வாழ்க்கை வசதிகள் எவ்வளவுக்களவு பெருகிவிட்டதோ, அதே அளவுக்கு பாலியல் குறைபாடுகள் பெருகி வருகின்றன. இது ஒரு அதிர்ச்சியான, ஆச்சரியமான நடைமுறை உண்டை. இந்தியாவில் நீரிழிவு நோயும், இதய வியாதிகளும் முன்னேறி முன் நிலையில் நிற்கின்றன வென்றாலும், ஆண்மை குறைபாடு நோய்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன. முக்கியமாக ஆணுறுப்பு விறைப்பில்லாமல் போதல் முதல் குறைபாடாக ஆகிவிட்டது.
இந்த குறைபாடு 40 வயதுக்கு கீழிருப்பவர்களில் 10 சதவிகிதமும், 40 லிருந்து 60 வயதானவர்களிடையே 40 சதவிகிதமும், 60-70 வயதானவர்களில் 70 சதவிகிதமும், இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆணுறுப்பு விறைப்பின்மைக்கு அடுத்தபடி, விரைவாக விந்து வெளியேறுதல் பெரிய குறைபாடாகிவிட்டது.
சென்னையில் பிரபல பாலியல் நிபுணர்களுக்கு வரும் ஆண்மை குறைபாடுகள் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த 25 வருடங்களில் 1000 மடங்கு பெருகிவிட்டது!
நியாயமாக தற்போதைய வாழ்க்கைத் தரம், செழுமை மற்றும் மேம்பட்ட பாலியல் அறிவு இவற்றால் பாலியல் குறைபாடுகள் குறைந்திருக்க வேண்டும். ஆச்சரியமாக, தொழிலில், வேலையில், அலுவலகத்தில் சிறப்பாக பணி ஆற்றி வெற்றி பெரும் ஆண்களில் பெரும்பாலோர் பாலியல் குறைபாடுகளுடன், டாக்டர்களின் க்ளினிக்குகளில் காத்து நிற்கின்றனர்!
இதற்கு நிபுணர்கள் சொல்லும் காரணங்களில் முதன்மையானது உடலுழைப்பு இல்லாத ‘சொகுசு’ எலக்ட்ரானிக் மயம்! வீட்டின் மின்சார பில்லை கட்டக் கூட நீங்கள் நகர வேண்டாம்! சரீர உழைப்பு இல்லாதது மட்டுமல்ல, உடற்பயிற்சியின்மையும் சேர்ந்துவிடுகிறது. தவிர செய்யும் வேலையே ஸ்ட்ரெஸ் (Stress &- மனஅழுத்தம்) நிறைந்தது. இப்போதைய வேலைகளின் தாரக மந்திரம் & செய் அல்லது செத்துமடி (Do or Die)! ஸ்ட்ரெஸ்ஸூம், டென்ஷனும் இருந்தால் தான் வேலையை சரிவர செய்யமுடியும் என்பது இந்தகால புதுமொழி. பாலியல் பாதிப்புகள் மனோரீதியாகவும் ஏற்படலாம் அல்லது உடல் ரீதியாகவும் ஏற்படலாம்.
இந்த மனோ ரீதியான பாதிப்பு ஆண்களுக்கு சிறிது அதிகமாக இருக்கலாம். “சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை” என்ற கருத்தில் தான் ஆண்கள் அன்றும் இன்றும் வளர்க்கப்படுகின்றனர். பழங்காலத்தில் பாலியல் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அந்த காலத்தில் சினிமா இல்லை. டி.வி. இல்லை. சீரியல்களும் இல்லை! பெரும் பொழுது போக்கு உடலுறவுதான்! தவிர பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்கள். அந்தகால பெண்கள் (பொதுவாக) அச்சம், நாணம் போன்ற குணங்களால் பாலியலைப் பற்றி பேசமாட்டார்கள்! எனவே ஆணுக்கு குறைபாடுகள் இருந்தாலும் அது வெளியே தெரியாது. அதனால் ஆணின் மன நிலை அதிகமாக பாதிக்கப்படவில்லை.
தற்போதைய நிலைமை வேறு. பிரபல தமிழ் நடிகை – ‘ஆச்சி’ மனோரமா, முதலமைச்சரிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தார். அந்த மனுவில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கை திருமணத்திற்குமுன் ஆணும் பெண்ணும் தாங்கள் தாம்பத்ய வாழ்க்கைக்கு தகுதியுடையவர்கள் என்று ‘மெடிகல்’ சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்பது. மிக நியாயமான கோரிக்கை. தற்போதைய பல மண முறிவுகளுக்கு காரணம் உடலுறவில் திருப்தியின்மை. இதை நீரிழிவு, இதய நோய்கள் போல, நாம் பெரிய அளவில் எதிர் கொள்ள வேண்டும். இதற்கு ஆயுர்வேதம் பெருமளவில் உதவும்.
நீரிழிவு, இதய நோய்கள் உண்டாக்கும் பாலியல் பிரச்சனைகள்
நீரிழிவு ஒரு கொடுமையான நோய். நமது நாட்டில் தான் உலகிலேயே அதிக நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். சென்னையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, கீழ்க்கண்டவை தெரியவந்துள்ளன.
நீரிழிவு நோயாளிகளில் 44 சதவிகிதம் பேர் முக்கிய ஆண்மை குறைபாடான ‘விறைப்புத்தன்மை இன்மை’யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 30 வருடங்களில் நீரிழிவு நோய் 6 மடங்காக பெருகியுள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு பாலியல் குறைபாடுகள் வருவதின் முக்கிய
காரணம், குறைந்து போகும் ரத்த ஒட்டம். நீரிழிவு வியாதியுடன் இதய பாதிப்புகளும் இருக்கும் நோயாளிகளுக்கு பாலியல் குறைபாடுகள், குறிப்பாக ‘விறைப்பின்மை’ தோன்றுகின்றன. அதே சமயம் பாலியல் குறைபாடுகள் தலையெடுத்தால், நீரிழிவு + இதயநோய் உள்ளவர்களுக்கு மரணம் கூட ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
விறைப்பின்மை போன்ற பாலியல் குறைபாடுகள் ‘உயிர்கொல்லி’களல்ல. ஆனால் அந்த குறைபாடு ரத்த உறைவை உண்டாக்கி மாரடைப்பு, பக்கவாதம், மூளைதாக்கு போன்றவை நிகழலாம். எனவே பாலியல் குறைபாடுகளை அலட்சியப்பபடுத்த வேண்டாம்.