அச்சுறுத்தும் ஆஸ்துமா

Spread the love

உலகில் சுமார் 30 கோடி மக்கள் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர்.

வரும் 10 ஆண்டுகளில் ஆஸ்துமாவால் ஏற்படும் இறப்புகள் 20% அதிகரிக்குமாம்.

உயிர் வாழ அடிப்படை தேவை மூச்சு. உணவு, நீர் கூட இல்லாமல் பல தினங்கள் வாழலாம். ஆனால் மூச்சு விடாமல் சில நிமிடங்கள் கூட வாழ முடியாது. மூச்சுத்திணறலால் அவதிப்படும் ஒருவரைப் பார்த்தாலே வேதனையாக இருக்கும். அந்த வகையில் தற்போது அதிகமாகி வரும் ஆஸ்துமா ஒரு வேதனை தரும் வியாதி. குழந்தைகளையும் ஆஸ்துமா விடுவதில்லை.

ஆஸ்துமா

ஆஸ்துமா ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படும் பாதிப்பு ஆஸ்துமா. கிரேக்க மொழியில் ஆஸ்துமா என்றால் ‘திணறுவது, தவிப்பது’ என்று பொருள்.

சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்பு  அல்லது சுவாசப் பாதை சுருங்குவது, மூச்சு விடுவதில் சிக்கல்களை உருவாக்கும். Bronchial Tube எனப்படும் காற்றுக் குழாய்கள் நுரையீரலுக்கு ஆக்சிஜனை எடுத்துக் செல்லும் குழாய்கள். மூச்சுக் குழாய் தசைகளில் கசிவு ஏற்பட்டு வீங்கி விடும் போது உப்பிய தசைகள் மூச்சுக்குழாயை சுருக்கி அதன் துவாரத்தின் சுற்றளவை குறைக்கும். தவிர வழக்கத்திற்கு மாறாக Bronchial Tubes அதிக சளியை சுரக்கும். இந்த சளியானது  கட்டியாக சேர்ந்து மூச்சுக்குழாயின் பாதையை அடைக்கும். இழுப்பு எனப்படும் Wheezing ஒசையுடனும், சிரமத்துடன் மூச்சு விடுவதேயாகும். இது தான் ஆஸ்துமா. இது Bronchial Asthma என்றும் சொல்லப்படுகிறது.

காரணங்கள்

சுவாசக் குழாய்கள் சுருங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன அவற்றில் ஒன்று, குழாயின் சுவரில் உள்ள ‘லைனிங்’ (Lining) தசைகளின் முகவாய்கள் (Receptors) ஏறுமாறாக, இயங்கி தசையை சுருங்க வைப்பது. குழாய் சுவரின் திசுக்களும் அழற்சி அல்லது தொற்றினால் வீங்கி, சளியை சுரந்து பாதையை அடைக்கின்றன. குழாய் சுவர்களின் உட்சுவரின் (Lining)மேல் பாகம் சிதைந்து போகலாம். அதனால் சிதைந்த செல்களும் கூடி குழாயை சுருக்கும். சுவாசக் குழாயில் உள்ள மாஸ்ட் செல்கள் (Mast cells ) தான் குழாய் சுருங்குவதை தூண்டிவிடுகின்றன என்று கருதப்படுகிறது.

ஏன் சுவாச குழாய்கள் சுருங்குகின்றன? இதற்கு ‘அலர்ஜி’ அல்லது- ஒவ்வாமை தான் காரணம். அலர்ஜி ஏற்பட காரணமாக, தூசி, புகை, பெயின்ட் வாசனை, குளிர்காற்று, பூவின் மகரந்த துகள்கள், கொசுவத்தி சுருள்கள், பருவகால மாற்றங்கள், வீட்டில் வளர்க்கும் பூனை போன்ற பிராணிகள், மனச்சோர்வு அழுத்தம், சில உணவுகள் என்று பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். குங்குமம், வாசனை திரவியங்கள், பஞ்சு, சுண்ணாம்பு, ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், உளுந்து, சன்செட் யெல்லோ (Sunset Yellow) எனும் வண்ணம் – போன்றவைகளும் இந்த பட்டியலில் அடங்கும். உணவுகளால் ஆஸ்துமா ஏற்படுவது அபூர்வம்.

அலர்ஜியை உண்டாக்கும் பொருட்கள், சுவாசக்குழாய்களின் சுவர்களில் உள்ள மாஸ்ட் செல்களின் (Mast cells) மேற்பரப்பில் உள்ள இம்யூனோ குளோபின் ‘இ’ எனும் ஆன்டி-பாடியுடன் இணைந்து, ஆஸ்துமாவை தூண்டிவிடலாம்.

வைரஸ் கிருமிகளும் ஆஸ்துமாவை உண்டாக்கலாம்.

உடற்பயிற்சி கூட ஆஸ்துமா உள்ளவர்க்கு, அதன் தாக்குதலை தோற்றுவிக்கலாம்.

