மூலிகையின் பெயர் ஆரோக்கியப்பச்சை
பயன் தரும் பாகங்கள் இலை மற்றும் பழம்.
வளரியல்பு
ஆரோக்கியப்பச்சை மிகச்சிறிய மூலிகைச் செடியாகும். இதன் தாயகம் இந்தியா. இது மணற்பாங்கான இடம், ஆற்றுப்படுகை, நிழல் மற்றும் வனங்களில் நன்கு வளரக்கூடியது. இதன் இலைகள் 20 செ.மீ நீளத்தில் மனிதனின் இதய வடிவில் அமைந்திருக்கும். இலையானது இடத்திற்குத் தக்கவாறு மாறுபடும். பூவானது கரு நீலத்தில் தென்படும். இது அதிகளவில் பழுக்கும் போது தண்ணீரில் மிதந்து செல்லும்.
ஆரோக்கியப்பச்சை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து தென் இந்தியா மற்றும் தென் மேற்கு மலைத் தொடரில் கேரளாவில் அகஸ்தியர் மலையில் காணி என்ற மலைவாழ் மக்களால் தொன்று தொட்டு மூலிக்கையாகப் பயன் படுத்தி வருகின்றனர்.
விஞ்ஞானிகள் 1987 ல் தான் அது பற்றி ஆய்வு செய்துள்ளனர். மலைவாழ் மக்கள் அந்த மூலிகையை ‘ஆரோக்கியப்பச்சை’ என்று குறிப்பிட்டனர். இதன் பொருள் ‘சக்தியைக் கொடுப்பது’ என்பதாகும். இது விதை மற்றும் பக்கக்கிழங்குகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. திசு வளர்ப்பு முறையிலும் முயற்சி செய்துள்ளனர்.
மருத்துவ குணங்கள்
ஆரோக்கியப்பச்சை ஒரு வித சக்தியைக் கொடுக்கிறது. இம்மூலிகையின் (பாதி பழுத்த) பழத்தை உண்பதால், உணவே இல்லாமல் ஆராக்கியத்துடன் வாழ முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இது எடையைக் குறைக்க பயன்படுகிறது. இது ஈரல் சம்பந்தமான நோய், வயிற்றில் ஏற்படும் குடல் புண் ஆகியவற்றை குணமாக்குகிறது. காணி மலைவாழ் மக்கள் ஆரோக்கியப்பச்சையின் பழத்தைச் சாப்பிட்டு ஒரு வாரம் கூட மலையினுள் செல்வர், அப்போது அவர்கள் பசியின்றி நல்ல சக்தியுடன் செயல்படுவர். மேலும் ஆண் பெண் உறவில் அதிக சக்தியைத் தூண்டுவதாக கூறுகின்றனர். இவர்கள் கூற்றை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் சுண்டெலிகளுக்குக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில் உண்மை என்று தெரிந்தது…
சீனர்களிடையே ஜின் செங் எனப்படும் பாரம்பரிய மருத்துவ மூலிகை மிகவும் பிரபலமானது. இதில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வேதிப்பொருட்கள் உள்ளன. இதன் வேர்கள் மூலம் சீன மருத்துவர்கள் பல்வேறு நோய்களுக்கு தீர்வு கண்டனர். மருத்துவ குணமுள்ள ஆரோக்கிய பச்சை மூலிகை மேற்கு மலைத் தொடரில் மட்டுமே உள்ளதை தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.