மனிதனாக பிறந்த அனைவருக்குமே நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் என்பதுதான் குறிக்கோளாக உள்ளது. செல்வத்தை கூட, கடல் கடந்து சென்று கூட சம்பாதித்துவிடலாம் போல் உள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் மாசடைந்து வரும் இந்த நேரத்தில், நோயற்ற வாழ்வு என்பது, செல்வத்தை விட கடினமானதாக மாறியுள்ளது. கோடி, கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், ஆங்கில மருத்துவத்தால் பின்விளைவு இல்லாத சிறப்பான உடல்நலனை தர முடியாது. ஆனால், நம் முன்னோர்கள் காட்டிச்சென்ற ஆயுர்வேதம் என்னும் வரப்பிரசாதம் அதை நமக்கு அளிக்கிறது.

பலருக்கு உடல்நிலை நன்றாக இருப்பது போன்று தான் இருக்கும். ஆனால், அடிக்கடி நோவு https://annamsshop.com/collections/herbs-herbalsவந்து கொல்லும். இதுபோன்ற நிலையில், நல்ல உடல் நலனுக்கான அறிகுறியை அறிந்து கொள்வது எப்படி? அதற்கு வழிகாட்டுகிறார் ஆயுர்வேத மகான் ஆச்சார்யா சுஸ்சுருதா. மகிழ்ச்சியான மனநிலையுடன், தோசங்கள், அக்னி, தாது மற்றும் மாலா ஆகியவை சரிசமான நிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் என்கிறார் அவர்.
கீழ்காணும் நான்கு விஷயங்கள் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழி ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது
ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய நிலையை பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல். நோய் ஏற்படும்போது அதை தீர்க்கும் சிகிச்சை முறை. உடல், மனம், ஆத்மாவுக்கு புத்துணர்ச்சி அளித்தல்
ஆயுர்வேதம் என்பது வெறும் மருத்துவ அறிவியல் அல்ல. இது வாழ்க்கை மற்றும் நீண்ட வாழ்நாளுக்கான அறிவியல். நல்ல பழக்கவழக்கங்கள், நல்ல எண்ணங்கள், சிறப்பான ஊட்டச்சத்து, சமூக உறவு, சிறந்த உணவுப்பழக்கம், தேவையான அளவு உடற்பயிற்சி ஆகியவற்றுடன் உடலநலனை மேம்படுத்தலாம். இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலம், தேக ஆரோக்கியத்தில் ஒரு புனிதமான அணுகுமுறை கிடைப்பதுடன், நோய்களை முற்றிலுமாக தீர்க்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஒரு மிகச்சிறந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘ஒருவரது திசுக்கள், வலிமையாகவும், உறுப்புகளின் செயல்பாட்டுக்கு உறுதுணையாகவும், நல்ல மனநிலையுடனும் சிறப்பான நிலையில் இருந்தால், அவரது உடல்நலனும் சிறப்பாக இருக்கும்’’ என்றார்.
ஒருவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறாரா என்பதை அறிய மேலும் சில கூறுகள் உள்ளன
சாப்பிடும் நேரத்தில் நல்ல பசி. சாப்பிட்ட உணவுகள் நன்கு ஜீரணம் ஆவது. கஷ்டம் எதுவும் இல்லாமல் சிறுநீர், மலம் பிரிதல். மலஜலம் கழித்தபின்னர், உடல் இலகுவானது போன்ற ஒரு நிம்மதி. விழிப்புடன், உடனடி செயல்பாட்டுக்கு தயாராக இருக்கும் திறன்.
நல்ல உறக்கம். சாதாரண உறக்கம் என்றால் அவ்வப்போது விழிப்பு வந்துவிடும். உடலில் முழுவதும் சக்தி, பளபளப்பு, பலம், வளர்ச்சி. சுத்தமான மற்றும் பளபளப்பு தன்மை. மகிழ்ச்சியான மனநிலை.
இவற்றின் மூலம் ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
அதேசமயம் ஒருவரது மனநிலை ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டமா?
அதற்கும் வழிகாட்டுகிறது ஆயுர்வேதம்.மூன்று வகையான தோசங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவைதான் உடலை ஆட்டிப்படைக்கின்றன. அதேசமயமத்தில், மனநிலையை பொறுத்தவரையில், ‘ரஜஸ்’ (சிறப்பான நடவடிக்கை மற்றும் எதிர்ப்பு), ‘தமஸ்’ (சிறப்பான இருள்தன்மை மற்றும் உள்மனம்) ஆகியவைதான் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. உடல்நோய்களை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். ஆனால், மனநிலை பாதிப்புகளை தத்துவங்கள், கவுன்சிலிங், தியானம், யோகா ஆகியவற்றின் மூலம்தான் சரி செய்ய முடியும்.
சிறப்பான மனநிலைக்கான அறிகுறிகள்
சிறப்பான நினைவுத்திறன். ஈடுபாட்டுடனான பணி, சோம்பேறித்தனம் இல்லாமை, பணியில் சிறப்பான மற்றும் சுறுசுறுப்பான நடவடிக்கை, பிரச்சனைகளை தீர்க்கும் திறன், முடிவுகளை எடுக்கும் திறன். தேவையில்லாத பயம், நடுங்கும் தன்மை, தைரியமில்லாத நிலை. இயற்கையுடன் ஒன்றி வாழ்தல். மற்றவர்களுடன் தைரியாக நடைபோடுதல்.
மகிழ்ச்சி, பிறரை கவரும் தன்மை, அறிவுத்திறன். குறுகிய மனப்பான்மை இல்லாமை. வளைந்து கொடுக்கும் மனநிலை. சிறப்பான பழக்க, வழக்கங்களை கொண்டிருத்தல். குடிப்பது, விலைமாதுக்களிடம் செல்வது போன்றவை இல்லாமை. தேவையான அறிவு இருத்தல். ஆகியவற்றின் மூலம் ஒருவரது மனநிலையை தெரிந்து கொள்ளலாம். இதுபோன்ற சிறப்பான உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் நீங்களும் நல்லதொரு நிலையை அடைய முடியும்.