அஞ்சறைப் பெட்டி என்பது தமிழர்களின் சமையல் அறையை அலங்கரிக்கக்கூடிய ஒரு மருத்துவப் பெட்டி என்றே சொல்லலாம். இதன்மூலம் நோயில்லா வாழ்வியல் முறையை முன்னோர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள். சீரகம், சோம்பு, மிளகு, மஞ்சள், வெந்தயம், கடுகு, தனியா, பெருங்காயம், லவங்கப்பட்டை, கிராம்பு ஆகியவற்றைக் கொண்ட அஞ்சறைப் பெட்டியின் மகிமை வார்த்தைகளில் அடங்காது. நாம் இதிலுள்ள மருத்துவ குணங்களையும், பயன்படுத்தும் முறைகளையும் பார்ப்போம்.
உடல் சூடு உள்ளவர்கள் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து தினமும் குடித்து வரலாம். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் உடல் சூடு குறைந்து விடும்.
தினமும் குடிக்கும் நீரில் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலில் உள்ள நீரின் அளவை அப்படியே வைத்திருக்க உதவும்.
கண் குறைபாடு உள்ளவர்கள், படுக்க செல்வதற்கு முன்பு சிறிது பாகல் இலை மற்றும் மிளகை அரைத்து கண்களை சுற்றி பூசி கொண்டு படுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண் குறைபாடு நீங்கி பார்வை நன்கு தெரிய தொடங்கி விடும்.