பல ஆய்வுகளில் முதல் இடத்தை பிடித்தது ஆப்பிள்…தற்போது வந்திருக்கும் தகவலின் படி ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறப்படுகிறது. அப்படி என்ன இருக்கின்றது ஆப்பிளில்? வாங்க தெரிந்துகொள்ளலாம்…
முதலில் ஆப்பிளில் இருக்க கூடிய மூன்று முக்கிய விஷயம் ஆண்டி-ஆக்ஸிடண்ட்,ஃபிலேவனாய்டு மற்றும் Dietary Fiber. இந்த ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ், கேன்சர், சர்க்கரை வியாதி மற்றும் இதய கோளாறு போன்ற பெரிய தொல்லையில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.அதோடு ஆக்ஸிடேஷனால் ஏற்பட கூடிய மூளை கோளாறுகளில் இருந்தும் தப்பிக்க உதவுகிறது.
பெண்கள் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் 3௦% கெட்ட கொழுப்புகள் குறைந்து, இதய பிரட்சனை ஏற்படாமல் தடுக்கவும் செய்கிறது. எனவே உடல் எடையை குறைப்பதற்கு ஆப்பிள் சிறந்த உணவாகும்.ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி, நமது உடல் உறுப்புகளுக்கு தொற்றுகளினால் ஏற்பட கூடிய பாதிப்பில் இருந்தும், உடல் செல்களை காக்கிற ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் ஆக செயல்படுகிறது.
ஆப்பிளில் இருக்கும் B-காம்ப்ளக்ஸ் அதாவது ரிபோப்ளேவின், தைமின், b-6, இரத்த செல்களை காத்து நரம்பு தளர்ச்சியையும் குணப்படுத்தும். ஆப்பிளில் இருக்ககூடிய குவர்செடின்,வயிற்றுபோக்கு, சீதபேதி, சிறுநீரக கோளாறு, இதய நோய் மற்றும் இரத்த அழுத்தத்திற்கும் அதிசிறந்த மருத்துவ நண்மைகளை கொடுக்கிறது.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவதனால் இவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.ஆனால் அந்த ஆப்பிள் வாங்கும் போது, அதில் மெழுகாலான பாலிஜ் போட்டிருக்கின்றதா என பார்த்து வாங்க வேண்டும். ஆப்பிளில் இரும்புசத்து இருப்பதினால் இரத்த சோகை வராமலும் தடுக்கின்றது.