சருமத்தை காக்கும் ஆப்பிள் சிடர் வினீகர்

Spread the love

ஆப்பிள் சிடர் வினீகர் என்பது ஆப்பிள் பழச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு சாறு. இவ்வகையான வினிகர் புளித்துபபோன ஆப்பிள் பழங்களில் இருந்து செய்யப்படுகிறது. ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள புளிப்புச் சுவை ஆப்பிள் சிடர் வினிகர் கழுத்து மற்றும் முகம் பகுதிகளிலுள்ள சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இவை கண்களில் படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் கண்களில் பட்டுவிட்டால் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். நம் அம்மா, பாட்டி காலங்களில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி சரும பாதுகாப்புக்குரிய அழகு சாதனங்களை தயாரித்துக்கொண்டனர். டோனர்கள் கிளென்சர்கள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அழகு சாதன தயாரிப்புக்களை நாமே தயாரித்துக் கொள்ளலாம். ஆப்பிள் சீடர் வினிகருடன் கிரீன் டீ சேர்த்து தயாரிக்கப்படும் டோனர் ஒன்றை இங்கு நாம் யார் உதவியுமின்றி தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கு முன்பு டோனர்கள் என்ன செய்கிறது. அவை நமக்கு அவசியமா? என்பதை தெரிந்துகொள்வோம்.

நாம் முகத்தை தண்ணீர் கொண்டு நன்றாக கழுவி துண்டினால் ஒற்றிக் கொண்ட பின்பு முகத்திற்கு பூசப் பயன்படுவதுதான் டோனர்கள். நமது சருமம் 5.5 பி.எச் அளவு கொண்டது. பி.எச் மதிப்பு என்பது ஒரு கரைபொருளை கரைக்கும் கரைப்பானாக நீர் இருக்கும் திரவத்தினை மதிப்பிடும் ஒரு மதிப்பாகும். இது 0 முதல் 14 வரையில் மதிப்புகளைக் கொண்டிருக்கும். சுத்தமான நீரின் பி.எச் மதிப்பு 7 ஆகும். இதுதான் நடு நிலை அளவாகும். 7க்கு கீழே இருப்பவை அமிலத்தன்மையைக் குறிக்கும். 7க்கு கீழே உள்ள ஒவ்வொரு மதிப்பும் 10 மடங்கு அமிலத் தன்மையை உடையது. அது போல 7 க்கு மேலே இருப்பவை காரத்தன்மையுடையவை. 7க்கு மேலே உள்ள ஒவ்வொரு மதிப்பும் 10 மடங்கு காரத் தன்மையை உடையது. இதன்படி பார்க்கும்பொழுது நாம் பயன்படுத்தும் பெரும்பாலான கிளென்சர்கள் அதிக பி.எச் மதிப்பில் உள்ளது. இதன் காணமாக உலர் சருமம் ஏற்படுகிறது. மேற்கூறிய பி.எச் அளவைக் குறைக்க டோனர்கள் பயன்படுகிறது. டோனர்களை தயாரிப்பதில் பலவித முறைகளைக் கையாளப்பட்டாலும் ஆல்கஹால் சேர்த்து தயாரிக்கப்படும் டோனர்களை அல்லது அதிக வாசனை தரும் டோனர்களை தவிர்ப்பது நல்லது. இவை செயற்கை மணமூட்டியாக காணப்படுவதால் சருமத்திற்கு எரிச்சலைத் தருகிறது. டோனர்களை நாம் பல்பொருள் அங்காடிகளில் வாங்கி பயன்படுத்துவது எளிதானது தான் எனினும் கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு காரணங்களுக்காக நீங்களே சுயமாக தயாரித்துப் பயன்படுத்துவது சிறந்தது. இதன் மூலம் கடையில் வாங்குவதை விட சொந்தமாக தயாரிக்கும் பொழுது தயாரிப்புச் செலவு குறைவாக இருக்கும். கடைகளில் வாங்கும் டோனரில் அதிகளவு இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இதனை நாம் தயாரித்துவிட முடியும். நாம் தயாரிக்கும் அத்தகைய ஒன்றுதான் ஆப்பிள் சிடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் டோனரானது கீழ்க்கண்ட பயன்களை சருமத்திற்கு வழங்குகிறது.

கரும்புள்ளிகளை சிறிது சிறிதாக மறையச் செய்கிறது.

முகத்தில் விரிவாக காணப்படும் சருமத்துளைகளை சுருங்கச் செய்கிறது.

முகத்தில் பரு தோன்றுவதைக் குறைக்கிறது. பருவளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. சருமத்தின் பி.எச் அளவை குறைக்க உதவுகிறது.

அனைத்துவகை சருமத்திற்கு ஏற்ற வண்ணம் பொருத்தமாக ஒத்துக் கொள்கிறது. வழக்கமான, நார்மலான சருமத்திற்கு ஏற்ற வண்ணம் ஆப்பிள் சுடர் வினிகர், கிரீன் டீ சேர்த்து டோனர் தயாரிக்கும் முறை இங்கு கூறப்பட்டுள்ளது. உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப தேவைப்படும் பொருட்களை குறைத்தோ, அதிகரித்தோ சேர்த்து தயாரித்துக் கொள்ள முடியும். மேலும் டீ ட்ரீ எஸென்டியல் எண்ணெயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பாகும். இதனால் சரும தொற்றுக்கள், சருமக் கோளாறை சரி செய்யும்.


Spread the love