ஆயுர்வேதம் பஸ்மம் மற்றும் தாதுக்கள்

Spread the love

பஸ்மம் என்பது பொருள்கள் விராட்டியுடன் எரியவிட்டு எடுக்கப்படும் பொடிதான். இது நீண்ட நாள்கள் இருக்கும்.

அபிரேக பஸ்மம் Abiraka Bhasma

இதை மைக்காவென்றும் கூறலாம். சாப்பிட்டால் இளமையுடன் கூடிய புத்துணர்ச்சியிருக்கும். விந்துக்களின் அளவை அதிகரிக்கும். 65&250 மில்லிகிராம் எடுத்து தேன் அல்லது பாலுடன் / தண்ணீருடன் சேர்த்து சாப்பிடவும். உற்சாகத்தைத் தோற்றுவிக்கும்.

ஹீராபஸ்மம் (HEERA BHASMA)

ஹீராபஸ்மம் ஆண்மைக் குறைவை, செக்ஸ் சம்பந்தமான உபாதைகளை போக்கும். விரைப்புத்தன்மையில்லாதவர்களுக்கு விரைப்பைத் தரும். விரைவில் விந்து வெளியேறுவதை நிவர்த்திக்கும். 50&100 மில்லிகிராம் பொடியை பால் அல்லது வெண்ணையை அல்லது வெறும் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

ராஜடா பஸ்மா / ரூப்ய பஸ்மம் (RAJATABHASMA OR ROUPA BHASMA)

நன்றாக சுத்தப்படுத்தப்பட்ட வெள்ளியில் தயாரிக்கப்படுகிறது. நல்ல தூக்கத்தை, மன அமைதியை தரவல்லது. தோலை மினுமினுக்க வைக்கும். செக்ஸில் நன்றாக செயல்பட முடியும். ஆண்மைக் குறைவைப் போக்கும் பெண்களின் மாதவிடாய் உபாதைகள் நீக்கும்.

மோதி பஸ்பம் (MOTI BHASMA) முத்துப்பஸ்மம் :

மோதி பஸ்பம் விந்துவின் உயிரணுக்களை நன்கு உற்பத்தி செய்து அவைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும். செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். 125&250 மில்லிகிராம் எடுத்து பால் அல்லது தேன் அல்லது குல்கந்துவுடன் சேர்த்து தினசரி இரண்டு தடவை சாப்பிடவும்.

மகார்த்வாஜ் (MAKARDA WAJ)

சுத்தம் செய்த மெர்குரி, சல்பர், தங்கம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்பட்ட பஸ்மம் மகார்த் வாஜ். செக்ஸ் குறைகளை நீக்கி நன்கு உடலுறவில் செயல்பட உதவும். 60&120 மி.கி. பொடியை பாலில் சேர்த்து அன்றாடம் இரண்டு தடவை சாப்பிட வேண்டும்.

பிராவல் பஸ்மம் (PRAVEL BHASMA)

125&500 மில்லி கிராமம், பால் சேர்த்து தினசரி இரண்டு முறை சாப்பிட்டால் விரைவில் விந்து வெளியாவது நிற்கும்.

ஸ்வர்ண பஸ்மம் (SWARNA BHASMA)

தங்க பஸ்பம் யெனப்படும் ஸ்வர்ணபஸ்மம் புத்திக் கூர்மையை, ஞாபகச் சக்தியை, குரல்வளத்தை மேம்படுத்தும். உடலுறவில் நன்கு செயல்பட உதவும். விந்துவின் வீரியத்தை அதிகப்படுத்தும். 15&60 மி.கி. எடுத்து தேன் அல்லது கிரீமுடன் (சிஸிணிகிவி) கலந்து சாப்பிடவும்.

ஷிலாஜித் (SHILAJIT)

ஷிலாஜித் தார்போல் இருக்கும். இமயமலைப் பாறைகளில் கிடைக்கிறது.சிறுநீர்க் குழாய் வியாதிகளை நீக்கும். செக்ஸ் சம்பந்தப்பட்ட குறைகளை நீக்கும். 250 மி.கி. தினசரி இரண்டு தடவை சாப்பிடுக.

குக்ருத தாண்டவ பஸ்மம் (KUKURUTHANTAVABHASMA)

முட்டையிலுள்ள மேல் ஓட்டில் செய்யப்பட்ட பஸ்மமாகும். ஆண் விந்துகுறைகள், பெண்களின் மாதவிடாய் குறைகளை நீக்கும்.  250&375 மி.கி. பொடியை பாலில்அல்லது நீரில் கலந்து சாப்பிடவும்.

வங்க பஸ்மம் (VANGA BHASMA, TIN BHASMA)

வங்க பஸ்மம் சிறுநீர், பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட, மாதவிடாய் குறைகளைப் போக்கும். விரைவில் விந்து வெளியாவதை தடுக்கும்.இரத்த ஓட்டத்தை அதிகமாக்கி, பிறப்புறுப்புக்களுக்குவலு சேர்க்கும். 125&250 மில்லி கிராம் எடுத்துதேன் அல்லது வெண்ணை சேர்த்து சாப்பிட வேண்டும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!