பொதுவாக நம் மனமும், உடலும் ஆரோக்கியமாக இருந்தால் எவ்வித நோய்களும் நம்மைத் தாக்காது. உடல் நலமாகயிருக்க, நல்ல உணவு தேவை. நல்ல உணவு என்றால் சத்தான பதார்த்தங்களை நம் உணவில் சேர வேண்டும். அவ்வித உணவு நம் உடம்பில் நன்கு ஜீரணமாகி, இரத்தத்தில் சத்துக்கள் சேர வேண்டும். மேற்கொண்டு நாம் எப்பொழுது, எந்த நேரத்தில் எப்படிச் சாப்பிடுகிறோமென்பதும் மிக முக்கியம்.
இதைப் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது? நம் உடம்பிலுள்ள தோஷத்திற்கு தகுந்தவாறு நமது உணவு சமைக்கப்பட வேண்டும். சரிவிகித உணவு நம்மை போஷாக்கு உள்ளவராகச் செய்யும். நம் உடலுக்குத் தேவையானவற்றை தந்து உடம்பை வலுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், ஜீரணம் நன்கு ஆகும். தேவையில்லாத கழிவை வெளியேற்றும். ஆயுர்வேத நூல்கள் மேலும் சொல்வதாவது, பருவ காலத்திற்கு ஏற்ற உணவை உட்கொண்டால், பருவக் காலத்தில் வரக்கூடிய நோய்கள் நம்மைத் தாக்காது. பருவத்துக்கேற்ற உணவு பருவக் காலத்திற்குத் தகுந்தபடி நம் உடம்பை மாற்றி வைக்கும். சூடான மசாலா பண்டங்கள் (spices) அதிக தானியங்கள், குளிர் காலத்தில் உணவில் சேர வேண்டும். கோடை காலத்தில் உணவு எளிமையாக இருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் கலந்த சேலட், மிகவும் நல்லது.
ஆயுர்வேத முறைப்படி எவ்வாறு உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது?
தற்சமயம் என்ன மாதிரி உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதை பட்டியலிடவும். செயற்கையாக நிறங்கள் சேர்க்கப்பட்ட பண்டங்கள், கெட்டுப் போகாமலிருக்க சேர்க்கப்படும் ரசயானப் பொருள்கள், மற்றுமுள்ள சாதாரண வேதிப் பொருட்கள் மிகவும் குறைந்த அளவில் சேர்க்கப்பட வேண்டும். டின்னில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, உறையவைக்கப்பட்ட, புளிக்க வைக்கப்பட்டுள்ள உணவுகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், அவர்களைத் தவிர்த்துவிட்டு, சுடச்சுட சமைக்கப்பட்ட உணவை மட்டும் சாப்பிடவும்.
உங்கள் உணர்ச்சிகளை, உடல்பாங்கை வைத்து, உங்களுக்கு என்ன மாதிரி தோஷம் உள்ளது என்று தெரிந்து கொள்ளவும். தோஷங்களை வைத்துத்தான் உங்களுக்கு என்ன மாதிரி உணவு தேவை. வாழ்க்கை முறை (life style) பற்றி தீர்மானிக்க முடியும். உங்கள் உடம்பு ஒல்லியாக உள்ளதா? உடம்பு நீண்டு உள்ளதா? நன்றாக நடமாடிக் கொண்டிருக்கிறீர்களா? சிரித்துப் பேசிக் கொண்டு இருக்க விருப்பமா? அப்படியென்றால் உங்கள் உடம்புவாகு வாத தோஷமானது (VATA DOSHA) உங்களுக்கு தேவை வெதுவெதுப்பான, பசையான உணவுகள் நெய், எண்ணை, இஞ்சி, பூண்டு, முட்டை உங்கள் உணவில் சேர வேண்டும்.
மிகவும் ஆழ்ந்து செயல்படுபவர்கள், புத்திசாலியாக இருப்பவர்கள், ஒரு லட்சியத்துடன் இருப்பவர்கள், உடலில் ஒரு துடிப்பு உள்ளவர்கள் மித்த தோஷமுள்ளவர்கள். இவர்கள் குளிர்ச்சி மிக்க பதார்த்தங்களை சாப்பிட வேண்டும். தேங்காய், நிறைய திரவ பொருட்கள், பச்சைக் காய்கறிகள் கலந்த சாலட், கீரைகள், பழங்கள் போன்றவை பித்தத்தின் வேகத்தைத் தணிக்கும். கபதோஷமுள்ளவர்கள் சோம்பேறித்தனமுள்ளவர்களாக இருப்பர். பொதுவாக மிகவும் உடல் பருமனுள்ளவர்களாக இருப்பர். மிகவும் அமைதியாகவும், பொறுமையுடன் காணப்படுவர். அவர்களுக்குத் தேவையானது, கொஞ்சம் சூடான, உலர்ந்த உணவுகள், பேசன் (Besan) ஹாட் ஸ்பைசஸ், கிராம்பு, மிளகு, இஞ்சி, எலுமிச்சை, பூண்டு, சட்னி, டீ போன்றவை. நல்ல ஆரோக்யமான உடல் வேண்டுமென்றால் சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணமாக வேண்டும். அதன் சத்து இரத்தத்தில் கலக்க வேண்டும். இங்குதான் சாப்பாட்டின் நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பசித்துப் புசியென்ற முதுமொழியை நாம் பின்பற்ற வேண்டும். இயற்கையின் கால மாறுதல்களை ஒட்டி சாப்பிடவும். உதாரணமாக இரவில், பின்னிரவில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். மதியத்தில் அதிகமாக இருக்கும் சூரிய அஸ்தமனம் சமயத்தில் கூட நல்லசெரிமானம் இருக்கும். ஆகவே சீக்கிரம் இரவுச் சாப்பாட்டை முடிக்கவும். அலுமினியம் பாத்திரங்கள் எறிந்து விடுங்கள். பித்தளை, இரும்பு பாத்திரங்களில் சமைக்க ஆரம்பியுங்கள்.
பசியைத் தூண்டுமளவு கிராம்பு, மிளகு, இஞ்சி போன்றவற்றை சேர்க்கவும். அதிகம் வேண்டாம். உணவின் ஆரம்பத்தில் இனிப்பு சாப்பிடவும். பின்பு புளிப்பு, நடுவில் உப்பு கசப்பு கலந்த சாலட் சாப்பிடுங்கள். இதனால் பசியும் எடுக்கும். உண்ட உணவும் செரிக்கும்.
மேலும் தெரிந்து கொள்ள…