மாறிவிட்ட உணவுப் பழக்கம்.

பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்க. உபயோகிக்கும் பற்பசை துவர்ப்பும், கசப்பும் நிறைந்ததாக இருக்க வேண்டும். வேம்பு போன்ற இயற்கை மூலிகைகள் கலந்த பற்பசைகள் தற்போது தாராளமாக கிடைக்கின்றன. பற்களை மேலும் கீழுமாக தேய்க்க வேண்டும் – குறுக்காக அல்ல. ஈறுகளை சேதப்படுத்தாமல் தேய்க்க வேண்டும்.

பற்களை துலக்க ஆட்காட்டி விரலை உபயோகிக்க கூடாது என்கிறது ஆயுர்வேதம். எனவே “ப்ரஷ்ஷால் தேய்த்து முடித்தபின், நடுவிரலாலும் மோதிர விரலாலும் ஈறுகளை இதமாக தேய்க்கவும். ஆட்காட்டி விரலில் அழுத்தம் அதிகம். எனவே அந்த விரலை பல், ஈறுகளை தேய்க்க உபயோகிக்க வேண்டாம்.

ஒவ்வொறு உணவிற்கு பின்னும் வாயைக் கொப்புளிக்க வேண்டும். ஏன், ஏதாவது பானம் குடித்தால் கூட, குடித்தவுடன் வாய் கொப்பளித்தல் நல்லது. இந்த வாய் கொப்புளிப்பதை “கண்டூஷம்“ என்கிறது ஆயுர்வேதம். ஈறுகளின் பிரச்சனை இருந்தால் வெந்நீரால் கண்டூஷம் செய்தல் நல்லது. ஈறுகள் உறுதியாக இருந்தால் தான் பற்கள் நன்றாக இருக்கும். எனவே ஈறுகளை கவனியுங்கள்.

ஆயுர்வேத அணுகுமுறை

ஆயுர்வேதம் வாய் சுத்தக்குறைவினால் பயோரியா வருகிறது என்பதை ஒட்டிக் கொண்டாலும், ஜீரணக்கோளாறுகள் தான் முக்கிய காரணம் என்கிறது.

முதலில் வாய் சுத்திகரிக்கப்படும். ஆறு அங்குல நீளமுடைய ஆல் அல்லது வேலங்குச்சி கொண்டு பல் துலக்கப்படும். இவை ஆன்டி – செப்டிக் குணமுடைய மரங்களானதால், ஈறுகளில் ரத்தம், சீழ் கசிவது கட்டுப்படும். இந்த பற்குச்சிகள், உபயோகிப்பது பல் வைத்தியரின் கண்காணிப்பில் நடக்கும். ஏனென்றால், பயோரியா உள்ள நிலையில் பற்குச்சிகள் உபயோகிப்பதில்லை. ஈறு, தொண்டை , வாய் அழற்சிகள் இருந்தால் குச்சிகளை உபயோகிக்கக் கூடாது. பிறகு வயிறு சுத்திகரிப்பு. வெந்நீர் எனிமா தரப்படும். 3-5 நாட்களுக்கு வெறும் பழங்கள் தான் சாப்பாடு. பிறகு நல்ல சமச்சீர் உணவு. உணவில் ‘வெண்ணிற ‘ ரொட்டி, சர்க்கரை தவிர்க்கப்பட வேண்டும். மாமிசம், ஸ்டார்ச் அதிகமுள்ள உணவுகள், சாராயம், இவற்றையும் தவிர்க்கவும். வாயில், பற்களில் ஒட்டிக் கொள்ளும், சீஸ், சாக்லேட், திரட்டிப்பால், இனிப்புகள் இவற்றை தவிர்க்கவும். ஜாம், ஜெல்லி போன்றவை கூடாது. நல்லெண்ணை வாயிலிட்டு 10 நிமிடம் வைத்து கொப்பளிக்கவும். இதை தினமும் செய்யலாம். நல்லெண்ணைக்கு பதில் நாராயண தைலம், இதனால் பயோரியாவை கட்டுப்படுத்த முடியும்.

