சர்க்கரைக்கு நாலு மூலிகை

Spread the love

நாவல்

நம் நாடு முழுவதும் வளரும் மரம், பல வகைகள் இருந்தாலும், இரண்டு வகைகள், உருவம், அளவை பொறுத்து, முக்கியமானவை, பெரிய மர பழங்கள் சுவையானவை. பழம் உண்ணவும், கொட்டை, இலைகள், மரப்பட்டைகள் மருந்தாக பயன்படுகின்றன. சிறிய பழங்கள் நீரிழிவு நோய் சிகிச்சைக்கு பயன்படும்.

பிற பெயர்கள்

சமஸ்கிருதம் – ஜம்பு ஆங்கிலம் – ஹிந்தி – ஜாமுன் 

தெலுங்கு – ஜம்புவு கன்னடம் – நெரலு மலையாளம் –

நாவல்

முக்கிய பயன்

நாவல் நீரிழிவு நோய்க்கு கொடுக்கப்படும் சக்தி

வாய்ந்த மருந்து.

பயன்கள்

நீரிழிவிற்கு சிறந்த மருந்து. நாவல்பட்டை, இருமல், பெரும்பாடு, வாய்ப்புண் இவற்றுக்கு மருந்தாகும். வீங்கிய கல்லீரல், மண்ணீரல் (நீரிழிவு நோயால் உண்டாகும்) இவற்றுக்கும் நாவல் பழங்கள் சிகிச்சையாக ஆயுர்வேதத்தில் பயன்பட்டுவந்தன.

சிறப்பு அம்சம்

நாவல் பழம் பிரத்யேகமாக நீரிழிவு நோய்க்கு, சக்தி வாய்ந்த மருந்து. விரைவாக இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. தவிர கணையத்தை சீராக்கி பாதுகாக்கும். நாவல் பழம், பழச்சாறு, பட்டை, விதைகள் எல்லாமே நீரிழிவு நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இதன் விதையில் உள்ள ‘ஜாம்போலின்’, ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டை கட்டுப்படுத்த வல்லது. இதன் விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாறு இரத்தச் சர்க்கரையின் அளவை, கொடுக்கப்பட்ட 4 – 5 மணி நேரங்களுக்கு உள்ளேயே, 35% குறைத்து விட்டது. அதுவும் ஒரே “டோஸில்”. நீரிழிவினால் ஏற்படும் “அடங்காதாகம்“, நாவல் பழ சாறு குடித்தால் தணியும்.

பயன்படுத்தும் முறை

நாவல் பழ விதைகளை உலர வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு கப் பால் அல்லது தண்ணீர் அல்லது தயிருடன் சேர்த்து ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்கவும். நாவல் பட்டையை காய வைத்து உலர்த்தி, எரிக்கவும். கிடைக்கும் சாம்பலை இன்னும் பொடியாக்கி (கல்லுரலில்) ஜல்லடையில் சலித்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். நீரிழிவு நோயாளிகள் இந்த பொடியை காலை வெறும் வயிற்றில் 10 கிராமும் (தண்ணீருடன்), மதியம் 20 கிராமும், இரவு உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து 20 கிராமும் சாப்பிட்டு வர வேண்டும். நெல்லிக்காய் பொடி, உலர்ந்த பாகற்காய் பொடி, இவற்றுடன் நாவல் விதைப் பொடியையும் சேர்த்து தினமும் அல்லது ஒரு நாள் விட்டு உண்பது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பெருமளவு உதவும். புதிய நாவல் பழங்களை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உண்டால் சர்க்கரை அளவு குறையும். அரை கப் நாவல் பழச்சாற்றுடன், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி சாறு கலந்து உட்கொண்டு வந்தால், சிறுநீர் பிரச்சனைகள், சிறுநீர் போகையில் ஏற்படும் எரிச்சல் இவை சமனமாகும். நாவல் பழச்சாற்றுடன் சீரகத்தை சேர்த்து குடித்தால் ஜுரண சக்தி அதிகமாகும்.

பாகல்

Mimordica Charantia பாகற்காயின் தாயகம் இந்தியா. கொடி வகையை சேர்ந்தது. பல வகைகள் இருந்தாலும், 2 வகைகள் -குட்டை, நீண்டது – முக்கியமானவை.

பிற பெயர்கள்

சமஸ்கிருதம் – கரவெலா ஆங்கிலம் – Bit ter gourd, ஹிந்தி – கரேலா தெலுங்கு – காக்கெரா கன்னடம் – ஹாகலகாயி மலையாளம் – பாவல்

முக்கிய பயன்

நீரிழிவுக்கு எதிரான முக்கிய மருந்து.

