அறிந்துகொள்ள வேண்டிய அதிமதுரம்

Spread the love

சிறந்த வாசனைத் தாவரம்

முன்னுரை

தாவரங்கள் அவற்றின் குணம், தன்மைக்கேற்ப பல பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவற்றுள் வாசனை மற்றும் மணமூட்டும் தாவரங்கள் என்பது ஒரு பிரிவாகும். இவ்வகைப் பிரிவின் கீழ்வரும் தாவரங்கள் மிகுந்த மணத்தைக் கொண்டுள்ளது. விலை மதிப்புள்ளதாகவும், நோய்களைத் தீர்ப்பவையாகவும் விளங்குகிறது. இவற்றுள் அதிமதுரம் மிகவும் முக்கியமானதாகும்.

தாவர வகை & அதிமதுரம் மத்திய தரைக்கடல் நாடுகள் மற்றும் சைனா பகுதியில் முதலில் காணப்பட்டது. அதன் பின்பு ஸ்பெயின், துருக்கி, இந்தியா நாடுகளுக்குப் பரவியது. ஈராக், இத்தாலி நாட்டில் வளரும் அதிமதுரச்செடி, அதிக குணம் மற்றும் வாசனையுடையதாக உள்ளது. இந்தியாவில் பஞ்சாப், இமயமலை மற்றும் தமிழ்நாட்டில் சில இடங்களில் வளர்கிறது.

இது சிறுமர வகையைச் சார்ந்ததாகும். சுமார் ஆறு அடி உயரம் வரை வளரும். இதன் பூக்கள் வெளிர் நீல நிறத்தில் காணப்படுகிறது. மதுரம் என்றால் இனிமை என்று பொருளாகும். அதிமதுரம் என்றால் மிகுந்த இனிமை என்று பொருளாகும். இதன் வேர்ப்பகுதியே அதிகமாகப் பயன்படுகிறது. இதன் வேரை வாயிலிட்டு சுவைத்தால் சுவையாக, மணமாக இருக்கும்.

இதன் தாவரவியல் பெயர் ‘கிளைசிரிஸா கிளாபரா என்பதாகும். இது ‘பாப்பிலெனேசியே’ என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது.

தமிழ்ப் பெயர்கள்

அட்டி மதுரம், அதிங்கம், மதுகம், மதூலி, தேர்மதுரம், கான்மதுரம், ஏசிடாங்கம், வாதலம், மதுரம், முலங்கம், பல்ச் சரீரம், அதிமதுர வேரிலிருந்து ஒரு வகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பு, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

குணங்கள்

காயத்தையாற்றும், வலியைபோக்கும், பித்தத்தை அகற்றும், வயிற்றுச் செயல்பாட்டை மேம்படுத்தும், உடலைத் தேற்றும், வறட்சியைப் போக்கும், ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும், காய்ச்சல் குணமாகும். உடல் பலம் பெறும்.

மருத்துவப் பயன்கள்

அதிமதுரத்தை மாதூளை சாறுவிட்டு அரைத்து, பாலில் கலந்து சுண்டைக்காயளவு சாப்பிட உடல் உஷ்ணம், மூலக்கடுப்பு தீரும்.

பத்து கிராம் வீதம் அதிமதுரம், மிளகு, சுக்கு, வெல்லம், எள் இவைகளை எடுத்து நீர் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி அரை கப் சாப்பிட சூட்டு இருமல் தீரும். அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டு அதன் சாறை சிறிது சிறிதாக விழுங்க சூட்டு இருமல் தீரும்.

குளிரான இடங்களுக்கு சென்று வந்ததும் சளி, இருமல் ஏற்படும். இதை குணப்படுத்த ஒரு துண்டு அதிமதுரத்தை வாயிலிட்டு உமிழ்நீரை விழுங்க வேண்டும். அதிமதுரப் பொடியை பாலில் கலந்து தேன் சேர்த்து சாப்பிட உடல்பலம், தாது விருத்தி ஏற்படும்.

நூறுகிராம் அதிமதுரப் பொடியை 400 மிலி தேங்காய் எண்ணெய் மற்றும் 400 மிலி அருகம்புல் சாறுடன் கலந்து காய்த்து & ஆறியபின் தோல் நோய் இருந்தால் அதன் மேல் நன்கு தடவி ஊறிய பின் கழுவி வர தோல் நோய்கள் குணமாகும்.

அதிமதுரத் தூளுடன் சிறிதளவு வெண்ணெய்யும், தேனும் கலந்து தாம்பத்திய உறவுக்கு மூன்று மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு பால் குடிக்க & களைப்பு ஏற்படாது, ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். அதிமதுரத்தை காடியில் அரைத்து குழந்தையின் தொப்புளைச் சுற்றி தடவ வயிற்று உப்புசம் தீரும்.

15 கிராம் அதிமதுரம், வசம்பு இரண்டையும் தட்டிப் போட்டு நீர் சேர்த்து காய்த்து கஷாயமாக்கி காலை, மாலை ஒரு கரண்டி சாப்பிட இருமல் தீரும். அதிமதுரத்தை இடித்து பாலில் இட்டு தேன் சேர்த்து இதோடு சிறிதளவு மஞ்சள்பொடி, மிளகு பொடியை கலந்து அருந்த எல்லா வகையான இருமலும் தீரும்.

புகைபிடிக்கும் நினைவு வரும்போது சிறு துண்டு அதிமதுரத்தை வாயிலிட்டு சுவைக்க புகை பிடிக்கும் ஆசை படிப்படியாக குறையும். அதிமதுரப் பொடியில் தேன் கலந்து சாப்பிட தாய்ப்பால் சுரக்கும். உடல் வலு ஏற்படும். சளி தீரும். அதிமதுரப் பொடியை நெய்யில் குழைத்து சாப்பிட வயிற்றுப் புண் குணமாகும். மலச்சிக்கல் தீரும்.

அதிமதுர கஷாயம் பருகிவர சர்க்கரை நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அதிமதுரம், இலவங்கப் பட்டையை இடித்து தூளாக்கி ஒரு நாள் இருவேளை சாப்பிட ஆரம்ப கால சர்க்கரை நோய் தீரும்.

50 கிராம் வீதம் அதிமதுரம், சுக்கு, வசம்பு இவைகளை இரண்டு லிட்டர் நல்லெண்ணெயில் காய்த்து வடிகட்டி வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்தால் தலைவலி குணமாகும்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love
error: Content is protected !!