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை 1 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி (15 நிமிடம்) ஆற வைத்து குடித்து வரவும். கொம்பு புடலை இலைகள், இஞ்சி, கருமிளகு, அரசமரவேர், பாறை உப்பு இவற்றை நீரிலிட்டு வேக வைக்கவும். பின் வடிகட்டிய நீரினால் வாயை கொப்பளிக்கவும். பாகற்காய், உருளை, முருங்கை இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும். ஐந்நூறு ஆலமரபட்டைகளை நீரில் லு  மணி நேரம் கொதிக்க விடவும். பட்டையின் சாறு, நீரில் சேர்ந்து விடும். இதனை வடிகட்டி வாய் கொப்பளிக்கவும். எலுமிச்சை சாறை ஈறில் (சிறிது எரிந்தாலும்) தேய்த்துக் கொள்ளவும்.

ஆமணக்கு எண்ணெய் – 200 மி.லி, தேன் – 100 மி.லி, கற்பூரம் – 5 கிராம் இவற்றை ஒன்றாக கலக்கவும். இந்த கலவையில் வேப்பங்குச்சியை நனைத்து பற்களில், ஈறுகளில் தடவிக் கொள்ளவும். இதனை தொடர்ந்து செய்யவும். நெய் மற்றும் கற்பூரத்தை கலந்து ஈறில் தடவிக்கொள்ளலாம். பசலைக்கீரை சாறு, கேரட் சாறு சம அளவு சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு முறை பருகவும்.

விட்டமின் சி  நிறைந்த பழங்கள், உணவுகள் அவசியம். கொய்யாபழம் மிகவும் நல்லது. முழுவதும் பழுக்காத கொய்யா பழத்தை சாப்பிடவும். கொய்யா இலைகளை மென்று துப்பலாம். கொய்யாமரப்பட்டையால் செய்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்கவும். ஆரஞ்சுபழம், எலுமிச்சை பழம், வாழைப்பழம் இவைகளும் விட்டமின் சி-யை அளிக்கும்.   

திரிபலாதி சூரணம் மலச்சிக்கலை போக்கும். இதனால் பயோரியாவை கட்டுப்படுத்த முடியும். மூலிகை பல்பொடி, பேஸ்ட் இவைகளை பயன்படுத்தலாம். தசான சமஸ்காரண  சூரணத்தால் பல் தேய்ப்பது சிறந்தது. இது பயோரியாவை நிறுத்தும் ஈறுகளை பத்ர முஸ்தாதி குடிகையால் தேய்க்க வேண்டும்.

கோதுமை சப்பாத்திகள் பயோரியாவை குறைக்கும் உணவு. எள்ளுப் பொடியில் நெய், தேன் சேர்த்து பற்கள், ஈறுகளின் மேல் தடவி சிறிது நேரம் வைத்து வாயை கழுவவும். இதனை 10 – 15 நிமிடம் வாயில் வைத்திருந்து பிறகு கொப்பளித்து, வாயைக் கழுவவும்.

ஈறுகளில் அதிக அழற்சி இருந்தால் நல்லெண்ணெய், தேங்காய்பால், எள்ளுத்தூள், தேன், எள் இவை புண்ணாற்றும்.  நல்லெண்ணெய், காரை , ஊத்தையை கரைக்கும். மேலே சொன்னபடி நல்லெண்ணையை தனியாகவும் கொப்பளிக்கலாம். திரிபலாதி சூரணம், ஏலாதி சூரணம், இவைகள் சில ஆயுர்வேத நிவாரணிகள். வஜரதந்த தைலம், தினம் செய்யவும். அரிமேதாதி தைலம் இலைகளை “கண்டூஷமாக” உபயோகிக்கலாம்.

