அவகேடோ பயன்கள்

Spread the love

அவகேடோ

வெண்ணை பழம்

ஆசிரியர் டி.எஸ். சுந்தர்சிங், எம்.எஸ்ஸி., அக்ரி ஆர்டிகல்ச்சர்.
தற்போது பெரும்பாலான பழக்கடையில் அவகேடோ பழங்கள்விற்பனைக்கு உள்ளது.

அவகேடோ மரத்தின் தாவர இயல் பெயர் என்பதாகும். இது ஒரு மிகவும் சத்துள்ள பழமாகும். இப் பழங்களில் 23% மேலாக, கொலஸ்ட்ரால் இல்லாத கொழுப்பு சத்து உள்ளது. 1 கிலோ சதைப் பகுதி சுமார் 3600 யூனிட் கலோரி கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இதில் அதிக அளவு வைட்டமின்கள் கால்சியம், பாஸ்பரஸ் மற்றம் இரும்பு சத்துக்கள் உள்ளது. எனினும் இதில் சர்க்கரை சத்து இல்லாததால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்ற பழங்களாகும்.

இப்பழங்களின் சதைப் பகுதி வெண்ணையைப் போல இருப்பதால் இதனை வெண்ணை பழம் என்று அழைக்கின்றனர்.

மேலை நாடுகளில் இதனை அதிக அளவில் உபயோகிக்கின்றனர். இப்பழங்களை சமைத்தோ அல்லது பதப்படுத்தியோ உண்பதைவிட அப்படியே உண்பதே சிறந்ததாகும். இதிலுள்ள கொழுப்பு சத்து, பாலைவிட எளிதாக ஜீரணிக்கப்படுகிறது. மேலும் சில ரகங்களிலிருந்து கிடைக்கும் சத்து வாழை பழங்களிலிருந்து கிடைக்கும் சத்தைவிட இரண்டு மடங்கு கூடுதலாகும். கொழுப்பு சத்தை முக்கிய சத்தாகக் கொண்ட ஒரு சில பழங்களில் இது முக்கியமானதாகும். இதில் எண்ணெய் சத்து ரகத்தைப் பொறுத்து 7&20 சதவீதம் வரை மாறுபடுகிறது. பூனாவில் வெளியிடப்பட்ட கத்திரிப்பூ, நிற ரகத்தில் 17 சதம் வரை எண்ணெய் சத்து உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தென் இந்தியாவில் அதிகமாக பெங்களூர், சிக்மங்களூர், கூர்க் ஆகிய இடங்களிலும் தமிழ் நாட்டில் அதிகமாக திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியிலும், கொடைக் கானல், பழனி, நீலகிரி மலைகளின் அடிவாரப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
நன்றி & தொழில் நுட்ப தோட்டக் கலை.


Spread the love