ஆன்டி – ஆக்சிடான்ட் உள்ள உணவுகள்

Spread the love

1.       வெங்காயம், ஆப்பிள், டீ, சிவப்பு திராட்சை, திராட்சை ரசம், சில கொட்டைகள் – இவை Polyphenol உள்ளவை.

2.       காரட், கீரைகள், பரங்கிக்காய், சர்க்கரை வள்ளி கிழங்கு, சாத்துக்குடி, ஆரஞ்ச் போன்ற சிட்ரஸ் பழங்கள், லிகோபின் செறிந்த தக்காளி, கொய்யா, தர்ப்பூசணி – இவை காரோடினாய்ட் (Carotenoid) பிரிவுகள்.

3.       விட்டமின் ‘இ’ செறிந்த முளைகட்டிய கோதுமை, சூர்ய காந்தி எண்ணை, பருத்தி, சாப்பிளவர் எண்ணைகள், முட்டை, வெண்ணை, தானியங்கள்.

4.       விட்டமின் ‘சி’ உள்ள – சிட்ரஸ் பழங்கள், முட்டைக்கோஸ், கீரை, தக்காளி.

5.       விட்டமின் ‘ஏ’ உள்ள – வெண்ணை, பால், முட்டைக்கரு, பரங்கி, மாம்பழம், பப்பாளி.

6.       செலீனியம் உள்ள – மீன், முட்டை, கோழி இறைச்சி, பார்லி, வெங்காயம், பூண்டு.

மேற்சொன்னவை தவிர, பொதுவாக பழங்களில் மாதுளம் பழம், நாவல்

பழம், கருப்பு திராட்சை, இவற்றிலும் ஆன்டி – ஆக்சிடான்ட் பொருட்கள் உள்ளன.

உணவின் அளவை குறைத்து, அதே சமயம் சத்துக்கள் குறையாத படி உணவை உட்கொள்ளவும். அதிகமாக உண்டால், அதிக கலோரிகளை சக்தியாக மாற்ற அதிக ஆக்ஸிஜன் தேவை. அதிகப்படி ஆக்ஸிஜனால் ஃப்ரீரேடிகல்கள் அதிகமாகும். இது ஒரு சுழற்சியாக தொடர்ந்தால் தேங்கி விடும். ஃப்ரீரேகல்கள் உடல் நலத்தை கெடுத்து விடும். தவிர அதிக கலோரிகளால் இன்சுலீன் சுரப்பு அதிகம் வேண்டியிருக்கும். இதனால் இன்சுலீன் ‘எதிர்ப்பு’ ஏற்படும். பல பாதிப்புகள் ஏற்படலாம்.

அளவோடு, நடுத்தரமாக உண்ணுங்கள். அதிகமும் வேண்டாம். குறைவாகவும் உட்கொள்ள வேண்டாம். குறைந்த அளவு கலோரிகள் உண்டதால் புற்று நோயை தவிர்க்கலாம்.இனிப்புகளை தவிர்க்கவும். கொழுப்பு உள்ள உணவுகளை ஒதுக்கவும்.

குர்குமின் (Curcumin), க்வெர் சிடின் (Quercetin) இவைகள் உள்ள முறையே மஞ்சள் மற்றும் ஆப்பிள், டீ, வெங்காயம், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் இவைகளும் ணீஸீtவீ – ளிஜ்வீபீணீஸீt anti – Oxidant களாகும்.

மூப்பின் சாயல் உடலில் படியத் தொடங்குகின்ற போதே உணவைக் குறைக்கத் தொடங்கி விட வேண்டும். நன்கு வேக வைக்கப்பட்ட, கொழுப்பில் குறைந்த, எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்களும், காய்கறிகளும், கீரைவகைகளும் உணவின் பெரும்பகுதியை நிறைக்க வேண்டும். இதமான காலை உணவும், மிதமான பகலுணவும் குறைவான இரவு உணவும் கொள்ள வேண்டும். இதனால் உடலின் இரத்தச் சுழற்சியில் கொழுப்பு மிகக் குறைந்த அளவே இருக்கும். அடிவயிறு கனக்காது. ஐந்தடியும் பத்தடியும் நடப்பதற்கு முன் ஆசுவாசப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. நடையுடையும் செயல்பாடும் எளிதாக இருக்கும். இடர் எதுவும் தோன்றாது.