எட்டு பாகம் உமிக்கரி, 2 பாகம் கருவேலம் பட்டை, உப்பு கால் பாகம் இவற்றை பொடியாக்கி பற்பொடியாக பயன்படுத்த, ஈறு வலிவடையும். பொடித்த அதிமதுரம் 10 கிராமை எடுத்து 300 மி.லி. நீரில், பாதியாகும் வரை காய்ச்சவும். ஆறியவுடன் வடிகட்டி வைத்து கொள்ளவும். இதில் மாசிக்காய் ஒரு கிராம், கத்தக்காம்பு ஒரு கிராம், தேன் ஒரு அவுன்ஸ் கலந்து வரயிலிட்டு, நன்றாக கொப்பளிக்கவும். இதை 10-15 தினங்கள் செய்ய நல்ல பயன் கிடைக்கும்.

பயோரியா தெரிந்து கொள்ளுங்கள்

சிரிப்பை அழகாக்குவது பற்கள். ‘பளிச்‘ சென்று வெண்மையாக மின்னும் பற்களால் தான் முகம் ஒளிபெற்று, சிரித்தால் 1000 வாட் பல்ப் போல் முகம் ஜொலிக்கும். தவிர பல் போனால் சொல் போகும். மனிதர்களுக்கு வாழ்வில் இரண்டு தடவை பற்கள் உண்டாகின்றன. குழந்தை பிறந்து, 6 மாதத்தில் முளைக்க ஆரம்பிக்கும். குழந்தை பற்கள் (Baby Feeth). குழந்தை 212 வயது ஆகும்போது முழுவதுமாக, 20 பற்கள், முளைத்து விடும். பிறகு 6 வயதிலிருந்து, நிரந்தர பற்கள், இந்த குழந்தை பற்களை ‘தள்ளிவிட்டு ‘ முளைக்க ஆரம்பிக்கும். இவை மொத்தம் 32 ஈறுக்கு மேல் தெரியும் பல்லின் பாகத்தை “மகுடம்“ (Crown) என்றும் ஈறுக்கும் அடியில் தெரியாத பாகம் “வேர்” (Root) என்றும் சொல்லப்படுகிறது. பல்லின் நடுமத்தியில் உள்ள “குழி”யில் நரம்புகளும், ரத்தக்குழாய்களும், இணைக்கும் திசுக்களும் உள்ளன. இதை பாதுகாப்பாக சுற்றிக் கொண்டு எலும்பு போல் ஆனால் எலும்பை விட கடினமான “டென்டைன்” என்ற பொருள் இருக்கிறது. இதை சுற்றிக் கொண்டு “மகுடத்திற்கு “ வெளிப்பூச்சாக கெட்டியான “எனாமல்” இருக்கிறது. பல்லின் வேர், எலும்பு போன்ற சிமெண்டம் என்ற பொருளால் சூழப்பட்டு தாடை எலும்பின் குழிப்பகுதியில் கெட்டியாக இணைக்கப்பட்டிருக்கும்.

பயோரியா என்பது “ஜிஞ்கிவைடிஸ்” என்ற ஈறு நோயின் முற்றிய நிலை. பயோரியா பழங்கால சொல். இப்போது பயோரியாவை ‘பெரியோடோன்டைபீஸ்’ (Periodontitis) என்கிறார்கள். ஈறுகளையும், பற்குழி, பற்களை தாங்கும் இதர தசை நாண்களை பாதித்து பற்களை விழ வைக்கும்.

இது ஏற்பட முதல் காரணம் “ஊத்தை“ (Placque) தான். சரியாக பல் துலக்காவிட்டால் (அதுவும் உணவிற்குப் பின்), நாளடைவில் ஊத்தையும், காரையும் பல்லுக்கும், ஈறுக்கும் நடுவில் சேர்ந்து, ஒரு இடைவெளி அல்லது “இடுக்கை” உண்டாக்கும். தொடர்ந்து காரை ஈறைத்தாக்கி, அதற்கும் பல்லுக்கும் நடுவே இடைவெளியை பெரிதாக்கிக் கொண்டே, கீழே வேர்வரை இறங்கும். இந்த காரையில் இருப்பவை தீ பலம் வாய்ந்த “கெட்ட” பாக்டீரியாக்கள். இடுக்குகளில் எல்லாம் இந்த பாக்டீரியா நிறைந்த காரை பரவி தங்கிவிடும். சிகிச்சையில்லாவிடில், பாக்டீரியா வேரைச் சேர்ந்து, தாடை எலும்பை சிதைத்து, பல்லை விழ வைக்கும். இந்த பாக்டீரியா தாக்குதலின் தீவிரமும், வேகமும் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

