ஆயுள் வளர்க்கும், ஆரோக்கியம் தரும் உலகின் சிறந்த வேதம் ஆயுர்வேதம்

Spread the love

ஆயுர்வேதத்ததை பொறுத்தவரை மூன்று தோஷங்களும் அதிகரித்தால் அவை, வியாதிகளின் அறிகுறிகளை, அவற்றின் தீவிரத்திற் கேற்ப, வெளிப்படுத்துகின்றன. குறைந்தால் தோஷங்கள் தங்களின் சாதாரண அறிகுறிகளை மறைத்து, குறைத்து விடுகின்றன. சாதாரண, நல்ல நிலையில் இருக்கும் போது, உடலின் இயல்பான செயல்பாடுகள் குறையின்றி நடக்கும்.

சரகசம்ஹிதை

ஆயுர்வேதம் என்ற சொல்லை கேட்கும் போது, கூடவே ‘த்ரிதோஷங்கள்’ என்ற வார்த்தையும் அடிக்கடி காதில் விழும். மூன்று தோஷங்கள் சமநிலையில் இல்லாவிட்டால், வியாதிகள் ஏற்படும் என்பது ஆயுர்வேதத்தின் அடிப்படை கோட்பாடு. உடலின் ஆரோக்கிய சமநிலை, வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களை சார்ந்தே இருக்கிறது என்பது ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம். வியாதிகள், இயற்கைக்கு மாறான உடல், மனபாதிப்புகள் எல்லாமே மூன்று தோஷ சீர்கேட்டினால் உண்டாகும். இந்த 3 தோஷங்கள் தான் மனித உடலை இயக்குகின்றன.

ஆயுர்வேத முறைகளில் பஞ்ச பூதங்களும் 3 வகை நாடிகளும் அடிப்படை கோட்பாடுகள்.

பஞ்ச பூதங்கள்

பூமி & – நிரந்தரமானது. மனித உடலின் திசுக்கள் எலும்புகள், செல்கள் முதலானவை.

நீர் -& அசைவுகளை குறிப்பிடுகிறது. உதிரம், நிணநீர், ஹார்மோன்கள், கழிவுப்பொருள்கள், இவை பூமி சம்மந்தப்பட்டது.

நெருப்பு -& மனித உடலின் சூடு. – இந்த உடல் சூடு உணவை கொழுப்பாக மாற்றுவது.

காற்று &- உடலில் பிராண வாயுவாக கருதப்படுகிறது.

வெளி (ஈதர்) &- நம் உடலில் இருக்கும் வெற்றிடங்கள்.

தவிர மூன்று தோஷங்களும் – (தோஷம் என்றால் குறை) வாதம், பித்தம்,

கபம் – முறையே காற்று, சூரியன் சந்திரன் இவற்றை பிரதிபலிக்கின்றன. வாதம் என்றால் வாயு, பித்தம் என்றால் பித்த நீர் மற்றும் கபம் என்றால் சளி. ஆயுர்வேத சிகிச்சைகள் இந்த தோஷங்களை சமச்சீரான நிலைக்கு கொண்டு வருவதே லட்சியமாக கொண்டுள்ளன. இதர தேச பழங்கால சிகிச்சை முறைகளில் இத்தகைய த்ரி – தோஷ தத்துவங்கள் காணப்படுவதில்லை பழங்கால கிரேக்க வைத்திய முறையில் மட்டுமே 4 வகை நிலைகள் – குருதி, கபம், மஞ்சள் பித்த நீர், கருப்பு பித்த நிறை – குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆயுர்வேதம் மட்டுமின்றி, இந்திய வேதாந்தமே, உலகம் ஐந்து மூலப் பொருட்களால் ஆனது என்ற கருத்தை கொண்டது. இவை பஞ்ச பூதங்கள் (அ) பஞ்சமகா பூதங்கள் எனப்பட்டன. இவை பூமி (ப்ருத்வி), நீர் (அப்பு), அக்னி (தேஜா), காற்று (வாயு) மற்றும் ஆகாயம் (ஈதர்). பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் இந்த பஞ்ச பூதங்களிலிருந்து உருவானவை. பிரபஞ்சத்திற்கும், மனிதருக்கும் உள்ள ஒற்றுமை, அணுக்களின் அமைப்பில் தெரியும். சூரிய மண்டல கிரகங்கள் போல, அணுவில் ஒரு நீயுகிலியசை (கரு &- ழிuநீறீமீus), சுற்றி வரும் கிரகங்கள் போல, ப்ரோட்டான், எலக்ட்ரான் போன்றவை சுற்றி வலம் வந்து கொண்டேயிருக்கின்றன. “அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது” என்கிறார் திருமூலர். இந்த பஞ்ச பூதங்கள் உடலில் 3 தோஷங்களாகவும், 7 தாதுக்களாகவும், 3 மலங்களாக வெளிப்படுகின்றன.

ஆயுர்வேத குரு, சரகர் இந்த தத்துவத்தை “ஏட்டுச் சுரைக்காய்” அல்ல. நிதர்சனமானவை என்கிறார். உடல் முழுவதும் வியாபித்திருந்தாலும், தோஷங்களுக்கென்று தனி உறைவிடம் உடலில் உண்டு. ஒவ்வொரு தோஷத்திற்கும் தனித்தனி குணங்கள் உண்டு. தோஷங்கள் தனியாகவோ, மூன்றும் சேர்ந்தோ, 62 வழிகளில் வியாதிகளை உண்டாக்கும் குணம் படைத்தவை. இந்த தோஷ ஏறு – மாறுகளை ஆயுர்வேத வைத்தியர் சரியாக கண்டுபிடிக்க வேண்டும். வியாதியை கண்டுபிடிப்பதை விட, தோஷ மாறுதல்களை கவனிப்பதே முதல் செயல்.

