அலுப்பாக இருக்கிறீர்களா? உணவை மாற்றுங்கள்

Spread the love

காலையில் எழுந்திருக்கும் பொழுதே ஒரு அலுப்புத் தட்டும் சின்னக் குழந்தை முதல் வயதான தாத்தா, பாட்டி வரை எங்கேயும் இது தான் முதல் பிரச்சனை. காலையில் அலுப்பாகத் தான் இருக்கும். ஆனால் என்ன செய்யிறது? வேற வழியில்லை ஸ்கூலுக்குச் சீக்கிரம் போகணும்மா… ஆபிஸ்க்கு நேரமாயிட்டிருக்கு, பஸ்ஸை வேறு விரட்டிப் பிடிக்கணும்… என்ன டிபன் ரெடியா? லஞ்ச் பேக் ரெடியா? பிள்ளைகளும் புருஷனும் மாறி, மாறி விரட்ட பொம்பளைங்க மிரண்டு போயிருப்பாங்க… எல்லாரையும் சாப்பாடு போட்டு, பார்சல் செய்து அனுப்பிய பின்பு மீண்டும் ஒரு அலுப்பும் சோர்வும் தட்டும். என்னடா வாழ்கை இது… பிழைப்பு இது என்று அலுத்துப் போவது மனைவி மட்டும் அல்ல கணவனும் தான். காற்று பிடுங்கப்பட்ட டியூப் போல, ஆபிஸில் நொந்து, நு£டுல்ஸ் ஆன புருஷன் வீட்டுக்கு வந்தவுடன் பொன்டாட்டி காபி போட்டுத் தரலன்னு உடனே சண்டைக்கு வந்து விடுவான். மனுஷன் நான் ஆபிஸில் படற பாட்டை பாத்தாதான் உனக்கு புத்தி வரும் என்று அலுப்பாக உள்ள மனைவியிடம் சண்டை, போட, மனைவியோ இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது… எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்னு கிளம்ப படம் காண்பித்து விடுவாள். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் பாழாய்ப் போன அலுப்பும் சோர்வும் தான். அலுப்பு ஏன் வருது? எப்படி வருதுன்னு யோசனை செஞ்சா பல விஷயங்களைப் பார்க்கலாம். சோர்வு என்பது மனரீதியான விஷயமாகவும், அலுப்பு என்பது உடல் ரீதியான விஷயமாகவும் பிரித்துப் பார்க்கலாம். மனிதனின் தினசரி வாழ்க்கை விடிந்தது தெரியாமல் எழுந்து, இருட்டியது தெரியாமல் படுக்கச் செல்லும் பறபறப்பான வாழ்க்கையாகி விட்டது என்பதால், வீட்டில் இன்று சமையல் செய்யவில்லை அல்லது இயலவில்லையா? வெளியில் சென்று குடும்பமே சாப்பிட்டு விடும். துரித உணவு எனக் கூறப்படும் பாஸ்ட்ஃபுட் பீட்சா, பர்கர், அதிக எண்ணெய் விட்டு பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகள், கொழுப்பு, உப்பு அதிகம் உள்ள உணவுகள், நச்சு உரங்களினால், மருந்தடிக்கப்பட்ட அரிசி, காய்கறி, கீரைகள், பழங்களை மக்கள் சாப்பிடுவதால் உடல் பலவித நோய்களுக்கு ஆளாகிறது. தினசரி இரு வேளையோ, மூன்று வேளையோ, நாம் சாப்பிடும் உணவு சத்துமிக்கதாக, சமச்சீரான உணவுகளை நாம் பட்டியிலிட்டு அதன்படி உணவை சாப்பிட்டு வர வேண்டும். காலை உண்ணும் உணவை காலை 9 மணிக்குள் சாப்பிட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது வெதுவெதுப்பான வெந்நீர்தான். அல்லது அருகன்புல் சாறு. கற்றாழைச்சாறு அருந்தலாம். வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் காலை அல்லது மாலை நேரத்திலாவது ஒரு மணி நேரம் வரை நடைப்பயிற்சி, மெது ஒட்டம் அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். அதன் பின்பு காலையில் குளித்து விட்டு, காலை உணவை முடித்துவிட்டு, பள்ளி/அலுவலகம் செல்லும் போது பாருங்கள்… அவ்வளவு சுறுசுறுப்பு உற்சாகம் -ஏற்படும்.

