பெண்களின் பிரச்னைகளுக்கு ஆயுர்வேதத்தில் அற்புத தீர்வு

Spread the love

பெண்களின் கருப்பை எல்லோருக்கும் ஒரே அளவில் இருப்பதில்லை. பெண்ணிற்கு பெண் சிறிய அளவில், உருவில் மாறுபடும். கருப்பையின் சுவர் கெட்டியானது. கார்பஸ் என்ற உடலையும், செர்விக்ஸ் என்ற குறுகிய கழுத்தும் உடையது. இந்த கார்பஸ், பெண்கள் கர்ப்பமடையும் போது, குழந்தை கருவை ஏற்று கொள்ளும் அளவு பெரிதாக விரியும் தன்மை உடையது.

கருப்பையின் உட்சுவர் மூன்று உட்படைகள் கொண்டது. அவை

                                பெரிடோனியம் (பெரிமெட்ரியம்)

                                மையோமெட்ரியம்

                                என்டோ மெட்ரியம்

herbal bath powder

என்டோ மெட்ரியம் ‘வெல்வெட்’ துணி போல் முடிக்கால்கள் உடையது. மாதந்தோறும் கருப்பையின் உட்சுவர் படலங்கள் ரத்தத்தால் கெட்டியாகி, கருத்தரிக்க தயாரான நிலையில் இருக்கும். கருத்தரிக்காவிட்டால், இந்த ரத்தம் வெளியேறிவிடும். இது தான் பெண்ணின் மாதாந்திர மாதவிடாய்.

கருப்பையின் உட்சுவரில் இருக்க வேண்டிய என்டோமெட்ரியம், அங்கில்லாமல் வேறு இடங்களில் தென்பட்டால், அது வலி நிறைந்த ‘என்டோமெட்ரியோசிஸ்’ எனப்படும் கோளாறு. இது புற்றுநோயில்லாமல் கருப்பையின் என்டோமெட்ரியம் திசு கருப்பையில் இல்லாமல், அதன் வெளியில் ஓவரி (கருவகம்), கருக்குழாய் (ஃபாலோப்பியன் டூயூப்), மூத்திரப்பை அல்லது பெருங்குடலின் பகுதி ஒட்டிக் கொண்டிருந்தால் பல வேதனைகளை உண்டாக்கும்.

என்டோமெட்ரியாஸின் அறிகுறிகள்

அடிவயிறு, இடுப்பு எலும்புக்கூடு, இவற்றில் வலி.

மாதவிடாயின் போது அதிக உதிரபோக்கு.

மாதவிடாய் முன்பும் பின்பும் வலி.

உடலுறவின் போது வலி.

மலம், சிறுநீர் கழிக்கும் போது வலி.

வயிறு உப்புசம்

என்டோமெட்ரிக் திசு ஓவரியில் ஒட்டிக் கொண்டிருந்தால் ஒரு ரத்தக் கட்டியை உருவாக்கும். இது திடீரென்று உடைந்து வயிற்றில் தீவிர வலியை உண்டாக்கும்.

குழந்தை பிறக்காமல் போதல்.

களைப்பு, மயக்கம், தலைசுற்றல்.

பேதி அல்லது மலச்சிக்கல்.

சில பெண்மணிகளுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. சிலருக்கு இந்த கோளாறு குறைந்த அளவு இருந்தால் கூட தாங்கமுடியாத வலி உண்டாகும். சிலருக்கு மனச்சோர்வு வரும்.

காரணங்கள்

சரியான காரணங்கள் தெரியவில்லை. பரம்பரையாக வரலாம். மாதவிடாயின் போது கருப்பை சுவரின் உட்படை (படலம் – லிவீஸீவீஸீரீ) துண்டுகள் உடலிலிருந்து வெளியேறாமல், பின்நோக்கி கருக்குழாய்கள் மூலம் ஓவரிக்கு, சென்று விடலாம். இதன் விளைவாக மாதவிடாய் ரத்தம் வேறு இடங்களுக்கு சென்று அங்கு திசுக்கள் / செல்கள் வளரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும் காரணமாகலாம்.

சிகிச்சை

ஹார்மோன் சிகிச்சை பலனளிக்கும். அறுவை சிகிச்சை – லாப்ரோஸ் கோப்பி – மூலம் மேற்கொள்ளப்படுகிறது. என்டோமெட்ரியோசிஸ் திரும்ப, திரும்ப வரும் வியாதி.

ஆயுர்வேதம் சொல்லும் காரணங்கள்

வாத குறைபாடுகள்

உணவு குறைபாடுகள் – போதிய சத்துணவை உட்கொள்ளாததால்

ஜீரணக் கோளாறுகள்

உடல், மன அழுத்தம், சோர்வு

உடலில் நச்சுப் பொருட்கள் தேங்குவது

நரம்பு பாதிப்புகள்

ஆயுர்வேத சிகிச்சை

வலியை குறைக்க பேதி மருந்துகள் – திரிபாலா, விளக்கெண்ணை போன்றவைகள் உபயோகிக்கப்படும். வஸ்தி (எனிமா), பிச்சு தாரணம் போன்றவை வலியை குறைக்கும். பெருங்காயம், இஞ்சி, கற்பூரம், தசமூலம், போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ரஸாயனம், கர்ப்பாசய பால்யா (கருப்பையை பலப்படுத்த) வருஷ்யா (குழந்தை இல்லா குறைபாட்டை போக்க ஆண்மை, பெண்மை பெருக்கும் சிகிச்சை) இவைகள் மேற்கொள்ளப்படும். இந்த சிகிச்சைகளுக்கு முன் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படும் பஞ்சகர்மா சிகிச்சையும் மேற்கொள்ளப்படும்.

சதவாரி, கோக்சூரா, லோத்ரா, அசோக, புனர்நவா, பாலா, அஸ்வகந்தா போன்ற மூலிகைகளும் பயன்படுத்தப்படும். தவிர பிரம்மி, ஜடமான்சி, அதிமதுரம், ஏலக்காய், சீரகம் இவைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மருந்துகளுடன் பத்திய உணவு, யோகாவும் பரிந்துரைக்கப்படுகிறது. உணவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் இவற்றை சேர்த்துக் கொள்ளவும் உடல் சீராகும் வரை மாமிச உணவுகளை தவிர்க்கவும். உடற்பயிற்சியும் நன்மை பயக்கும்.


Spread the love