North Africa-வில் அறிமுகமாகி இப்போது Asia முழுவதும் அத்தியாவசிய காய்கறி பட்டியலில் இருப்பது இந்த அவரைகாய். இதுவும் ஒரு பீன்ஸ் வகைதான். காய் மட்டுமில்லாமல் இதோடு பருப்பும் மிக சிறந்த ஊட்டசத்துடையதாக இருக்கின்றது. குறிப்பாக நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றிகொள்ள கூடிய ஆற்றல்அவரைக்காயில் உள்ளது. இது இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்து நோய்எதிர்ப்பு சக்தியை உடலிற்கு வழங்குகிறது. அதற்கு முக்கிய காரணம் இதில் இருக்கும் வைட்டமின் சி நமது உடலில் மிகவும் அத்தியாவசியமாக இருக்க கூடிய வெள்ளை அணுக்களை உற்பத்திசெய்வதோடு நோய்களில் இருந்து காக்ககூடிய ஆண்டி-ஆக்ஸிடன்ட்டாகவும் செயல்படுகிறது.
அதோடு இரத்தத்தில் ஊடுருவகூடிய Oxidation-சேதமடையாமல் தடுக்கும் அதுமட்டுமா?அவரையை தொடர்ந்து சாப்பிட்டால் குறைபாடே வராது. இதில் இருக்கும்இரும்புசத்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக்கி, இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். பொதுவாக உடலில் DNA வலுவிழக்கும் போது நோய்களின் தாக்கம் அதிகமாகும் குறிப்பாக கேன்சர் வரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவரையில் இருக்க கூடிய வைட்டமின்B9, DNA-வை இனபெருக்கம் செய்ய தூண்டும். இதனால் சேதமான செல்களுக்கு பதிலாக புதியசெல்கள் உருவாகும்.
அதுமட்டுமின்றி மனித உறுப்புகளான, மார்பகம்,மூளை, பெருங்குடல், கர்பப்பை மற்றும் வாயில் ஏற்படகூடிய புற்றுநோய்க்கு வைட்டமின் b9 குறைபாடும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதனால் அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் இந்த வைட்டமின் நமக்கு தாராளமாக கிடைக்கும். தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கும் செடேட்டிவ் குறைபாடுஅவரைக்காய் சாப்பிட்டு வந்தால் வராது என கூறப்படுகிறது. இதனால் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வருவதோடு, தூக்கமின்மையை தரகூடிய பாதிப்புகளான, மறதி, மனஅழுத்தம், தசைவலி, உடல்பருமன், இவையெல்லாம் வராமலும்தடுக்கலாம்.
அவரையில் இருக்கும். ஃபோலேட் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியம்.இதனால் அவர்களுக்கு தேவையான வலிமையை தருவதோடு, பிரசவம் எளிமையாகவும் இருக்கும். குழந்தையும் நல்ல எடையுடன் பிறக்கும். அவரையில் இருக்கும் அதிகமான மினரல்ஸ் ஒன்றுதான் தைமின் இது கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இரும்புசத்து மூளை ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இரும்புசத்தில் இருக்கும் அநேக நன்மைகளில் ஒன்று தான் மூளையை சிறப்பாக செயல்பட வைத்து ஞாபக சக்தி திறனை மேம்படுத்தி மூளை சீக்கிரம் சோர்வடையாமல் தடுக்கும்.