பயன்கள்

மூலநோய், கல்லீரல் பாதிப்புகள், மூட்டுவியாதி, இவற்றுக்கு மருந்து, உணவில் பயன்படும்.

சிறப்பு அம்சம்

இங்கிலாந்து நாட்டில் நடத்திய சோதனையில் பாகற்காயில் இன்சுலின் போன்ற வேதிப் பொருள் (Plant Insulin) இருப்பது கண்டறியப்பட்டது. பாகற்காய் இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட புரதம் – பி. இன்சுலீன் – ஆங்கில மருந்து டோல்புடாமைட் (Tolbutamide) இனணயானது. ஆய்வுகளின்படி டைப் – 1 டயாபடீஸில் கூட, பாகற்காய் சாறு, இன்சுலீன் போல் வேலை செய்கிறது. இதன் தாவர இன்சுலீன் கணையத்தை புதுப்பிக்கிறது. இன்சுலீனை உற்பத்தி செய்யும் பீடா செல்களை குணப்படுத்தி உயிர்ப்பிக்கிறது. நமது உடல், கார்போ – ஹைடிரேட் கிடைக்காத போது, அமினோ அமிலங்களிலிருந்து  (கொழுப்பு அமிலங்கள்) குளுக்கோஸை, கல்லீரல், சிறுநீரகங்களிலிருந்து எடுத்துக் கொள்ளும் இதை “குளுக்கோனியோஜெனிசஸ் (Gluconeogenesis) என்பார்கள். பாகற்காயில் உள்ள “சாரன்டின்” (Charantin) என்ற பொருள் இந்த குளுக்கோனியே ஜெனிசஸ்ஸை தடுக்கிறது. வயிற்றிலிருந்து குளூக்கோஸை எடுப்பதையும் குறைக்கிறது.

பயன்படுத்தும் முறை

தினமும் 4 – 5 பாகற்காயால் செய்யப்பட்ட சாறை வெறும் வயிற்றில் அருந்தி வர, சர்க்கரையின் அளவு கட்டுப்படும். துண்டுகளாக்கி நீரில் கொதிக்க வைத்து அந்த நீரையும் குடிக்கலாம். பாகல் சாற்றை 30 – 40 மி.லி. அளவில் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் 30 – 40 மி.லி. பாகற்சாற்றை எடுத்துக் கொள்ளலாம்.        அடிக்கடி பாகற்காய் உணவில் சேர்த்துக் கொள்ளவும். பாகற்காய் விதைகளை பொடி செய்து உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

நெல்லி

Emblica Officinals (Phyllanthus embilica)

இந்தியா, சீனா, வியட்நாம் நாடுகளில் காணப்படும். தொன்று தொட்டு உபயோகித்து வரப்படும் நெல்லி அமிர்தம் எனப்படுகிறது.

பிற பெயர்கள்

சமஸ்கிருதம் – அமலக்கா ஆங்கிலம் -Indian goose – berryஹிந்தி – அம்லா தெலுங்கு – அமலக்காமு, கன்னடம் – அமலக்கா மலையாளம் – நெல்லி

முக்கிய பயன்

நீரிழிவு வியாதிக்கு நிரூபிக்கப்பட்ட மருந்து.

பயன்கள்

வைட்டமின் ‘சி’ செறிந்து இருப்பதால், டயாபடீஸ் மட்டுமில்லாமல், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதயத்தை காக்க, மூட்டுவலி குறைய, கண்களை பாதுகாக்க, மொத்தத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

சிறப்பு அம்சம்

நெல்லிக்காயின் அபரிமிதமாக அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் சி) மற்ற செயற்கை விட்டமின் ‘சி’ யை விட சுலபமாக, சீக்கிரமாக உடலில் ஏற்றுக்கொள்ளப்படும். 10 கிராம் நெல்லிக்காயின் 600 – 900 மி.கி. விட்டமின் சி உள்ளது. நெல்லி டயாபடீஸால் ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்கிறது. கணையத்தை தூண்டி, இன்சுலின் சுரக்க உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியமான மருந்து. மூன்றே நாளில் ரத்தத்திலுள்ள கிருமிகளை கொல்லும் செல்களை இரண்டு மடங்காக்கும். கொலஸ்ட்ராலை குறைப்பதால் இதயத்திற்கு நல்லது. நெல்லிக்கனியின் விதையும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து நெல்லி முதுமையை தடுக்கும் டானிக் நெல்லி காயை வேகவைத்தாலும், வதக்கினாலும், உலரவைத்தாலும், ஊறுகாயாக போட்டாலும் அதிலிலுள்ள விட்டமின் ‘சி’ அழிவதில்லை.

