சிறுநீரக கோளாறு – இதய நோயின் அறிகுறி?

Spread the love

குறையுள்ள சிறுநீரக செயல்பாடுகள் இதயநோய்க்கும் மூளைத்தாக்கும் (Stroke) முன் அறிகுறியாக இருக்கலாம். இரு வெளிநாட்டு ஆய்வுகள் இதை தெரிவிக்கின்றன. முதல் ஆய்வில் 2,80,000 நபர்களை வைத்து மேற்கொண்ட 33 ஆய்வுகள் ஆராயப்பட்டன. சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் நார்மல் அளவுகளை விட பாதியாக குறைந்திருந்தால், மூளைத்தாக்கு வரும் வாய்ப்புகள் 43% அதிகமாகிறது. சிறுநீரக திறன் குறைந்த ஆசிய மக்களுக்கு மற்றவர்களை விட, இந்த அபாயம் அதிகம்.

இந்த ஆய்வுகளை ஆராய்ந்த நிபுணர்கள் சொல்வது அரை குறையாக செயல்படும் சிறுநீரகங்களுக்கு, மூளைத்தாக்கை தடுக்கும் சிகிச்சை (கொலஸ்ட்ராலை குறைப்பது போன்றவை) தரப்பட வேண்டும் என்கின்றனர். இரண்டாவது ஆய்வில், ஆரம்ப நிலையில் உள்ள சிறுநீரக கோளாறுகள் கூட இதய நோய்கள் ஏற்பட காரணமாகும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு 24 வருடம், ஐஸ்லாந்தின் 17,000 மக்களைப் பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சி. புகை பிடிப்பதால் வரும் இருதய நோய்களின் 6 ல் 1 என்ற கணக்கில் சிறுநீரக கோளாறுகள் பங்கு கொள்கின்றன. இதே போல் நீரிழிவு உள்ளவர்களுக்கு வரும் இருதய பாதிப்புகளின் பாதி என்ற கணக்கில் சிறுநீரக கோளாறுகள் இருதய நோய்களை உருவாக்கும்.


Spread the love