அரோமா தெரபி சிகிச்சை தெரிந்து கொள்வோம்:
அழகு சாதன நிபுணரான ரெனெ மாரிஸ் கட்டேஃபோசா (Rene Maurice Gattefosa) ஒரு நாள் தனது கையை சுட்டுக் கொண்டு விட்டார். வலியும், எரிச்சலும் தாங்காமல் அருகில் இருந்த லாவண்டர் எண்ணெய் உள்ள பாத்திரத்தில் கையை விட்டுப் பார்த்தார். வலியும், வேதனையும் குறைந்து இரண்டு நாட்களில் தழும்பு, வடு ஏதுமின்றி கை குணமானது. இது தான் அரோமா தெரபி எனப்படும் வாசனை சிகிச்சை முறை. இந்த சிகிச்சைக்கான அடிப்படை எண்ணெய் (Essential Oil) வீரியமிக்க ஒன்றாகும். மூலிகைகளின் இலைகள், மொட்டுகள், பூக்கள், மரப்பட்டைகள், வேர்கள், விதைகள், பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. 1200 வகை தாவர எண்ணெய் வகைகள் உலகெங்கும் அரோமா சிகிச்சையில் பயன்படுகின்றன. இவற்றில் 300 வகை வாசனை எண்ணெய்கள் மிகவும் விசேஷமானவை. மேற்கூறிய அடிப்படை எண்ணெய்களை (Essential Oil) தனியாக பயன்படுத்தக் கூடாது. இதனுடன் நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற துணை எண்ணெய்களுடன் கலந்து தான் Essential Oil உபயோகிக்க வேண்டும். துணை எண்ணெய்களின் அளவில் கால் பாகம் தான் அடிப்படை எண்ணெய்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடிப்படை எண்ணெய்களை பாதுகாக்கும் முறைகள்:
(1) எஸென்சியல் எண்ணெய்கள் விரைவில், எளிதில் ஆவியாகி விடும் என்பதால் அவற்றை நெருப்புக்கருகில், சூடான இடங்களில் வைக்கக் கூடாது.
(2) காற்றுப் புகாத பாட்டில்களில் எஸென்சியல் எண்ணெய்களை விட்டு பத்திரப் படுத்தி வைக்க வேண்டும்.
(3) பாட்டில்கள் பழுப்பு (Amber) நிறத்தில் இருப்பது நல்லது.
(4) உபயோகித்த பின்பு பாட்டில்களை நன்றாக மூடி வைக்க வேண்டும்.
அடிப்படை எண்ணெய்களை பரிசோதித்தல்:
(1) எஸென்சியல் எண்ணெய் தண்ணீரில் கரையாது.
(2) தாவர எண்ணெய், கொழுப்பு, ஆல்ஹகால் இவற்றில் கரையும்.
சில எஸென்சியல் எண்ணெய்களும், பயன்களும்:
(1) ரோஜா எண்ணெய் – எல்லா சருமத்திற்கும் ஏற்றது.
(2) சந்தன எண்ணெய் – முக மசாஜ் செய்வதற்கு ஏற்றது.
(3) மல்லிகை எண்ணெய் – இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
(4) ஜோ ஜோபா எண்ணெய் – சூரிய வெப்பத்தினால் ஏற்படும் கருமையினைக் குணப்படுத்தும்.
(5) லாவண்டர் எண்ணெய் – பூச்சிக் கொல்லி, ஆன்டிசெப்டிக் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சிறு காயங்கள், பருக்களுக்கு நல்லது. தூக்கத்தினை உண்டாக்கும்.
(6) ஜீனிபர் எண்ணெய் – ஆன்டிசெப்டிக், உடல் கொழுப்பை குறைக்கும். பருக்கள் குணமாகும்.
(7) சைப்ரஸ் – சருமத்திற்கு இதம் தரும்.
(8) டீ ட்ரி எண்ணெய் – ஆன்டிசெப்டிக், பூஞ்சைத் தொற்றுகளை நீக்கும்.
(9) பெர்காமெட் எண்ணெய் – ஆண்டிபயாடிக், வியர்வை நாற்றம் நீங்கும்.
(10) அஸ்வகந்தா எண்ணெய் – சரும கிருமிகள், பருக்களை நீக்கும்.
(11) கேலண்டுலர் எண்ணெய் – பூஞ்சைத் தொற்றுகள், தீப்புண்கள், வெடிப்புகள் குணமாக சிறந்த எண்ணெய் ஆகும்.
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள், இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அரோமா எண்ணெய்களை உபயோகிக்கக் கூடாது.
ஜோஜேபா ரொம்ப ஜோருபா…
ஜோஜேபா எண்ணெய் (JoJoba):
அரோமா தெரபி மணம்சிகிச்சையில் அதிக அளவு பயன்படக் கூடிய எஸென்சியல் தைலங்களில் ஜோஜோபாவும் ஒன்று.
ஜோஜோபா செடியின்விதைகளிலிருந்து இத்தைலம் தயாரிக்கப்படுகிறது. தென் அமெரிக்காவில் அரிசோனா, கலிபோர்னியா, மற்றும்மெக்ஸிகோவின் பாலைவனப் பகுதிகளில் விளையும் ஜோஜோபா புதர் செடி வகைகளில் ஒன்று.ஒன்று முதல் இரண்டு மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இதன் தலைப்பாகம் அடர்த்தியாகபுதர் போன்றிருக்கும். இதன் பழ விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.வுஜீதைகளின் எடையில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி எண்ணெய் கிடைக்கும். இந்த விதைகளைபறவைகள், அணில், முயல் முதலியனஉணவாக உட்கொள்கின்றன. இதன் ஆங்கிலப் பெயர் ngaH PignutGoat Nut, Coffee-Berry, Wild Hazel ஆகும்.
ஜோஜோபா தைலத்தின் பயன்கள்:
முடிகளுக்குச் சிறந்த ஈரமூட்டி (Moisturizer)
கெடுதி தரும் பூஞ்சனங்களை (Fungi) அழிக்கும்.
முகத்தை மிருதுவாக்குகிறது. பருக்களைப் போக்குகிறது.