1. நீரிழிவு நோயுடன், பிரச்சனையின்றி வாழ, நோயாளியின் ஒத்துழைப்பு மிக அவசியம்.
2. நீரிழிவு நேயை குணப்படுத்த முடியாவிட்டாலும் கட்டுக்குள் வைக்கலாம்.
3. நோயாளிகள் சர்க்கரை லெவலை ‘கண்ட்ரோல்’ செய்வது மட்டுமின்றி, உடல் எடையை நிலையாக, சரியாக வைத்திருக்க வேண்டும்.
4. இரத்த அழுத்தம், உடல் கொலஸ்ட்ரால், கொழுப்புகளின் அளவு சரிவர இருக்க வேண்டும்.
5. மூன்று வேளை உணவை ஐந்து (அ) ஆறு வேளையாக மாற்றலாம். ஆனால் தினமும், கூடிய மட்டும் ஒரே நேரத்தில் உணவை உட்கொள்ளவும். உணவின் அளவும் தரமும் சீராக இருக்க வேண்டும்.
6. உணவை மென்று உண்ணவும்.
7. உங்கள் உணவு முறையை உங்கள் டாக்டரிடமும், டயட்டீசியனுடன் கலந்து, ஆலோசித்து திட்டமிட்டுக் கொள்ளவும்.
8. ஆல்கஹால் மதுபான வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பீயர் குடிக்கக் கூடாது.
9. புகை பிடிக்கும் பழக்கமிருந்தால், அதை விடவும்.
10. உடற்பயிற்சி அவசியம். அது இலகுவாக, உடலுக்கு அசதியை உண்டாக்காமல் இருக்க வேண்டும். வாரத்தில் 4-5 நாட்களாவது செய்ய வேண்டும். நடப்பது சிறந்தது. ஓட்ட நடை (Jogging) 50 வயதுக்கு மேல் வேண்டாம். யோகா மட்டும் போதாது. கூடவே சிறிது உடற்பயிற்சியும் தேவை.
11. இன்சுலின் போட்டுக் கொள்வதால், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற கருத்து முற்றிலும் தவறானது.
12. தாழ்நிலை சர்க்கரை அபாயமானது. அந்த நிலையில் 4-5 ஸ்பூனு சர்க்கரை, தேன் 5-6 பெப்பர்மின்ட் மிட்டாய்கள் போன்ற இனிப்புகளை கொடுக்க வேண்டும். இந்த முதலுதவியுடன் டாக்டரிடம் உடனே செல்ல வேண்டும். ஹைபோகிளைசீமியாவால் மயக்கமடைந்த நோயாளிக்கு உணவு கொடுக்கக் கூடாது.
13. மருந்து, உணவு, உடற்பயிற்சி இவற்றால் நீரிழிவை கட்டுப்படுத்தி, அதனுடன் வாழலாம்.