இரவு 9 மணிக்குள் இரவுச் சாப்பாட்டை முடித்து விடுங்கள். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய எளிமையான உணவுகளை  தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். மறு நாள் மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்காது. இரவுத்து£க்கமும் அஜீரணம்/வயிற்-றுக் கோளாறு எதுவும் இன்றி, ஆழ்ந்த உறக்கமாக அமையும். எக்காரணம் கொண்டும் இரவு 10 மணிக்கு மேல் விழித்திருக்கக் கூடாது. படுக்கச் சென்று விட வேண்டும். பொதுவாக ஒரு மனிதனுக்கு உறக்கமானது குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் போதுமானது.

காலையில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்:

முந்தைய இரவு 9 அல்லது 10 மணிக்குள் படுக்கைக்குச் செல்பவர்கள் மறுநாள் காலையில் 5 முதல் 6 மணிக்குள் விழித்து காலைக் கடன்களை முடித்து விட வேண்டும். இதன் மூலம் கல்லூரி/அலுவலகம் செல்வதற்கு போதுமான அளவு நேரம் கிடைப்பதுடன், தேவையற்ற டென்சன், அவசர அவசரமாக உணவை அள்ளிச் சாப்பிடாமல் ருசித்துச் சாப்பிட வயிற்றுப் பிரச்சனை இருக்காது. காலையில் அலுப்பினைத் தரக்கூடிய நோய்களாக இருப்பது தசைவலி, தலைவலி, அடிக்கடி சிறுநீர் பிரிதல் மற்றும் சப்தமான சூழலில் உறங்குவதால் சரியான து£க்கம் இல்லாது இருத்தல் காணப்படுகிறது. சரியான து£க்கம் ஏற்பட வேண்டும் என்றால், இரவில் 9 மணிக்கு-ள் து£ங்கச் சென்று விட வேண்டும். இரண்டாவதாக எளிதில் செரிக்கக்கூடிய உணவு இரவில் சாப்பிடுதல் வேண்டும். இரவில் சூடான பால் அருந்துவது உறக்கத்தை வரவழைக்கும். இரத்தக் கொதிப்பினால் பாதிக்கப்படுவர்களுக்கு, மூளைக்கு சரியான அளவு இரத்தம் செல்லாமல் இருந்தால், தூக்கமின்மை, தலைவலி, தசை வலி ஏற்படும். சர்க்கரை நோயாளிகளாக இருப்பின், அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் போவதால் படுக்கையை விட்டு பலமுறை எழுந்து சிறுநீர்கழிக்கும் தொந்தரவு ஏற்படும். மேற்கூறிய இரு வகையினரும், கடினமான உடற்பயிற்சி செய்யக்கூடாது பதிலாக மெல்லிய ஒட்டம், நடைப்பயிற்சி மட்டும் மேற் கொள்ள இரவுத்து£க்கமின்மை, தலைவலி, தசைவலி குறையும். மலச்சிக்கல் இருந்தாலும், உடலில் ஒரு சுறுசுறுப்பு இருக்காது. எந்த வேலையிலும் நாட்டமின்மை மற்றும் சோர்வு காணப்படும்.

மலச்சிக்கல் வராமல் இருக்க அதிக அளவு தினசரி குறைந்து 8 முதல் 10 தம்ளர் நீர் அருந்த வேண்டும். கீரை வகை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளாக சாப்பிட மலச்சிக்கல் ஏற்படாது. ஒரு மனிதனுக்கு தினசரி 22 கிராம் அளவு நார்ச்சத்து தேவைப்படுகிறது. அஜீரணப் பிரச்சனை அதிகரிக்க, அதிகரிக்க மலச் சிக்கலும் ஒரு காரணமே! மலச்சிக்கல் காரணத்தினால் இடுப்புவலி, கழுத்துவலி, ஒரு பக்கத் தலைவலியும் ஏற்படுகிறது. மலச்சிக்கலை போக்குவதற்காக அடிக்கடி மலமிளக்கி மாத்திரைகளை உட்கொள்வது தவறாகும். இதன் காரணமாக, உடலில் உள்ள உயிர்ச்சத்துக-ளும் மலத்துடன் வெளியேறிவிடும். இதனால் உடலுக்கு அலுப்பையும் சோர்வையும் தருகிறது.

