ஆப்பிள் சீடர் வினிகர் டோனர்

Spread the love

தேவையான பொருட்கள் :

                1. ஆப்பிள் சிடர் வினிகர்

                2. கிரீன் டீ, 

                3. டீட்ரீ எண்ணெய்.

செய்முறை   

இரட்டிப்பு வலுவினைத் தரும் கிரீன் டீயை தயாரிக்க வேண்டும். இதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். அதன்பின்பு அந்நீரினை கிரீன் டீ இலைகள் மீது ஊற்றி நிறம் மாறும் வரை கவனித்து பின்பு வடிகட்டி ஆறவைத்துக்காள்ளவும். இதனுடன் ஆப்பிள் சுடர் வினிகர் மற்றும் டீ ட்ரீ எஸெண்டியல் எண்ணெயையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை கண்ணாடி பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைக்கவும்.

பயன்படுத்தும் முறை

முகத்தை நீர்விட்டுக் கழுவி சுத்தம் செய்த பின்பு இந்த டோனரை முகமும், கழுத்துமுள்ள பகுதிகளில் ஒரு பருத்தித் துணி உதவியால் நன்றாக தடவி, சிறிது நேரம் உலரவைத்தபின் மாய்ஸ்ரைசரை பயன்படுத்துங்கள்.

இவ்வாறு தயாரித்த ஆப்பிள் சீடர் வினிகர் டோனரை ஒரு மாதம் வரை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகித்துக் கொள்ளலாம். இந்த செய்முறை குறிப்பு ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு பங்கு கிரீன் டீ இரண்டு பங்கு என்ற அளவில் நார்மலான சருமத்திற்கு டோனர் தயாரித்துக் கொள்ள கூறப்பட்டுள்ளது. மிக மிருதுவான சருமம் எனில் கிரீன் டீ அளவை அதிகரித்துக் கொள்ளவும். டோனரில் நறுமணம் கமழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மற்ற எஸெண்டியல் எண்ணெயை சேர்த்து தயாரித்துக் கொள்ளலாம்.


Spread the love