சீதோஷ்ண நிலையின் திடீர் மாறுதல்கள் ஆஸ்துமாவை தூண்டலாம்.

கோபதாபங்கள், சோகம் போன்றவைகளும் ஆஸ்துமாவை தூண்டலாம்.

உலக ஆரோக்கிய குழுமம் (கீபிளி) சொல்வது

1. ஆஸ்துமா குழந்தைகளிடையே அதிகமாக பரவுகின்றது.

2. ஆஸ்துமா வந்திருப்பதை பலர் சரிவர கண்டுபிடிப்பதுமில்லை. சரிவர சிகிச்சை பெறுவதுமில்லை.

3. ஆஸ்துமா ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி வளர்ந்த மற்றும் வளராத நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.

ஆஸ்துமாவை தூண்டும் ‘பார்த்தீனியம்’

களை, செடிகளிலிருந்து எழும்பும் மகரந்தத் தூளுடன் வரும் நச்சுப்பொருட்களால் ஆஸ்துமா மட்டுமல்ல, எக்ஸிமா, தோல் வியாதிகள் உண்டாகின்றன.  டெல்லியில், உள்ள ஆஸ்துமா நோயாளிகளில் 30% நோயாளிகளுக்கு ஆஸ்துமா தாக்கிய காரணம் களைச் செடிகளிலிருந்து (குறிப்பாகParthenium) எழும்பும் மகரந்தத்தூள். பெங்களூரிலும் பார்த்தீனியம் செடிகள் அதிகம் காணப்படுகின்றன.

அறிகுறிகள்

ஆஸ்துமா தாக்குதல் எப்போது வரும். எவ்வளவு தடவை வரும், எவ்வளவு நேரம் இருக்கும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். முக்கிய அறிகுறிகள் மூச்சுவிடுவதில் சிரமம், இழுப்பு (Wheezing) ஓசையுடன் கூடிய இழுப்பு, நோயாளி மூச்சை வெளிவிடும் போது ஏற்படும். நெஞ்சில் கபம் கட்டும். முதல் தாக்குதல் நுரையீரல் இன¢ஃபெக¢ஷனுடன¢ (Infection) தொடங்கலாம். அடுத்து வரும் தாக்குதல்கள் இதே போன்ற தொற்றால் வரலாம். ஏன், சாதாரண ஜலதோஷம் கூட ஆஸ்துமாவை தூண்டலாம்.

சிலருக்கு தாக்குதல் குறைவாக இருக்கும்.

இருமல் ஏற்படும். இரவில் அதிகமாகும். அடுக்குத் தும்மலும் ஏற்படலாம்.

வியர்வை அதிகமாக நோயாளியால் அதிகம்பேசமுடியாது.

ஆஸ்துமாவின் போது ரத்தத்தின் வௌ¢ளை அணுக்கள் (குறிப்பாக ஈசினோஃபில்ஸ், ‘இம்யூனோகுளோபிலின் ‘இ’) அதிகமாக காணப்படும்.

சிக்கல்கள்

தீவிர தாக்குதலின் போது, நோயாளி எழுந்து உட்கார்ந்து, முன்வளைந்து முயன்றாலும், மூச்சுவிட சிரமப்படுவார். இதனால் மனப்பதற்றம் ஏற்படும். அதிகம் பேசமுடியாமல் போகலாம். நோயாளிக்கு களைப்பும் குழப்பமும் ஏற்படும். Cyanosis (இரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்தால் ஏற்படுவது) உண்டாகி ரத்தம் குறைந்து, உடல் நீல நிறமாகும். இது ‘எமர்ஜென்சி’. உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். இந்த தீவிர நிலையிலும் உடனடி சிகிச்சையால் நிவாரணம் கிடைக்கும்.

சிகிச்சைமுறை

நல்ல நவீன மருந்துகளால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம். மருந்தை நேரடியாக நுரையீலுக்கு செலுத்த ‘இன்ஹேலர்’ (Inhalers) கள் இருக்கின்றன. சுவாசக் குழாயை விரிவடைய செய்ய Brancho-dilators எனப்படும் துரிதமாக செயலாற்றும் மருந்துகள் உள்ளன. Nebuliser என்ற சாதனத்தாலும், மருந்துகளை விரைவாக உள் செலுத்தி உடனடி நிவாரணத்தை கொடுக்கலாம்.

ஆஸ்துமாவைப் பற்றி ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் ஆஸ்துமாவை ‘தமகஸ்வாசம்’ என்கிறது. சம்ஸ்க்ருதத்தில் ‘தம’ என்றால் ‘இருட்டு’ என்று அர்த்தம். ஆஸ்துமா பொதுவாக இரவில் ஏற்படுவதால் இந்தப் பெயர்.

தமகஸ்வாசத்தில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன அவை

1. பிராதமகஸ்வாசம் &- ஆஸ்துமாவுடன் ஜூரம் சேர்ந்து வந்தால், பிராதமக ஸ்வாசம் எனப்படுகிறது. இது ஒரு தீவிர தொற்றின் அறிகுறி.