நீங்கள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்:

ஒரு மனிதனைப் பார்க்கும் பொழுது, அலுப்பும் சோர்வுமாக காணப்படுகிறான் என்றால், அதற்கு இரத்தச் சோகையும் ஒரு காரணமே! இரத்தத்தில் போதுமான அளவு இரும்புச் சத்து, சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை காணப்படவில்லையெனில,¢ படபடப்பு நடக்கும் பொழுது மூச்சு வாங்குதல், இதன் காரணமாக சோர்வாகவும் அலுப்பாகவும் காணப்படும் மனிதன் எந்த ஒரு வேலையிலும் சுரத்தில்லாமல் மந்த கதியில் பணிபுரிவான்.

பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவு இரத்தச்சோகை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். மாதவிலக்குச் சமயத்தில் அதிக இரத்தப் போக்கு காரணமாக மிகவும் சோர்ந்து வலுவிழந்து காணப்படுவார்கள். உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருந்தால் தான் உடல் சுறுசுறுப்பாகக் காணப்படும். அலுப்பு காணப்படாது. இதற்கு இரும்புச் சத்து அவசியம். இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பாட்டில் அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் சந்தையில் கிடைக்கும் அனைத்துக் கீரை வகைகளிலும் இரும்புச் சத்து கிடைக்கிறது. எல்லா காலத்திலும் எளிதில் கிடைக்கக்கூடிய புதினா, வெங்தயக் கீரையையும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முருங்கைக் கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை எல்லாக் காலங்களிலும் சாப்பிடலாம். சிறு தானிய வகைகளில் கம்பு, வரகு, எள்ளு, பயறு வகைகளின். பாசிப் பருப்பு, தோல் உளுந்து மிகவும் நல்லது. இதன் மூலம் உடல் வலிமையையும் சுறுசுறுப்பு கிடைக்கும். இரத்தம் அதிக அளவு ஊறும்.

நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்த வேண்-டும். நரம்புத் தளர்ச்சி காணப்பட்டாலும், மனிதனுக்கு சோர்வும், சோம்பலும் அலுப்பும் காணப்படும். செய்யும் வேலைகளில் தடுமாற்றம், நடுக்கம் ஏற்படும். நரம்புத் தளர்ச்சி இருந்தால், அதற்கு வைட்டமின் ஙி, 2  பற்றாக்குறையும் ஒரு காரணமே!

தினசரி அல்லது வாரமிருமுறையாவது, ஒரிரு பழங்களை சாப்பிடுதல் நல்லது. சிறு தானிய உணவுகளில் அதிக அளவில் எல்லா வகையான சத்துக்களும் கிடைக்கின்றன. மஞ்சள், வெந்தயம், ஜாதிக்காய், இலவங்கப்பட்டை உணவுகளில் சேர்த்துக்கொள்ள நரம்புகளுக்கு வலிமை தந்து இதன் மூலம் நரம்புசார்ந்த உடல் சிக்கல்கள் வராது. உலர்திராட்சை, உலர் அத்திப்பழம், உலர்நெல்லி (அதாவது நெல்லி வற்றல்) போன்றவைகளை உட்கொள்ள, ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை வழங்கி, சோர்வை அகற்றும். அலுப்பை விரட்டி விடும்.

பப்பாளி, மாதுளம் பழம், அன்னாசிப் பழம் புதிதாக வாங்கி வந்து அறுத்து சாலட்டாகவோ, சாறாகவே தயாரித்து உட்கொள்ள அலுப்பு நீங்கும். முருங்கைக் கீரை சூப், கிரீன் டீ (சர்க்கரை, பால் கலக்காதது அருந்துங்கள். மனரீதியான உற்சாகம் பெற, போதிய அளவு குடும்ப உறவுகளுடன் நீண்ட நேரங்கள் தொடர்பில் இருங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்திக்கவும், சிரித்து மகிழ்ந்து, பாரம் குறையச் செய்யுங்கள். வார விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் பூங்கா, அல்லது வெளியூர் சுற்றுலாப் பயணம் செல்லுங்கள். திரைப்படம் அல்லது விழாநிகழ்ச்சிகளுக்குச் செல்வதும், குழந்தைகளின் கல்லி சார்ந்த விஷயங்களை ஆர்வமுடன் கேட்டு ஊக்கப்படுத்தலாம்.

