இந்த ஆப்ரிகாட் பழம் முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ரிகாட் பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்விதத்திலும் பாதிக்காமல் அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைத்து உலர் ஆப்ரிகாட் பழம் கிடைக்கின்றது. இந்த பழத்தில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ,சி மற்றும் இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு கப் ஆப்ரிகாட் பழத்தில் 158 மைக்ரோ கிராம் அளவு வைட்டமின் ஏ உள்ளது. இதை சாப்பிடுவதால், நமது உடலுக்கு தேவையான ஊட்டசத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம். இதன் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
ஆப்ரிகாட் பழத்தின் மருத்துவ பயன்கள்:
ஆப்ரிகாட் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறைந்து, மாரடைப்பு (லீமீணீக்ஷீt ணீttணீநீளீ) வராமல் தடுக்கப்படுகிறது. புற்றுநோயையும் எதிர்த்து போராடுகிறது. இந்த உலர் ஆப்ரிகாட் சாப்பிடுவதற்கு முன்பாக சாப்பிட்டு வருவதால் செரிமானம் நன்கு நடைபெறும். மேலும் இது காய்ச்சலையும் குறைக்கிறது.
உலர் ஆப்ரிகாட் மிதமான மலமிளக்கியாக செயல்பட்டு, தேவையற்ற கழிவுகளை அகற்றி செரிமானக் குழாயை சீராக்க உதவுகிறது. இது உடலில் உள்ள ஜீரண திரவங்களுடன் எதிர்வினையாக செயல்பட்டு, ஆல்கலைன் சூழலை உருவாக்கி அதன் மூலம் செரிமான குழாயை சுத்திகரிக்க உதவுகிறது.
ஆப்ரிகாட் பழத்தில் கலோரிஸ், ஹார்போஹைட்ரேட்டிஸ் குறைவாக உள்ளது. எனவே நீரழிவு நோயாளிகளுக்கு ஆப்ரிகாட் பழம் மிகவும் நல்லது. இது இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
அழற்சி பிரட்சனைகளுக்கு ஆப்ரிகாட் பழத்தின் கொட்டை பயன்படுவதாக ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். கல்லீரல் பாதிப்பை நீக்குவதற்கு இந்த பழம் மிகவும் உதவியாக இருக்கிறது.
பொதுவாக வயது ஆனதும் கண் பார்வை மங்குகிறது ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், சிறு குழந்தைகளுக்கு கூட கண்பார்வை மங்களாகுகின்றது. இந்த குறைபாடுகளை நீக்குவதற்கு ஆப்ரிகாட் பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது.
ஆப்ரிகாட் பழத்தில் அதிகளவு நார்சத்து உள்ளது. இது மலச்சிக்கலை நீக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
காய்ச்சலை குறைப்பதற்கு உலர் ஆப்ரிகாட் பழம் உதவுகிறது. இதை சாறாகவோ அல்லது தேனுடன் சிறிது நீர் கலந்து திரவமாகவோ தயாரித்து குடிக்கலாம். இது தாக சக்தியை கொடுக்கிறது.
ஆப்ரிகாட் பழத்தில் அடங்கியுள்ள விட்டமின் ஏ முகப்பருவை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. இதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
குழந்தைகளுக்கு, இந்த ஆப்ரிகாட் பழத்தை சுத்தம் செய்து, இட்லி தட்டில் வேக வைத்தோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தோ மசித்து கொள்ளவும். பின் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும், இறக்கி ஆற விடவும். பின் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து ஊட்டவும். இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சருமத்திற்கான நன்மைகள்
ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதை சாப்பிடுவதால் சருமத்தை சுற்றி ஒரு படலம் உருவாகிறது. எனவே இரண்டு ஆப்ரிகாட் பழங்களை மசித்து சிறிது தயிர் ஊற்றி ஒன்றாக கலந்து பின் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும். இதில் ஒரு டீஸ்பூன் தேனும் சேர்க்கலாம். இதில் உள்ள வைட்டமின் ஏ என்னும் சத்து சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கிறது. மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது.
ஜோ.கி