முக பொலிவு, கூந்தல் பராமரிப்பு, உடல் ஆரோக்கியம் இவையனைத்திற்கும் ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள் அதிகமாகவே உள்ளது. சருமத்திற்கு பலவகையான நன்மைகள் தரக்கூடிய இந்த வினிகரை எப்படி பயன்படுத்தி பலன் பெறலாம் என பார்க்கலாம் வாங்க…
கடினமான சருமத்தில் இருந்து முகத்தை மென்மையாக கொண்டு வர, ஒரு பக்கெட் சுடுதண்ணீர் எட்டு அவுன்ஸ் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து நன்கு கலக்கவும்.. வெதுவெதுப்பான சூட்டில் இந்த தண்ணீரை குளித்து வந்தால் தோல் மென்மையாக மாறி வருவதை உங்களால் உணர முடியும்.. வினிகரில் இருக்க கூடிய anti-inflammatory properties , எந்த மாதிரியான கடுமையான சூழலில் இருந்தும் தோலை பாதுகாப்பாக வைக்கின்றது.. அதோடு இதில் இருக்கும் alpha hydroxyl acids தோலின் இறந்த செல்களை வெளியேற்றி புதிய செல்கள் உருவாகவும் செய்கிறது…
ஆப்பிள் சீடர் வினிகர் இயற்கையாகவே ஒரு முகப்பரு போராளி என சொல்லப்படுகிறது… தோல் எந்த வகையாக இருந்தாலும், அதை அழகாக வைக்ககூடிய ஆற்றல் வினிகரில் இருக்கின்றது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆண்டிபாக்டீரியல் ப்ராபர்டீசும் முகப்பருவால் ஏற்படும் தொற்றுகளை நீக்கவும், பருக்கள் நீங்கவும் உதவுகிறது… உங்களுக்கு ஆயில் face என்றால் இந்த குளியல் நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்.. இதனால் உங்கள் தோல் மென்மையாவது மட்டுமில்லாமல், பொலிவான சருமத்தையும் பெறலாம்…
இயற்கை முகப்பொலிவு பெறவும், சரும பாதிப்புகளில் இருந்து மீழவும் சில பார்முலாவை அடிக்கடி செய்து வாருங்கள்… வெங்காயத்தை அரைத்து அதில் இருந்து சாற்றை எடுத்துக்கொள்ளவும், இப்போது இரண்டு டீஸ்பூன் வெங்காய சாற்றோடு, ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து, முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து வெறும் தண்ணீரில் முகத்தை கழுவி வாருங்கள்… இதனால் முகச்சுருக்கம் நீங்கி, முகத்தில் வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கும்… ஒரு முட்டையோடு வெள்ளை கருவையும், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினீகரையும் சேர்த்து கலக்கி, அந்த கலவையை முகத்தில் தடவி, இருபது நிமிடம் கழித்து, சாதாரணமான நீரில் கழுவி வர, தோல் இருகுவதோடு, முகம் இயற்கையாக பொலிவு பெரும்..
பொதுவாக சேவ் பண்ணிய பின், முகத்தில் சிறிய கீறல் விழவாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், வழக்கத்திற்கு மாறான சேவிங்க் செய்யும் போது முகம் கடினமாகி விடும்.. இதனால் நாளடைவில் முகம் பொலிவிழந்து சிறிய புள்ளிகள் வர ஆரம்பிக்கும்… இதற்கு சேவ் பண்ணிய பின், ஆப்பிள் சீடர் விநிகரோடு தண்ணீர் சேர்த்து சேவ் செய்த இடத்தில் தடவி வந்தால், அதில் எவ்வித உபாதைகளும் ஏற்படாது.. மேலும் சருமம் பொலிவடையும்… இந்த கலவையை ஒரு பாட்டிலில் அடைத்து வைக்கவும்.. இதை ஒவ்வொரு தடவையும் பயன்படுத்தும் போதும் நலன்கு குலுக்கிய பின் பயன்படுத்தலாம். இது உங்களுக்கு நல்ல மாய்சரைசராவும் இருக்கும்…
இரண்டு பங்கு தண்ணீர் ஒரு பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து முகத்தில் ஸ்கின் டோனர் மாதிரி பயன்படுத்தி வந்தால், உங்களுக்கு கிடைக்கின்ற நன்மைகள் என்னவென்றால், முகப்பரு, கரும்புள்ளி, முகத்தில் வடியும் அதிகப்படியான எண்ணெய் இவையெல்லாவற்றையும் நீக்கிவிடும்… இதில் இருக்க கூடிய ஆசிட்ஸ், முகத்திற்கு இயற்கை பொலிவை தந்து, வெயில் மற்றும் சுற்றுப்புற மாசுக்களில் இருந்து உங்கள் முகத்தை பாதுகாக்கும்…