அதலைக்காய்

Spread the love

அதலைக்காய் என்கிற பெயரே சிலருக்கு புதிதாக இருக்கும். இது காய்கறி கடைகளில் கிடைக்குமா என்கிற கேள்வி கூட சிலருக்கு எழும். உண்மையில் அதலைக்காய் அற்புதமான காய்கறி வகைகளில் ஒன்று.

தாவரவியல் பெயர்  தாவரக் குடும்பம்    குக்கர் பிட்டேசியே இதற்கு மொமார்டிகா டியுபரோசா அல்லது லுஃபா டியுபரோசா என்ற தாவரவியல் பெயரும் உண்டு. இது பல்லாண்டு வாழும் வெப்பப் பகுதி கொடியினம்.

அதலைக்காய் முறையாக பயிரிடப்படாமல் மழைக் காலத்தில் மட்டுமே கிடைக்கும் தாமாக வளரும், தரையில் படரும் கொடி வகையாகும். அதலைக்காய் இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் காணப்படுகிறது. இது தமிழ் நாட்டில், விருதுநகர், செங்குன்றபுரம், வடமலை குறிச்சி, சாத்தூர், இருக்கன்குடி, பாவநத்தம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.

இப்பகுதிகள் கரிசல் மண் நிறைந்த வானம் பார்த்த பூமி என்பதால் எள், சோளம், மக்காசோளம் போன்ற பயிர்களுடன் மருத்துவ குணம் கொண்ட அபூர்வ அதலைக்காய் விளைகிறது. பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்ட அதலைக்காய்கள் உடல்நலத்திற்கு உதவும் பல வியத்தகு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. இதில் கிளைக்கோசைடுகள், மொமார்டிகோசைடுகள் மற்றும் இன்சுலினுக்கு இணையான பண் புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாட்டுப்புறத்தில் சிலர் மட்டுமே இவற்றின் பயனை அறிந்து பயன்படுத்தி வந்தனர். யாரும் கேட்பாரின்றி வெகுசில காய்கறி கடைகளில் மட்டுமே சல்லியாகக் கிடைத்து வந்த அதலைக்காய் தற்போது சந்தையில் சுமார் கிலோவிற்கு 80 முதல் 100 ரூபாய்க்கு மதுரை, சென்னை உட்பட பிற மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான காய்கறி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பருவ மழைக் காலங்களில் அங்குள்ள தரிசுநிலம் மற்றும் விவசாய நிலங்களில் அதலைக்காய் செடிகளில் பூக்கள் பூத்து காணப்படும். கார்த்திகை, மார்கழியில் இந்தக் காய்கள் சந்தைகளில் கிடைக்கும்.

ஊட்டச் சத்துகள்

அதலைக்காயில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதம் மற்றும் தாது உப்புக்கள் மிகுந்த அளவில் உள்ளன. 100கிராம் அதலைக்காயில் 6.42 கி. நார்ச்சத்து, 72 மி.கி. சோடியம் மற்றும் 290 மி.கி. உயிர்ச்சத்து சி உள்ளது. மேலும், இந்த தாது உப்புகள் மற்றும் விட்டமின்களின் அளவு பாகற்காயுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகமாகும்.

ஆரோக்கியமான எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, இதயத்துடிப்பு, நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் மற்றும் இரத்தம் உறைதல் ஆகியவற்றிற்கும் அதலைக்காய் இன்றியமையாதது. மேலும், இதில் உள்ள உயிர்ச்சத்துகள் மற்றும் தாது உப்புகளை பாகற்காயுடன் ஒப்பிடுவதற்காக பாகற்காயில் உள்ள சத்துகள் ஒப்பீடாக எடுத்துக் கொள்ள முடியும். ஏனெனில், அதலைக்காயை கிட்டத்தட்ட பாகற்காய் என்று சொல்லாம்.

மருத்துவப் பயன்கள்

தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் அதலைக்காய் விளையும். இந்த அதலைக்காய் நெடுங்காலமாக நாட்டு மருத்துவத்தில் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும் குடற்புழுக்களுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது. வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதை சாப்பிட வயிற்றில் நுண்புழுக்கள், குடற்கிருமிகள் ஆகியன நீங்கும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புச் சத்து குறையும். நாட்டப்பட்ட புண்கள் ஆறும். எனவே, இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்.

 கசப்புத்தன்மையுடைய அதலைக்காய் ஜீரணத்தை அதிகப்படுத்தி, உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் நுண் கிருமிகளை வெளியேற்றி, உடல் எரிச்சலைத் தணித்து, அதிகரித்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

அது மட்டுமின்றி சளி, ஜீரணம், மூட்டுவலி போன்ற நாட்டப்பட்ட உணவுப் பாதைகளிலுள்ள அழுக்குகளையும் கழிவாக வெளியேறும் தன்மை உடையது. கார்பன் டெட்ரா குளோரைடினாலும் பாரசிட்டாமாலினாலும் விளையும் கல்லீரல் பாதிப்பை இது தடுக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதலைக்காயின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயை உண்டாக்கும். கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்க வல்லது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கார்பன் டெட்ரா குளோரைடடு மற்றும் பாரசிட்டாமால் மருந்துகளினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை தடுக்கவும் இது பெரிதும் உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது

பாரதி


Spread the love