வாசனையால் கேச வளர்ச்சி

Spread the love

அழகு சாதன நிபுணரான ரெனெ மாரிஸ் கட்டேஃபோஸா (Rene maurice Gattefosa) ஒரு நாள் தன் கையை சுட்டுக் கொண்டுவிட்டார். வலியும், எரிச்சலும் தாங்காமல், பக்கத்திலிருந்த லாவண்டர் எண்ணெய் பாத்திரத்தில் கையை விட்டார். வலியும் வேதனையும் குறைந்தது. 2 நாட்களில் தழும்பு, வடு ஏதுமின்றி கை குணமானது. இது தான் இன்று வாசனை சிகிச்சை எனப்படும் (அரோமாதெரபி / Aroma therapy) ன் ஆரம்பம்.

அரோமா சிகிச்சை பூக்கள், மூலிகைகள் போன்றவற்றால் தயாரான முக்கிய எண்ணெய்களில் இருக்கும். “நறுமணத்தால்” செய்யப்படும் ஒரு சிகிச்சை. இந்த சிகிச்சைக்கான எண்ணெய், மூலிகைகளின் இலைகள், மொட்டுக்கள், பூக்கள், மரப்பட்டை, வேர்கள், விதைகள் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. 1300 வகை தாவர எண்ணெய்கள் உலகெங்கும் அரோமா சிகிச்சையில் பயன்படுகின்றன. இவற்றில் 300 வகை வாசனை எண்ணெய்கள் விசேஷமானவை. இந்தியாவில் 10 வகை எண்ணெய்களை இறக்குமதி செய்கிறோம்.

அரோமா சிகிச்சையின் நன்மைகள்

·         அரோமாதெரபியில் உபயோகப்படுத்தப்படும் முக்கிய எண்ணெய்கள், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சனம் போன்ற கிருமிகளுக்கு எதிரி.

·         உடல் நாற்றத்தை போக்கி நறுமணத்தை உண்டாக்கும்.

·         உடல் வீக்கம், வலிகளை குறைக்கும்.

·         மனஅமைதியை உண்டாக்கும். உள்மருந்தாக கொடுக்கப்படுவதில்லை.

·         மனோரீதியான கோளாறுகளுக்கு அரோமா சிகிச்சை நல்ல பயனளிக்கும்.

·         மெனோபாஸினால் வரும் மனக்கோளாறுகளை தடுக்கும்.

·         மற்ற எல்லா வயதினரும், குழந்தையிலிருந்து முதியோர் வரை உபயோகிக்கலாம்.

·         கூந்தல், முடி இவைகளின் அனைத்து குறைபாடுகளையும், முக்கிய எண்ணெய்களால் களைய முடியும்.

அரோமா சிகிச்சையின் முக்கிய (Essential) எண்ணெய்கள், முடிக்கு பலம் தரவும், பொடுகை நீக்கவும், அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கவும், பயன்படுகிறது. மற்ற எண்ணெய்களுடன் கலந்து உபயோகித்தால் சிறந்த பலனை தரும். எளிதில் ஆவியாகும் (Volatile) முக்கிய எண்ணெய்களுடன், சில அடிப்படை எண்ணெய்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல அடிப்படை எண்ணெய்கள் – நல்லெண்ணெய், கடுகெண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், கோதுமை எண்ணெய், தானிய எண்ணெய்கள், தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் போன்றவை. 10 மி.லி. சேர்ப்பது சரியானவை.

முடி கண்டீஷனர்கள்

சாதாரண கூந்தலுக்கு – ஜெரானியம், லாவண்டர், ரோஸ்மேரி

வறண்ட கூந்தலுக்கு – ஜெரேனியம், ரோஸ்மேரி, சந்தனம்

எண்ணெய் செறிந்த கூந்தலுக்கு – சைப்ரஸ், ஜெரேனியம், ஜுனிபர் பெர்ரி, எலுமிச்சம் பழம், ரோஸ்மேரி

மண்டை தோல் (Scalp) கண்டீஷனர்கள்

பொடுகுக்கு – லெமன் கிராஸ், சிடார்வுட் எண்ணெய் (Cedar wood oil), பெர்காமோட் (Bergamot),  ரோஸ் மேரி ( Rose mary),  பீ ட்ரி எண்ணெய் (Tea Tree oil) 10 மி.லி. அடிப்படை எண்ணெய், உதாரணமாக நல்லெண்ணெயும், மேற்கண்டவற்றில் ஒவ்வொன்றிலும் 6 துளிகள் கலந்து உபயோகிக்கலாம்.

அரோமதெரபிக்கேற்ற அடிப்படை, முக்கிய எண்ணெய்களை கலக்கும் விகிதம் – 10 மி.லி. அடிப்படை எண்ணெயுடன் 6 துளிகள் 2 அல்லது 4 முக்கிய எண்ணெய்களை சேர்க்கலாம். எண்ணெய்களை தடவும் இடங்களில் 5 நிமிடமாவது ஊறவைக்க வேண்டும்.

முடி உதிர்தலை தவிர்க்க

முக்கிய எண்ணெய்கள் – செடார்வுட் (Cedarwood), ஜோஜோபா ஆயில், (Jojoba oil) லாவண்டர், எலுமிச்சை, ரோஸ்மேரி, ரோமன் சாமோமில் (Roman chamomile) இவற்றுடன் ஒரு அடிப்படை எண்ணெய்யை சேர்த்து உபயோகிக்கவும்.

முடி செழித்து வளர

1.       தைம் (Thyme) முக்கிய எண்ணெய்- 2 துளி

2.       செடார்வுட் (Cedarwood) எண்ணெய் – 2 துளி

3.       லாவண்டர் முக்கிய எண்ணெய் – 3 துளி

4.       ரோஸ் மேரி முக்கிய எண்ணெய் – 3 துளி

5.       ஜோஜோபா எண்ணெய் – 1/2 தேக்கரண்டி

6.       கிரேப் விதை (Grapeseed) எண்ணெய் – 4 தேக்கரண்டி

முதல் நான்கை நன்கு கலந்த பின், மற்ற இரண்டையும் சேர்த்துக்  கொள்ளவும். தினமும் இரவில் 2 நிமிடங்கள் இந்த கலவையை தலையில் தேய்த்து சூடான துவாலையால் தலையை மூடிக்கொள்ளவும்.

ஜீவனில்லாத முடியை உயிர்ப்பித்தல்

10 மி.லி. ஜோஜோபா எண்ணெய், ஜெரேனியம், பச்சோலி, (Patchouli), சந்தன தைலங்கள் ஒவ்வொன்றும் ஒருதுளி சேர்த்து கலக்கவும். இந்த எண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக கைகளில் தேய்த்து தலையில் மசாஜ் செய்யவும். 5 நிமிட மசாஜிற்கு பிறகு, துவாலையால் தலையை மூடி, 20 நிமிடம் இருக்கவும். பிறகு தலையை அலசவும். வாரம் ஒரு முறை செய்து வர, உங்கள் முடி பளபளக்கும்.

எச்சரிக்கை: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்தக் கூடாது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!