கேள்வி-_பதில்:

ஆர் கண்ணன், வத்ராயிருப்பு அய்யா வணக்கம். ஆயுர்வேதம் டுடே மாத இதழை, கடந்த மூன்று வருடங்களாக படித்து வருகிறேன். உடல் நலம் சார்ந்த பல விஷயங்களை தெரிந்து கொள்ள உங்கள் பத்திரிக்கை உதவுகிறது. எனது வயது 35, நானும் எனது மனைவியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறோம். திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த  ஒரு ஆண்டுகள் தொடர்ச்சியாக செக்ஸில் ஆர்வம் குறைந்து காணப்படுகிறது. விரைப்புத்தன்மை எளிதில் கோன்றுவதில்லை விந்து முந்துதல் வேறு பிரச்சனைத் தருகிறது. இதனால் எனக்கும், என் மனைவிக்கும் செக்ஸில் ஆர்வமும் குறைந்து விட்டது. மேற்கூறிய விந்துமுந்துதல், ஆண்குறி விரைப்புத் தன்மை, செக்ஸ் ஆர்வம் அதிகரிக்க, தாங்கள் கருணையுடன் எளிய மருந்துகளை கூறினால் மகிழ்ச்சியாக

பதில்:

நடைமுறை வாழ்க்கைச் சூழல் மாற்றம், துரித உணவுகள் து£க்கமின்மை, பணிபுரியும் இடங்களில் காணப்படும் நெருக்கடிகள், வீட்டுப் பிரச்சனைகள். கவலை, மன அழுத்தம் காரணமாக ஒவ்வொரு மனிதனும் இப்பொழுதெல்லாம் உடல் அளவிலும், மனதளவிலும் பலவிதப் பிரச்சனைகளால் பாதிப்படைந்துள்ளான். இல்லற வாழ்க்கையில், செக்ஸ் ஆற்றல் இன்றி அல்லது செக்ஸ் ஆர்வம் குறைந்து காணப்படும் நிலை சர்வ சாதாரணமாக உள்ளது. அதில் ஆண்மைக் குறைபாடும் ஒன்று. ஆண்மைக்குறைபாடினை ஆண்கள் வெளியே கூறினால் அவமானம் அசிங்கம் கேலி, கிண்டல் செய்து விடுவார்கள் என்று எண்ணுவதால் போலி மருந்துவர்களிடம் சென்று தவறான சிகிச்சையினால் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வதுடன் அதிக அளவு பணமும் செலவழித்து குணம் பெற முடியாது மன அமைதியையும் இழக்கின்றனர். ஆண்மைக் குறைபாட்டினால் தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. குழந்தைப்பேறும் சிரமம் அல்லது காலதாமதமாகிறது. செக்ஸ் ஆர்வத்தை து£ண்ட உதவும் பல மூலிகைகள் நம் நாட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. நாட்டு மருந்து கடைகளில், இவ்வாறான மூலிகைகளின் மருந்துகள் மருத்துவ ஆலோசனைப் பெற்று, உட்கொள்ளலாம். ஆண்மைக் குறைபாடு ஒரு மனிதனுக்கு எதனால் ஏற்படுகிறது என்பதை மருத்துவரின் பரிசோதனை மூலம் மட்டுமே அறிந்து கொள்ள இயலும். மருத்துவ ஆலோசனைக்குப் பின்புதான் எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டும்.

செக்ஸ் உணர்வை அதிகரிக்க பல மூலிகைகள் இருந்தாலும் அவற்றில் அதிமதுரம், அஸ்வகந்தா, பூனைக்காலி, நெருஞ்சில், தண்ணீர் விட்டான் கிழங்கு போன்றவை மிகவும் சக்தி அளிக்கக்கூடியவைகளாகும்.