2. சாந்தமகா ஸ்வாசம் &- மனம் மற்றும் உடல்ரீதியான ஆஸ்துமா. மனஅழுத்தம் மற்றும் ஒவ்வாமையால் உண்டாவது. உடற்பயிற்சி, குளிர்காலம், அலர்ஜி, இவைகளும் இந்த டைப் ஆஸ்துமாவை உண்டாக்கும்.

ஆயுர்வேதக் காரணங்கள்

தவறான உணவு முறை. மசாலா செறிந்த உணவு, குளிர்ந்து போன உணவு, எளிதில் ஜீரணமாகாத உணவுகள், உடலுக்கு எண்ணெய்ப் பசையை ஊட்டாத உலர்ந்த உணவுகள் முதலியன.

தவறான வாழ்க்கைமுறை. – குளிர்ந்த நீரில் குளிப்பது, தூசி, புகை இவற்றை நுகர்வது, குளிர்காற்றில் அலைவது, மலச்சிக்கல் முதலியன.

ஆயுர்வேதத்தின் படி ஆஸ்துமா ஒரு கபநோய். ஆனாலும் வாத, பித்த

தோஷங்களில் பாதிப்பாலும் உண்டாகலாம். வாத ஆஸ்துமாவில் வறண்ட இருமல், இழுப்பு தாகம், சூடான திரவங்களை குடிக்க வேட்கை, உலர்ந்த வாய், உலர்ந்த சருமம் – போன்றவையும் காணப்படும். வாத நேரமான காலை, அந்திப்பொழுதில் வாத ஆஸ்துமா தாக்கும்.

பித்த ஆஸ்துமாவில் மஞ்சள் நிற சளியுடன் கூடிய இருமல், இழுப்பு இருக்கும். ஜூரம், வியர்த்தல், தோன்றும். பித்த நேரமான நள்ளிரவு, மத்தியானத்தில் தோன்றும்.

கப ஆஸ்துமாவில் இருமல், அபரிமிதமான வெள்ளை நிறசளியுடன், ஒசையுடன் கூடிய இழுப்பும் இருக்கும். கபநேரமான காலை, சாயங்காலத்தில் தோன்றும்.

சிகிச்சை

1. வாமனம்: இது ‘பஞ்சகர்மா’ சிகிச்சையின் ஒரு அங்கம். மருத்துவரின் கண்காணிப்பில், நோயாளி வாந்தி எடுக்க வைக்கப்படுவார்.

2. விரேசனம்: வாமனத்திற்கு பிறகு, உடலில் மிச்சம் மீதி இருக்கும் கழிவுப்பொருட்களை வெளியேற்ற, நோயாளிக்கு பேதியை உண்டாக்கும் சிகிச்சை தரப்படும்.

வீட்டுவைத்தியம்

1. ஆஸ்துமா தாக்கும் போது, அரை மணிக்கு ஒரு தடவை மார்பிலும், தோளிலும் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

2. திப்பிலி பொடியுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்துமா பாதிப்பு குறையும்.

3. நீராவி பிடித்தல் -& கொதிக்கும் நீரிலிருந்து வரும் நீராவியை, தலையை துவாலையால் மூடிக்கொண்டு பிடிப்பது மூக்கடைப்பை நீக்கும்.

4. சூடான நீர் (அ) பால் – கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம்.

5. துளசி இலைச்சாறு (ஓரு டீஸ்பூன்) + தேன் (ஒரு டீஸ்பூன்) – மூன்று வேளை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

6. வெங்காய சாறும் குடிக்கலாம்.

7. கடுகெண்ணை கிடைத்தால் அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிது வெல்லத்துடன் சேர்த்து தினமும் இரு வேளை அளவில் 3 வாரம் உட்கொள்ளவும்.

உணவு கட்டுப்பாடு

1. குளிர்ச்சியான ஐஸ்கிரீம், தயிர், மோர், எலுமிச்சை இவற்றை தவிர்க்கவும். அலர்ஜியை உண்டாக்கும் உணவுப்பொருட்களை கண்டறிந்து அவற்றை தவிர்க்கவும். முட்டை, கொய்யாப்பழம், வெள்ளரிக்காய், இவற்றையும் விலக்கவும். உப்பு குறைவாக உணவு நல்லது. உளுந்து, வாழைப்பழம், இனிப்பு இவைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை.

2. விட்டமின் ‘பி’ 6 உள்ள உணவுகள் ஆஸ்துமாவுக்கு நல்லது. முழுதானியங்கள், லிவர் (மாமிசம்) இறைச்சி, காய்கறிகள் இவற்றிலிருந்து இந்த விட்டமின் கிடைக்கும்.

3. குளிக்க மட்டுமல்ல, குடிப்பதற்கும் வெந்நீரை உபயோகிக்கவும்.

4. மலச்சிக்கல் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ளவும்.


Spread the love