உறக்கம்

முதுமையில் இளமையாக இருக்க, அடுத்த அஸ்திவாரம் தூக்கம். நல்ல தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. முதுமையில் தூக்கம் குறையும் என்பது பொதுவான கருத்து. மருந்துகள், மனக்கவலைகள், மனநோய்கள், சுறுசுறுப்பின்மை, வேலையில்லாமை (குறிப்பாக ‘ரிடையர்’ ஆன பிறகு) போன்றவை காரணமாகலாம். சில முதியவர்கள் பகலில் தூங்கி விட்டு, இரவில் தூக்கம் வராமல் தவிப்பார்கள்.

தூக்கமின்மையால் கஷ்டப்படும் முதியோர்களுக்கு தரமான ஆயுர்வேத மருந்துகள் உள்ளன. திப்பிலிமூல் சூரணம், பிரம்மி, சங்கு புஷ்பம், நித்ரோதயா ரஸா, ஜாதிக்காய் போன்ற பொருட்கள் தூக்கத்திற்கு உதவுபவை. படுக்கு முன் இளம் சூடான தைல மசாஜ், (பாதங்களில் பசும் பால் / நல்லெண்ணை / பசுநெய், தலையில் பிரம்மி, ஜடமான்சி தைலம்) தூக்கத்தை உண்டாக்கும். திரிபால சூரணம் பிணிகள் வராமல் தடுத்து, ஆயுளை நீடிக்கும் ச்யவன பிராசம்’ லேஹியமும் நல்ல பலனை தரும். சரியான ஆயுர்வேத மருத்துவரை அணுகினால் உங்கள் தூக்கப்பிரச்சனைகள் தீர்ந்து விடும். தியானம், யோகா இவைகள் கட்டாயம் உதவும்.

மூன்றாவது அஸ்திவாரம் ஒழுக்கம். ஒழுக்கம் என்றால் நியமம், கட்டுப்பாடு, வாழ்க்கை முறை, நற்பழக்க வழக்கங்கள் செய்யும் மாபெரும் நன்மை முதுமையில் நோய்கள் அண்டாது.

உடலுழைப்பு, உடற்பயிற்சியும் அவசியம் தேவை.

பயன்படுத்தல் இல்லையேல் பயனற்றுப் போகும் என்னும் பொருள் பட Use Or Lose என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழியே உண்டு. படைக்கப்பட்ட பணியிலே ஈடுபடுத்தப்படாத உடலுறுப்புகள் நாளடைவில் நலிவுற்றுச் சிதைந்து போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இடர் மிக ஏற்படுத்தாத நடைமுறை உடலுழைப்பைத் தள்ளவோ தவிர்க்கவோ செய்யக் கூடாது. அத்துடன் இயன்றளவு எளிய உடற்பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

உடலுழப்பையும், உடற்பயிற்சிகளும் உடலை உரு அழியாமல் காக்கின்றன. சோம்பலையும், செயலின்மையையும் போக்குகின்றன. உடலின் இரத்தச் சுழற்சியைச் சீராக்குவதுடன் தேவைக்கேற்ற ஆக்ஸிஜனை உடலுறுப்புக்கு வழங்குகின்றன. தசைகளும் நரம்புகளும் விரைந்து செயல்படுகின்றன. தேவையற்ற கொழுப்பைக் கரைக்கின்றன. மூடப்பட்ட நுண் தமனிகளைத் தந்துகிகளை திறக்கின்றன. சிரையி இரத்தத்தை இதயம் நோக்கி விரைந்து செல்லச் செய்கின்றன.

உடற்பயிற்சி உங்கள் இதய நுரையீரல் செயல்பாட்டைத் திறன்மிக்கதாக்குகிறது. எலும்புகளின் அடர்த்தியைக் கூட்டுகிறது. உடலின் நச்சுக்களை முனைந்து வெளியேற்றுகிறது. அவ்வளவு ஏன்? அளவான உடற்பயிற்சி மற்றும் விரைவான நடைப்பயிற்சி போன்றவற்றின் துணை கொண்டு உங்கள் உடல் மூப்பவைதை இருபது ஆண்டுகள் ஒத்திப் போடலாம். மாறாத இளமை உணர்வையும் பெறலாம்.


Spread the love
error: Content is protected !!