அதிக பொடுகு உள்ளவர்கள் பொடுதலை இல்லை பவுடரை எடுத்து தேவையான அளவு தண்ணீர் கலந்து அதனுடன் சிறிது தேங்காயெண்ணெய்யும் சேர்த்து குழைத்து குளிப்பதற்கு அரைமணி முன்னதாக தலையில் தடவி பின் அரைமணி கழித்து குளிக்க நல்ல பலன் தெரியும்.
ஆறாத புண்கள் மற்றும் ரணங்களுக்கு பொடுதலை இலையை எடுத்து பச்சையாக அரைத்து பூசிவர ஒரு சில நாட்களிலேயே ஆறிவிடும். நாள்பட்ட புண்கள் எளிதாக ஆறிடும்.
ஒரு கைப்பிடி பொடுதலை இலையை எடுத்து அதனுடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி குடித்துவர வயிற்றுப்புண், செரிமானக்கோளாறுகள் மற்றும் வாயிற்று உபாதைகள் எளிதாக விலகிடும்.