ஊத்தையும், காரையும் தான் முக்கிய காரணம் என்றோம். இவை உண்டாகும் காரணம் நமது தவறுதான். சரியாக பல் துலக்காத்து. நாம் சாப்பிட்ட உணவின் துகள்கள் பற்களின் இடுக்குகளில் சேர்ந்து, தங்கி, அழுகி, பாக்டீரியாவை உண்டாக்கும். பல் துலக்கியபின் 4 மணி நேரத்திலேயே பாக்டீரியா உண்டாகும். எனவே உணவிற்கு பின் பல் துலக்குவது மட்டுமின்றி நாம் “Flossing” என்ற முறையில் பல் இடுக்குகளை “நூலால்” சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் இதை நிறைய பேர்கள் செய்வதில்லை. தவிர 6 மாதத்திற்கு ஒரு முறையாவது பல் வைத்தியரிடம் போய் பற்களை யும், ஈறுகளையும் நாம் சுத்தம் செய்து கொள்வதில்லை.

காரையைத் தவிர பயோரியா உண்டாக இதர காரணங்கள், தவறான உணவு முறை – இனிப்பு | அதிகம் உண்பது நார்ச்சத்து குறைவு, புகைபிடித்தல், மது அருந்துவது, விட்டமின் ‘சி’ குறைபாடுகள், மற்ம் கால்சியம் குறைபாடுகள். சில வியாதிகள் – நீரிழிவு ‘எய்ட்ஸ்’, டவுன்ஸின்ட்ரோம் (Down’s syndrome), க்ரோன் வியாதி (Crohn’s Syndrome) போன்றவை கூட பயோரியா வர ஏதுவாகின்றன. வாயில் அதிக நேரம் இனிப்போ , புளிப்போ, உப்போ, தங்கக் கூடாது. தங்கினால் ஈறுகள் தேய்ந்து விடும்.

அறிகுறிகள்

ஈறுகள் மென்மையாகி, சிவப்பாக சிவப்பு – பழுப்பாக நிறம் மாறுதல், ரத்தம் கசிதல், ஈறு வீங்குதல். சீழ் வருதல், குறிப்பாக பற்களை அழுத்தினால் வாய் துர்நாற்றம், சீழை விழுங்குவதால் அஜீரணம், பேதி, சுரம் ஏற்படலாம். இந்த வியாதியில் வலி தெரியாது. பல் குடியிருக்கும் குழியின் எலும்புப்பகுதி சிதைந்து பல் ஆடும் போது தான் வலி தெரியலாம்.

சிகிச்சை

பல் வைத்தியர் சுத்தமாக பற்களையும் ஈறுகளையும் “க்ளின்” செய்வார். இது அவசியமான முதல் நடவடிக்கை  பிறகு பாக்டீரியா ஏற்படுத்தியிருக்கும் இடுக்கு, இடைவெளிகளை ஆன்டி பயாடிக் ‘ஜெல்’களால் மூடுவார். ஆன்டி – பயாடிக் மருந்துகளும் உள்ளுக்கு கொடுக்கப்படும். பாதிப்புக்கு ஏற்ப, தேவைப்பட்டால், அறுவை சிகிச்சை செய்யப்படும். பயோரியாவால் உண்டாகும் புண்கள் எலும்பை உருக்கி விடும். எலும்பு மீண்டும் வளர மருந்துகள் தரப்படும்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love