ஆயுர்வேத அசத்தல் உணவுகள்

Spread the love

உலகத்தில் கோடான கோடி மக்கள் வாழ்கின்றனர். அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதாவது, ஒவ்வொருவரின் உடலமைப்பு, இதயம், மூளை முதலியவற்றின் இயல்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உள்ளன. அந்த மாற்றத்தின் காரணமாக தான் மனிதனுக்கு நோய் ஏற்படுகிறது.

இயல்பு நிலை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். இதை வைத்து தான் ஆயுர்வேதம் மனிதர்களை வகைப்படுத்துகின்றது.

நாம் உண்ணும் அனைத்து உணவு பொருட்களிலும் ஆயுர்வேதம்  அடங்கியுள்ளது. ஒவ்வொரு பொருட்களும் நம் உடலில் உள்ள ஒவ்வொரு நோயையும் குறைக்கிறது.

ஆயுர்வேதத்தில் எந்தெந்த உணவு  பொருட்கள், எந்தெந்த நோயை குறைக்கின்றது என்பதை நாம் பார்ப்போம்.

ஆயுர்வேத பொருட்கள்

ஆயுர்வேதத்தில் எந்தெந்த பொருட்கள் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை பற்றி வாங்க பார்போம்…

பாலும் நெய்யும்  பளுப்படுத்தும்

மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவ கூடிய சக்தி நெய்க்கு உள்ளது. அதனால் தான் இத்தகைய மருத்துவ தாயாரிப்பில் நெய் பயன் படுத்தப்படுகிறது. மருந்துகள் கெடாமல் இருக்க நெய்யே சிறந்த பொருளாகும். இதனால் தான் நெய்யை இரசாயனம் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

நெய் நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை நெய் இல்லாமல் எவ்வித உணவும் பரிந்துரைக்கப்படுவதில்லை. நெய்யில் அதிக  அளவுக்கு மருத்துவ குணங்கள் உள்ளதால், உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

·           உணவு விடுதிகளில் சென்று  செரிமானம் ஆகாத உணவுகளை  உண்டு வீட்டிற்க்கு வரும் போது வயிறு மந்தமாக இருக்கும், அப்போது ஒரு டம்ளர்   பாலில் நெய்யை கலந்து குடித்தால், சீக்கிரம் செரிமானமாகிவிடும்.

·           நீண்ட நாட்ளாக மூட்டு வலியா?  இனி கவலை வேண்டாம். தினமும் ஒரு டம்ளர் பாலுடன் சிறிது நெய்யை கலந்து குடித்து வருவதன் மூலம் மூட்டு வலி படிப்படியாக குறைய தொடங்கும்.

·           இரவில் உடல் வலி, தூக்கமின்மை போன்றவற்றால் தவிக்கிறீர்களா? அப்படி என்றால் இன்று முதல் படுக்கசெல்வதற்கு முன்  ஒரு டம்ளர் பாலுடன் சிறிது நெய்யை கலந்து குடித்து விட்டு உறங்கி வாருங்கள். நிம்மதியான உறக்கம் வரும்.

குறிப்பு : சுத்தமான பால் மற்றும் நெய்யை பயன்படுத்தினால் மட்டுமே மேற்கூறிய அனைத்து பலன்களையும் பெற முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்பத்தை தரும் இஞ்சி

·           இஞ்சியை சாப்பிட்டு வருவதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்க முடிகிறது.

·           நுரையீரல் நோயை கூட சரிசெய்ய இஞ்சி உதவுகிறது.

·           வீக்கம் மற்றும் மார்பு சளியினையும் அது குறைக்கிறது.

·           தினமும் சிற்றுண்டியில் இஞ்சியை சேர்த்து கொள்வதன் மூலம் வயிற்றில் ஏற்பட்டுள்ள நோய்களை குறைக்க உதவுகிறது.

இஞ்சி சட்டினி

தேவையான பொருட்கள்

இஞ்சி                    –       25 கிராம்

புளி                      –      எலுமிச்சை பழஅளவு (ஊறவைத்தது)

வெல்லம்                 –       சிறிய துண்டு

சாம்பார்  பொடி           –       தேவையான அளவு 

எண்ணெய்                –      தேவையான அளவு 

சீரகம்                    –      தேவையான அளவு 

கறிவேப்பிலை            –       தேவையான அளவு 

பெருங்காய தூள்          –       தேவையான அளவு 

உப்பு                        தேவையான அளவு 

செய்முறை

முதலில் இஞ்சியை மிக்சியில் இட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். ஊறவைத்த புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்  பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காய தூள் ஆகியவற்றை தாளித்த பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை சேர்க்கவும். பின் லு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து இதனுடன் புளி கரைசல், உப்பு, வெல்லம், சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து இறக்கினால் சத்துள்ள சட்டினி ரெடி.

நாம் செய்யும் தேங்காய் சட்னியில் மிளகாயுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் தேங்காயில் உள்ள கொழுப்பு உடலில் சேராது, எளிதில் ஜீரணம் ஆகும்.

மகத்தான மஞ்சள் 

·           காலையில் குளிக்கும் போது சிறிது மஞ்சளை சருமத்தில் பூசி குளித்து வந்தால் சருமத்தில் ஏற்படும் நோய்கள் நம்மை தாக்காது.

·           காயம் ஏற்பட்ட இடத்தில் சிறிது மஞ்சளை பூசி வந்தால், காயம் மற்றும் அதன் மூலம் ஏற்படும் வலியும் குணமாகும்.

·           சிறிதளவு மஞ்சள் மற்றும் மிளகை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலின் எடை குறையும்.

·           மஞ்சள் சேர்த்த உணவை அதிகம் சேர்த்து கொள்வதன் மூலம் மன அழுத்தம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

திகட்டாத முட்டை

·           தினம் ஒரு முட்டை சாப்பிட்டு வருவதன் மூலம், நம் உடலுக்கு தேவையான வைட்டமின் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி உடலை கட்டுக்கோப்புடன் வைக்கவும் இது உதவுகிறது.

·           தினம் ஒரு முட்டையை சாப்பிடுவதால் சருமம் ஜொலிக்கும் மற்றும் கூந்தல் அடர்த்தியாக வளர தொடங்கும்.

·           தினம் ஒரு முட்டை சாப்பிட்டு வருவதன் மூலம் கண் பார்வை நன்றாக தெரிகிறது. நம் கண்ணில் உள்ள குறைபாடுகளை களைய முட்டை உதவுகிறது.

குறிப்பு :  சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.

கீ.பி


Spread the love
error: Content is protected !!