ஒரு மனிதனின் குணத்தை ரஜாஸ், தமஸ், சத்வம் என்பவை நிர்ணயிக்கும். இந்த முக்குணங்களை தவிர, மூன்று தோஷங்களும் கூட மனநிலையை பாதிக்கும். எனவே தான். ஆயுர்வேதம் உடல் சிகிச்சை அளிக்கும் போது மன சிகிச்சையையும் சேர்த்து செய்கிறது. இந்த 3 தோஷங்களை விரிவாக பார்ப்போம்.

வாதம்

பொது

மூன்று தோஷங்களின் தலைவர் வாதம்,- அதாவது வாயு. வாயு என்றால் அசைவது. உடலின் இயக்கத்தை நடத்துவது வாயு தான். கபத்தையும், பித்தத்தையும் “கன்ட்ரோல்” செய்வதும் வாயு தான்.

வாயுவின் வகை

பிராண &- மூச்சுவிடுதல், உணவை உட்கொள்ளுதல், இதயம், உணர்வு இந்திரங்கள், ரத்த ஓட்டம் இவற்றை பாதுகாப்பது. மணம், நரம்புகள், அறிவு இவற்றை சீராக வைத்தல் உயிர் வாழ தேவை.

உதான &- பேச்சுக்கு தேவை. உடல் வலிமை, மனவலிமை, ஞாபகசக்தி இவற்றை பராமரிப்பது.

சமான &- உணவு ஜீரணிக்க, ஜீரணசாறுகள் சுரக்க. உணவை வாங்கி, ஊட்டச்சத்தையும், கழிவையும் பிரித்து. கழிவை வெளியேற்றுவது.

வியான &- ஊட்டச்சத்தை உடலெங்கும் பரப்புவது. வியர்வை ஏற்படுத்துவது. கண்ணிமை திறந்து, மூட, உடல் நாளங்களை சுத்தம் செய்வது. விந்துவின் செயல்பாட்டுக்கு உதவுவது.

அபான &- கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுவது.

பித்ததோஷம்

பொது

பித்தம் என்றால் ‘உஷ்ணம்’ ஜீரண அக்னியால் உணவை செரிக்க உதவும். பித்தம் ‘தேஜஸ்’ -அக்னியின் பிரதிபலிப்பு. நாளமில்லா சுரப்பிகளை நடத்தும்.

பித்தவகை

பாசக் -& ஜீரணத்திற்கு பொறுப்பானது. மற்ற பித்தங்கள் இயங்க உதவுவது.

ரஞ்சக -& ரத்தத்திற்கு நிறம் சேர்க்கும். ரத்த உற்பத்தியில் உதவும்.

சாதக -& ஞாபகசக்தி, அறிவு செயல்பட உதவும். நரம்பு திசு வளர்சிதை மாற்றத்திற்கு உதவும்.

ஆலோசகா &- பார்வைக்கு உதவும்.

ப்ராஜக &- சர்ம நிறத்திற்கு பொறுப்பு, உடல் உஷ்ணநிலையை பராமரிக்கும்.

கபதோஷம்

பொது 

நிலமும் நீரும் சேர்ந்தது கபம். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு ஊட்டச்சத்து சேர உதவும்

கபத்தின் வகை

அவலம்பகா &- இதயத்தை நுரையீரலை காக்கிறது. சுவாசத்திற்கு உதவும்.

கிலேடகா &- வயிற்றில் உணவு “ஈரமாக” உதவும். அடி, மேல் வயிற்றை அமிலத்திலிருந்து பாதுகாக்கும். அதிக சூடு, குளிர் உணவுகளை உட்கொள்ளும் போது, வயிற்றை காக்கும்.

தர்பாகா &- மூளைக்கு தேவையான சக்தியை பெற உதவும். உஷ்ண மாறுதல்கள். நச்சுப்பொருட்கள் இவற்றிலிருந்து மூளையை பாதுகாக்கும். முதுகுத் தண்டை பாதுகாக்கும்.

போதகா -& வாயை ஈரப்பசையுடன் வைப்பது, ருசியை அறிய உதவும்.

ஸ்லேசகா & – மூட்டுக்கள் விறைப்பாகமல், எண்ணெய்பசையால் பாதுகாக்கும்.

ஆயுர்வேத சாஸ்திரங்கள் தோஷங்கள் அதிகமானாலோ குறைந்தலோ ஏற்படும் பாதிப்புகளை விஸ்தாரமாக விவரித்துள்ளன. எந்ததோஷம் கெட்டிருக்கிறது. என்பதை கண்டுபிடித்து விட்டால், பிறகு சிகிச்சை முறை சுலபமாகிவிடும். குணமும் தெரியும். ஆயுர்வேதத்தில் பக்க விளைவுகள் சிறிதும் இல்லை. ஆயுள் வளர்க்கும், ஆரோக்கியம் தரும் வாழ்வியல்தான் ஆயுர்வேதம். அதுதான் உலகின் சிறந்த வேதம்.

கப தோஷக்காரர்களுக்கு கவலை வேண்டாம் & செகண்ட்

உடலின் உறுப்புக்கள் குழந்தையாக இருக்கும் போது சிறியவையாகவும், வளர, வளர, பெரியதாக மாறும். இதற்கு விதி விலக்கு அடினாய்டும், டான்சில்களும். பிறப்பிலிருந்து 10&-12 வயதுவரை அடினாய்ட் திசுக்கூட்டம் வளர்ந்து உச்ச அளவை அடையும். பிறகு சுருங்க ஆரம்பித்துவிடும். வளரும் போதுதான் அடினாய்ட் பிரச்சனைகளை உண்டாக்கும்.


Spread the love