ஆயுர்வேதம்

Spread the love

உடல் நாளங்கள் ஆயுர்வேதத்தில் ‘ஸ்ரோதாஸ்’ எனப்படுகின்றன. இவை ரத்தம், உயிர்ச்சத்துக்கள் இவற்றை உடலெங்கும் கொண்டு செல்லும். இந்த நாளங்கள் வழவழப்பாக இருந்தால் கொண்டு செல்லும் பொருட்களுக்கு சுலபமாக இருக்கும். ஆனால் ஜீரணக் கோளாறுகளால் உடலில் நச்சுப் பொருட்கள் தேங்கிவிட்டால், ஸ்ரோதாக்கள் பாதிக்கப்படும். ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் மூலிகைகள்.

 1. குக்குலு (Commiphora Mukul) – இந்த மரத்திலிருந்து கிடைக்கும் மரப்பிசின் சிறந்த மருந்தாகும். உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, HDL கொஸ்ட்ராலை அதிகரிக்கும்.
 2. அல்ஃபால்ஃபா விதைகள் (Alfalfa seeds) – இதில் உள்ள சாபோனின் (Saponins) என்ற பொருள் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கும். இதில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் கொலஸ்ட்ராலை தேங்க விடாமல் பாதுகாக்கிறது.
 3. வெந்தயம் – இதில் உள்ள அல்கலாயிடுகள் (Alkaloids), லைசின் (Lysine) மற்றும் எல்.டிரிப்டோபான் (L – Tryptophan) கல்லீரலின் கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைக்கின்றன. ஆனால் “நல்ல” கொலஸ்ட்ரால் HDL ஐ குறைப்பதில்லை. 5 லிருந்து 30 மி.கி. வரை தினசரி 3 வேளை சேர்த்துக் கொள்ளலாம்.
 4. சணல் விதைகள் (Flax seeds) – இதில் உள்ள லினோலிக் அமிலம், ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள்,கொலஸ்ட்ராலையும் உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கின்றன. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது பயனளிக்கும்.
 5. மருது (Terminalia Arjuna) – இதில் உள்ள அர்ஜுனா மற்றும் எல்லாஜிக் அமிலங்கள்,ரத்தத்தில் கொழுப்பு கிரகிக்கப்படுவதை குறைக்கின்றன. எனவே கொலஸ்ட்ராலை குறைக்கும் திறனுடைய மூலிகை.
 6. குடூச்சி (சீந்தில் – Tinospora Cordifolia) கொழுப்பை ஜீரணிக்கும் ‘மேத தாது அக்னியை’ தூண்டும்.
 7. மஞ்சிஷ்டா (Rubia Cordifolia) ரத்தத்தை சுத்திகரிக்கும்.
 8. முக்கரட்டை கீரை (Boerrhavia diffusa) கல்லீரலின் வளர் சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு உதவி, கொலஸ்ட்ரால் கொழுப்புகளை சீராக ஜீரணமாக செய்கின்றன.
 9. திரிகாடு, திரிபாலா சூரணங்களும் கொழுப்பை ஜீரணிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன.
 10. இசப்கோல் (Plantago ovata) தினமும் 10 கிராம் இசப்கோலை உணவில் சேர்த்து சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
 11. பூண்டு – ஒரு பல் பூண்டை தினமும் காலையில் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் சீரான அளவில் இருக்கும்.
 12. தக்காளி: தினமும் ஒரு தக்காளி கொலஸ்ட்ராலை குறைக்கும்

Spread the love