· வீட்டு உபயோக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கத் தயங்கக் கூடாது.
· தனிமை தவிர்க்கப்பட வேண்டும்.
· ஆக்சிஜன் சிலிண்டர் உபயோகப்படுத்தும்போது புகைபிடிக்கக்கூடாது, வெடித்து விடும்.
· மன அழுத்தம் வராமல் இருக்க மருத்துவமும், பயிற்சியும் தேவை.
· மார்பு பிசியோதேரபி அவசியம் (உள்ளிருக்கும் சளியை வெளிக் கொணர)
· சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.
செய்யக் கூடியவை
· முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம்.
· வாகனம் ஓட்டும்போதும், சமையல் செய்யும் போதும், ஒட்டடை அடிக்கும் போதும் முகமூடி உபயோகிப்பது அவசியம்.
· மருத்துவரிடம், ஆஸ்துமா நோயாளிகள் தாங்கள் பிறநோய்களுக்கு உட்கொள்ளும் மருந்தை சொல்வது மிக முக்கியம்.
· யோகா பயிற்சி பலன் தரும்.
· சரியாக உட்காரும், து£ங்கும் நிலைகள், முறைகள் தெரிய வேண்டும்.
· தொப்பை, உடல் பருமனைக் குறைக்கவும்.
· மனதைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் மருத்துவமனையில் சேர்ந்து, பிராணவாயு முதலாய தீவிர சிகிச்சைகளைப் பெறலாம்.
ஆஸ்துமா உள்ளவர் கவனிக்க வேண்டியவை
· விரைவில் சிகிச்சை பெற வேண்டும்.
· மூச்சுத் திணறல் வரும் பொழுது தவிர்க்க வேண்டிய மருந்துகள்: து£க்கமாத்திரை, அவில் போன்ற அலர்ஜி மாத்திரை, நாடித் துடிப்பை மிகுதிப்படுத்தும் மருந்து, (உம் அட்டிரினிலின்), உயர் இரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மாத்திரை (உம் புரோபரனலால்)
· சளி இறுகாமலிருக்க நிறைய திரவ உணவினை வாய்மூலமோ, ஊசி மூலமோ எடுத்துக்கொள்ள வேண்டும்.
செய்யக் கூடாதவை
· சுயமாக மருந்து, மாத்திரை உட்கொள்வது கூடாது.
· சுயசிகிச்சை முறை தவிர்க்கவும்.
· புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் விடவும்.
· அலர்ஜி, ஆஸ்துமா து£ண்டும் உணவுப் பொருட்கள், சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்.
· ஆஸ்பிரின் மாத்திரை (இருதய இரத்தக்குழாய் அடைப்பைத் தடுக்கும் மாத்திரை) சுயமாக ஆஸ்துமா நோயாளிகள் உபயோகிக்கக்கூடாது.
· மூச்சுத் திணறல், இருமல் (பக்கவாட்டு விலா எலும்பு வலி), து£க்கமின்மை, ஜுரம் ஆகியவை வந்தால் தள்ளிப்போடாமல் மருத்துவரை அணுகவும்.
· வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதை தவிர்க்கவும், உதாரணம்: குறிப்பாக பூனை, நாய், புறா, கிளி.
· து£சு, குப்பை, அழுகிய உணவுப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும்.
· படுக்கை, மெத்தை தலையணை ஆகியவற்றில் ஆஸ்துமா உண்டாக்கும் பூச்சிகள் குடியேற வாய்ப்பு இருப்பதால் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.