உடல், மன பிரச்னை தீர்க்கும் அஸ்வகந்தா

Spread the love

ஆயுர்வேத மருத்துவர்களாலும் சித்த மருத்துவர்களாலும் பெரிதும் பயன்படுத்தப்படும் மூலிகை என்றால் அது அஸ்வகந்தா எனும் அமுக்கிரா தான். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்ல அஸ்வகந்தா இந்தியாவெங்கும் பெரிதும் விளைவிக்கப்படுகின்றது. பல மருத்துவர்களால் பலவிதமான உபாதைகளுக்கும் உபயோகிக்கப் படுவதால் அதிசய மூலிகையாகவே விளங்குகின்றது.

அஸ்வகந்தா பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மருத்துவத்திலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. இந்திய மற்றும் ஆப்ரிக்க மருத்துவத்தில் அஸ்வகந்தா, வீக்கத்தை குறைக்கவும் காய்ச்சலை குணப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சமீப கால ஆராய்ச்சிகளிலிருந்து அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

அஸ்வகந்தா பல ஆராய்ச்சிகளில் ஜின்செங்கை ஒத்த செயல்பாடுகளை உடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சீனா, கொரியா போன்ற நாடுகளில் பயிரிடப்பட்டு உபயோகிக்கப்படும் இந்த ஜின்செங் மிகவும் அதிக விளைவுடையது ஆனால் அஸ்வகந்தா அதே செயல்திறனை குறைந்த அளவில் அளிக்கின்றது.

அஸ்வகந்தா குத்துச் செடியாக 6 அடி உயரம் வரை வளரக்கூடியது அஸ்வகந்தா தக்காளி போன்றது சோலானேசி  குடும்பத்தைச் சேர்ந்தது தக்காளியைப் போன்று மஞ்சள் நிற பூக்களும் சிறிய சிவப்பு நிற பழங்களும் உடைய அஸ்வகந்தா அதிகமாக இந்தியா, பாக்கிஸ்தான், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் மட்டுமே விளையக் கூடியது.

மருத்துவ குணங்கள்

அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுர்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் (கிழங்குகள்) மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. அஸ்வகந்தாவின் பழங்கள் பாலை சீஸ்சாக மாற்ற பாலை கட்டிப்படுத்த பயன்படுகிறது. சமஸ்கிருத மொழியில் அஸ்வகந்தா என்பது குதிரையின் நாற்றம் என பொருள்படும். சீன மருத்துவத்தில் மனிதகுலத்தை வாழ வைக்கும் அதி அற்புத மூலிகை ஜின்செங் ஆகும்.

இது பயிரிட்டால் நிலத்தில் உள்ள அனைத்து சத்துக்களையும் உறிஞ்சி எடுத்து நிலத்தை ஒன்றுக்கும் உதவாததாக ஆக்கி விடும் என நம்பப்படுகின்றது.

அத்தகைய குணத்தை உடைய ‘ஜின்செங்’ மனிதனை நூறு ஆண்டுகள் வாழ வைக்கும் வலிமை பெற்றவை என கருதப்படுகின்றது.

அந்த ஜின் செல்கள் ஒத்த பல குணநலன்கள் அஸ்வகந்தாவில் இருப்பதனால் அஸ்வகந்தாவிற்கு ‘இந்தியன் ஜின்செங்’ என்றும் ஒரு பெயர் உண்டு.

உடல் வலிமையை பெருக்கி, மன அழற்சியை போக்கி பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய சக்தியை அளித்து அனைத்து சூழ்நிலையிலும் போராடக் கூடிய சக்தியை தரவல்லது அஸ்வகந்தா எனும் அதிசய மூலிகை.

ஜெர்மானிய பல்கலை கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் அஸ்வகந்தா பெற்ற ஆராய்ச்சியின் முடிவில் அஸ்வகந்தா மூளையை ஊக்குவிக்கின்றது எனவும், அது கிரஹிக்கும் சக்தியை பெருக்கக்கூடியது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

            பொதுவாக இதனை ஒரு நாளைக்கு 4-6கிராம் வீதம் உட்கொள்ள நல்ல பலன் தெரியும். இதனை கேப்சூல் வடிவத்திலும் ‘டீ’ போல டி டிக்காக்ஷன் போட்டும் பருகலாம்.


Spread the love