நமது நாட்டு உணவுகள் காரத்தில் ஆரம்பித்து இனிப்புகள் வரைக்கும் மிகவும் பிரபலமானது. அதிலும் பாயாசம் மிக அதிகமாகவே பிரபலம். அனைத்து வீடுகளிலும் விஷேசங்களுக்கு இதை செய்வார்கள். அரிசி இல்லையெனில் சேமியாவைப் பாலில் வேகவைத்து, அதில் சர்க்கரை, முந்திரி, திராட்சை சேர்த்து செய்யப்படும் பாயசத்தை வேண்டாம் என்று கூற எவருக்குமே மனம் வராது. வட இந்தியாவில் இந்த பாயசத்தை “கீர்” என்றும் கர்நாடகாவில் “பயசா” என்றும் கூறுவர். இந்த பாயசம் பல இடங்களில் பல விதமாக சமைக்கப்படுகிறது. அதில் மிகச்சிறந்த ஐந்து பாயசங்கள் என்னென்ன என்பதைப் பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.
- பருப்புப்பாயசம் : பாசிப் பருப்பு, வெல்லம், தேங்காய்ப்பால், நெய், முந்திரி, திராட்சை அனைத்தும் சேர்த்து சமைக்கப்படும் இந்த பாயசம் மிகவும் சுவையானது. சிறப்பான ஐந்து பாயசத்தின் அட்டவனையில் முதல் இடம் இந்த பருப்புப் பாயசம்.
- சேமியா பாயசம் : இது செவியன் பாயசம் என்றும் கூறப்படுகிறது. சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்து அதில் பால் சேர்த்து வேகவத்து சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை அனைத்தும் சேர்த்து செய்யப்படுவது தான் இந்த சேமியா பாயசம்.
- பால்பாயசம் : இதை ஆங்கிலத்தில் rice pudding என்று கூறுகிறார்கள். தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தமான இந்த பாயசம் மிகவும் சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.
- அரிசி தேங்காய் பாயசம்: இது ஒரு பாரம்பரியமிக்க பாயசம். அரிசி, வெல்லம், தேங்காய், ஏலக்காய், முந்திரி, திராட்சை அனைத்தும் சேர்த்து வேகவைத்து செய்வது தான் இந்த அரிசி தேங்காய்ப் பாயசம்.
- காரட் பாயசம் : இந்த காரட் பாயசம் சுவையில் மட்டும் இல்லை ஆரோக்கியமானது கூட.
பாரம்பரிய உணவான பாயசம் வெல்லமும், தேங்காய்ப்பாலும், மற்றும் சில சிறப்பு பொருட்களையும் சேர்த்து செய்கிறார்கள். கேரளாவில் சில கோவில்களில் பாயசத்தை பிரசாதமாகவும் தருகின்றனர்.
இவை தவிர இன்னும் பல வகையான பாயசங்கள் இருப்பினும் பாரம்பரிய சிறப்புமிக்க பாயசம் பற்றி தான் நாம் இப்பொழுது இங்கு பார்த்துள்ளோம்.