அல்லல் தரும் ஆஸ்துமா

Spread the love

ஆஸ்த்மா ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படும் பாதிப்பு ஆஸ்த்மா. கிரேக்க மொழியில் ஆஸ்த்மா என்றால் ‘திணறுவது, தவிப்பது’ என்று பொருள்.

சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்பு / சுருங்குவது, மூச்சு விடுவதில் சிக்கல்களை உருவாக்கும். Bronchial Tube எனப்படும் மூச்சுக் காற்றுக் குழாய்கள் நுரையீரலுக்கு ஆக்சிஜனை எடுத்துக் சொல்லும் குழாய்கள். மூச்சுக் குழாய் தசைகளில் கசிவு ஏற்பட்டு வீங்கி விடும். உப்பிய தசைகள் மூச்சுக்குழாயை சுருக்கி அதன் துவாரத்தின் சுற்றளவை குறைக்கும். தவிர வழக்கத்திற்கு மாறாக Bronchial Tubes அதிக சளியை சுரக்கும். இந்த சளிகளும் கட்டிகள் போல கூடி மூச்சுக்குழாயின் பாதையை அடைக்கும். Wheezing (இழுப்பு) எனப்படும் ஒசையுடனும், சிரமத்துடன் மூச்சு விடுவது நேரும். இது தான் ஆஸ்த்மா. ஆஸ்த்மா Bronchial Asthma என்றும் சொல்லப்படுகிறது.

காரணங்கள்

சுவாசக் குழாய்கள் சுருங்குவதற்கு காரணங்களில் ஒன்று, குழாயின் சுவற்றில் உள்ள ‘லைனிங்’ (Lining) தசைகளின் முகவாய்கள் (Receptors) ஏறுமாறாக, இயங்கி தசையை சுருங்க வைப்பது. குழாய் சுவற்றின் திசுக்களும் அழற்ச்சி, தொற்றினால் வீங்கி, சளியை சுரந்து பாதையை அடைக்கின்றன. குழாய் சுவர்களின் உட்படையின் (Lining) மேல் பாகம் சிதைந்து போகலாம். அதனால் சிதைந்த செல்களும் கூடி குழாயை சுருக்கும். சுவாசக் குழாயில் உள்ள மாஸ்ட் செல்கள் (Mast cells) தான் குழாய் சுருங்குவதை தூண்டிவிடுகின்றன என்று கருதப்படுகிறது.

ஏன் சுவாச குழாய்கள் சுருங்குகின்றன? இதற்கு ‘அலர்ஜி’ – ஒவ்வாமை காரணம். அலர்ஜி ஏற்பட காரணமாக, தூசி, புகை, பெயிண்ட் வாசனை, குளிர்காற்று, பூவின் மகரந்த துகள்கள், கொசுவர்த்தி அருள்கள் பருவகால மாற்றங்கள், வீட்டில் வளர்க்கும் பூனை போன்ற பிராணிகள், மனச்சோர்வு / அழுத்தம், சில உணவுகள் என்று பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். குங்குமம், வாசனை திரவியங்கள், பஞ்சு, சுண்ணாம்பு, ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், உளுந்து, சன்செட்யெல்லோ (Sunset Yellow) எனும் வண்ணம் – இவைகளும் இந்த பட்டியலின் அடங்கும். உணவுகளால் ஆஸ்துமா ஏற்படுவது அபூர்வம்.

அலர்ஜியை உண்டாக்கும் பொருட்கள், சுவாசக்குழாய்கள் சுவர்களில் உள்ள மாஸ்ட் செல்களின் (Mast cells) மேற்பரப்பில் உள்ள இம்யூனோ குளோபின் ‘இ’ எனும் ஆன்டி-பாடியுடன் இணைந்து, ஆஸ்துமாவை தூண்டிவிடும்.

வைரஸ் கிருமிகளும் ஆஸ்துமாவை உண்டாக்கலாம். உடற்பயிற்சி கூட ஆஸ்துமா உள்ளவர்களுக்கு, அதன் தாக்குதலை தோற்றுவிக்கலாம். சீதோஷ்ண நிலையின் திடீர் மாறுதல்கள் ஆஸ்துமாவை தூண்டலாம். கோபதாபங்கள், சோகம் – இதர காரணங்கள்.

அறிகுறிகள்

ஆஸ்துமா தாக்குதல் எப்போது வரும். எவ்வளவு தடவை வரும், எவ்வளவு நேரம் இருக்கும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். முக்கிய அறிகுறி மூச்சுவிடுவதில் சிரமம், இழுப்பு (Wheezing) இவை முக்கிய அறிகுறிகள். ஓசையுடன் கூடிய இழுப்பு, நோயாளின் மூச்சை வெளிவிடும் போது ஏற்படும். நெஞ்சில் கபம் கட்டும். அடுத்தது வரும் தாக்குதல்களை இதே போன்று தொற்றால் வரலாம். ஏன், சாதாரண ஜலதோஷம் கூட ஆஸ்துமாவை தூண்டும். சிலருக்கு தாக்குதல் குறைவாக இருக்கும். இருமல் ஏற்படும் இரவில் அதிகமாகும். அடுக்குதல் தும்மலும் ஏற்படலாம்.

வியர்வை அதிகமான நோயாளியால் அதிகமாக பேசமுடியாது.

ஆஸ்துமாவின் போது இரத்தத்தின் வெள்ளை அணுக்களில் (குறிப்பாக ஈசனோஃபில்ஸ், ‘இம்யூனோகுளோபின் ‘இ’) அதிகமாக காணப்படும்.

ஆஸ்துமாவிற்கு உணவுக்கட்டுப்பாடு

குளிர்ச்சியான ஐஸ்கிரீம், தயிர், மோர், எலுமிச்சை இவற்றை தவிர்க்கவும். அலர்ஜியை உண்டாக்கும் உணவுப்பொருட்களை கண்டறிந்து அவற்றை தவிர்க்கவும். முட்டை, கொய்யாப்பழம், வெள்ளரிக்காய், இவற்றையும் விலக்கவும். உப்பு குறைவாக உணவு நல்லது. உளுந்து, வாழைப்பழம், இனிப்பு இவைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை.

விட்டமின் ‘பி’ 6 உள்ள உணவுகள் ஆஸ்துமாவுக்கு நல்லது. முழுதானியங்கள், லிவர் (மாமிசம்) இறைச்சி, காய்கறிகள் இவற்றிலிருந்து இந்த விட்டமின் கிடைக்கும்.

குளிக்க மட்டுமல்ல, குடிப்பதற்கும் வெந்நீரை உபயோகிக்கவும்.

மலச்சிக்கல் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ளவும். அஜினமோடோ, உணவுக்கு சுவையும், வண்ணத்தை தரும் இராசயனப் பொருட்ளையும் தவிர்க்கவும்.


Spread the love
error: Content is protected !!