அஜீரணக் கோளாறுக்கு
ஒரு டீஸ்பூன் கிரைப் வாட்டரில் 5 துளி இஞ்சி சாறு தேன் கலந்து கொடுத்தால் அஜுரணக் கோளாறு அறவே நீங்கிவிடும்.
காய்ச்சலுக்கு
கோரசனை மாத்திரை, அமிர்த அரிஷ்டம் போன்ற மருந்துகள் காய்ச்சலுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.
மலச்சிக்கல் போக்க
உலர்ந்த திராட்சை 5 எடுத்து நன்றாகக் கழுவியப் பின் முதல் நாள் இரவு 20 மி.லி. தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குழந்தைக்குக் கொடுத்தால் மலசிக்கல் நீங்கும்.
பேதிக்கு
மாதுளம் பழத் தோலைக் காய வைத்துப் பொடியாக்கி 5 கிராம் (அல்லது ஜாதிபத்ரி பொடி 5 கிராம் அளவு) அளவு எடுத்து தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினால் போதும் சிறிது நேரத்தில் நின்றுவிடும்.
இன்றைய அவசர உலகில் எண்ணெய் தேய்த்து குளித்தல் என்பது மறந்துபோன விஷயமாகி விட்டது. தாயின் இடுப்பு எலும்பு வழியாக பிரம்ம பிரயத்தனம் செய்து வெளி உலகுக்கு வரும் குழந்தையின் உடம்பு முழுவதும் வலியாக இருக்கும். அதனால் குழந்தைக்கு பலா தைலம் என்கிற எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால் புத்துணர்வு கிடைக்கும். குழந்தையாக இருக்கும் போது நாள் தோறும் மசாஜ் செய்து வரும் குழந்தைக்கும் மற்ற குழந்தைகளைக் காட்டிலும் நல்ல உடல் ஆரோக்கியமும் வேகமாக வளர்ச்சியும் கிடைக்கும்.
பலா தைலம் வைத்து மசாஜ் செய்வதால் தோலுக்கும், நரம்புகளுக்கும் ஊட்டம் கிடைப்பது மட்டும் அல்லாமல், தோல் மினுமினுப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். பின் சந்தனம், நன்னாரி, வேப்பிலை போன்ற மூலிகைகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை மிதமான சூடாகும் வரை காத்திருந்து குழந்தைக்குக் குளிப்பாட்டினால் நல்ல உறக்கம் கிடைப்பது மட்டும் அல்லாமல், நல்ல நினைவாற்றலும் கிடைக்கும்.
சுவாசக் கோளாறு
சூடு செய்த தேங்காய் எண்ணெயில் பச்சை கற்பூரம் பொடியாக்கிப் போட்டு, நெஞ்சிலும், மூக்கிலும் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இப்படி குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே ஆயிர்வேத மருந்துகள் கொடுத்து வந்தால், நோய் குணமடைவது மட்டும் அல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடி வரும். இதுவே நமது பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பாகும்.