பயன்படுத்தும் முறை

நெல்லிக்காய் சாற்றை ஒரு மேஜைக் கரண்டி எடுத்து, ஒரு கப் பாகற்காய் சாற்றுடன் 2 மாதம் குடித்து வர சர்க்கரை வியாதி கட்டுப்படும். இந்த வியாதியினால் வரும் கண் கோளாறுகள் தடுக்கப்படும். நெல்லிக்காய் பொடி, நாவல் பழம், பாகற்காய் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து சாப்பிட, நீரிழிவு நோய் கட்டுப்படும்.

நெல்லிக்காய் சாற்றுடன் மஞ்சள் பொடி சேர்த்து உட்கொள்வது சர்க்கரை வியாதிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் எளிமையான மருந்து அளவுகள் 15 மி.லி. நெல்லிக்காய்சாறு, அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடி. நெல்லியின் விதைகளின் பொடியின் கஷாயம், சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் நெல்லிக்காயை துவையல் செய்து சாப்பிடலாம் நெல்லிக்கனியை தின்று வந்தாலோ அல்லது நெல்லி விதைகளை நீரில் ஊறவைத்து, அந்நீரை குடித்து வந்தாலோ நீரிழிவு நோய் குறையும்.

வில்வம்

கிமீரீறீமீ விணீக்ஷீனீமீறீஷீs சிவபெருமானுக்கு உகந்த மரம் வில்வம். பெரிய மரமாக வளரும். காய்கள் பச்சை நிறமாக, பழுத்ததும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். பழம் உருண்டு, திரண்டு 5 லிருந்து 15 செ.மீ. பருமனிருக்கும். உள்ளே மஞ்சள் சிகப்பு நிற “கோது” இருக்கும். பழங்கள் நல்ல நறுமணத்துடன் சுவையாக இருக்கும். யஜுர் வேதத்தில் வில்வம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முக்கிய பயன்

நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம்.

பயன்கள்

வில்வம் மரம் முற்றிலும் பயன்படும் ஓர் மருத்துவ மரம். இதன் பலன்களை விவரிக்கிறது, சரகஸம்ஹிதை, கபவாதங்கள், வயிற்றுவலி, கண் சம்பந்த கோளாறுகள், பெண்களின் பெரும்பாடு நோய், மலக்கட்டு, மூலநோய் ஆஸ்துமா போன்றவற்றுக்கு வில்வம் நல்லது.

சிறப்பு அம்சம்

வில்வ இலையிலிருந்து எடுக்கப்பட்ட பொருள் நீரிழிவை போக்கும் தன்மையை பரிசோதிக்க ஓர் ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டது. Pyrimidine என்ற நைட்ரஜன் சேர்ந்த பொருளிலிருந்து Alloxan என்ற வேதிப் பொருள் எடுக்கப்படுகிறது. இது கணையத்தை (Pancreas) பாதித்து நீரிழிவை உண்டாக்கும் குணமுடையது. இந்த Alloxan இன்சுலின் உற்பத்தியை நிறுத்தும். எலிகளுக்கு இந்த Alloxanகொடுக்கப்பட்டு நீரிழிவு நோயை உண்டாக்கப்பட்டது. ஒரு பிரிவுக்கு இன்சுலின் ஊசிகளும் மற்ற பிரிவுக்கு வில்வ இலையின் சாறும் (வாய் வழியாக) கொடுக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சியின் படி, வில்வ இலைச்சாறு கல்லீரலின் Glycogen ஐ குறைத்து சாதாரண நிலைக்கு கொண்டு வந்தது. ரத்தத்தில் யூரியா, ஸீரம் கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைத்தது. இன்சுலின் கொடுக்கப்பட்ட எலிகள் அடைந்த நிவாரணங்களும், வில்வ இலைச் சாற்றினால் அடைந்த நிவாரணங்களும் ஒரே மாதிரி இருந்தன. இதனால் Insulin சிகிச்சைக்கு ஒப்பாக வில்வ இலை சாற்றின் வேலைப்பாடு அமைகிறது.

பயன்படுத்தும் முறை

வில்வ இலை சாற்றுடன், சிறிதளவு கருமிளகு பொடி சேர்த்து தினமும் உட்கொள்ள, இரத்த சர்க்கரை குறையும். இரண்டு கொழுந்து வில்வம் மற்றும் துளசி இலைகளை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இரத்த சர்க்கரை குறையும். இது பழங்காலத்திலிருந்தே வழக்கமான சிகிச்சை.


Spread the love
error: Content is protected !!