சமீபத்தில் சென்னையில் உலக ஆடிசம் நாள் கொண்டாடப்பட்டது. அதில் அதிக அளவு குழந்தைகள் சமீபகாலமாக ஆடிசம் பாதிக்கப்பட்டு பிறக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.
1990 களில் வருடத்திற்கு 10&15 குழந்தைகளே ஆடிசத்தால் பாதிக்கப்பட்டு பிறந்தன என்றும், ஆனால் இப்பொழுது சுமார் ஒரு வாரத்திற்கே 2&3 குழந்தைகள் ஆடிசம் பாதிக்கப்பட்டு பிறக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.
ஆடிசம் அதிகரித்து வருவதால் அவர்களுக்கென மருத்துவ வசதிகளும் பெருகி விட்டன. வாசனை மருத்துவம், இசை மருத்துவம், பிஸியோதெரபி கல்விச் சாலைகள் என பல ஆடிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், ஆடிசம் பாதிக்கப்பட்ட குழந்தை அந்த நோயிலிருந்து மீண்டு வர முடியாது. ஆனால் இத்தகைய மருத்துவம் அவர்களுக்கு ஓரளவே உதவிட முடியும் என்பதே கசப்பான உண்மை.