அதிமதுரம் உட்கொண்டு வர, முதுமையை தள்ளிவைக்கும். இதன் இலையை நீர் விட்டு கொதிக்க வைத்து, தேனீர் போன்று அருந்தி வர மலச்சிக்கல் நீங்கும். செக்ஸ் உணர்வை மீண்டும் புதுப்பித்துத் தரும் ஆற்றல் உள்ளது. அஸ்வகந்தா என்ற அமுக்கராக் கிழங்கின் வேரினை எடுத்து, நன்கு உலர வைத்து பின்னர் பொடி செய்து கொள்ள வேண்டும். மேற்கூறிய பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் பசுவின் பாலில் கலந்து (இளஞ்சூடான பால்) சிறிது சர்க்கரைச் சேர்த்து இரவு படுக்கைக்குச் செல்லுமுன்பு அருந்தி வர வேண்டும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்தியையும், உடலுறவில் நீண்ட நேரம் நன்கு செயல்படவும் உதவும். குழந்தையின்மைக்கு காரணமான உயிர் அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். நரம்புகளை வலுவாக்கும்.

பூனைக்காலி என்ற மூலிகையின் விதைகள் செக்ஸ் உணர்வைத் து£ண்டுவதில் செக்ஸ் உறவில் ஆற்றலை அதிகரிப்பதில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். இதன் காய்கள் பீன்ஸ் போல இருக்கும். விதைகளின் மேலுள்ள கருப்புதோலை நீக்கி விட்டு, விதைகளை பொடி செய்து கொள்ள வேண்டும். மேற்கூறிய பொடியை தேன் அல்லது பாலில் முன்பு கூறிய அளவில் கலந்து அருந்தி வர ஆண் விந்தில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை பெருகும். பெண்களின் மார்பகங்கள் பருமனடையும். தாய்ப் பால் சுரக்கும். பெண்களின் உடல் உறுப்புகளில் உள்ள தசைப் பகுதிகளை இறுகச் செய்கிறது.

ஆண் உறுப்பின் விரைப்புத் தன்மை விரைவில் ஏற்படுவதற்கு நெருஞ்சில் என்ற மூலிகை மிகவும் சிறந்த ஒன்று. நெருஞ்சி இரண்டு வகைப்படும். பெரு நெருஞ்சில் அல்லது யானை நெருஞ்சி என்றும் சிறு நெருஞ்சில் என்ற சிறியவகை இலை அமைப்புடைய  ஒன்றும் நம் நாட்டில் அதிகம் உள்ளன. இதன் இலைகள் ஆண் உறுப்பின் விரைப்புத் தன்மையை அதிகரிக்கிறது. ஆண்களில் பிராஸ்டேட் சுரப்பி நன்கு வேலை செய்ய உதவுகிறது. பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது. கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கிறது மலட்டுத் தன்மையை நீக்குகிறது. நெருஞ்சில் இலையை நிழலில் உலர வைத்துப் பொடி செய்து கொள்ளவும். நெல்லிக்காய் சீந்தில் போன்றவற்றையும் சம அளவில் எடுத்துப் பொடி செய்யவும். மேற்கூறிய மூன்று மூலிகைகளின் பொடியையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொண்ட பின்பு, அதில் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு நெய் சர்க்கரை சேர்த்து நன்றாக குழப்பிக் கொண்டு தினசரி சாப்பிட பலன் கிட்டும்.

நெருஞ்சில் இலைகளை நன்கு உலர்த்திப் பொடி செய்து கொள்ளவும். மேற்கூறிய பொடியை 5 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, இளஞ்சூடான பசுவின் பாலில் கலந்து தினசரி இரு வேளை அருந்தி வர வேண்டும். இதன் பலனாக ஆண் உறுப்பின் விரைப்புத் தன்மை அதிகரிக்கும். சதாவரி என்று கூறப்படும் தண்ணீர்விட்டான் கிழங்கு மூலிகை ஆண்மைக் குறையை நீக்குகிறது. இதன் சூரணத்தை ஒரிரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு, மிதமான சூடான பசுவின் பாலில் இட்டு கலந்து, தினசரி இருவேளை அருந்திவரலாம் அல்லது இதன் சாறை அருந்திவரலாம். தண்ணீர் விட்டான் கிழங்கின் கொடிகளை அகற்றி விடவும். தண்ணீரில் நன்றாக கழுவி, வெளித்தோலை நீக்கிவிடவும். இதனை கசக்கிப் பிழிந்த சாற்றினை எடுத்து அரை கோப்பை அளவு பசுவின் பால் கலந்து சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து எடுத்து, ஆறிய பின்னர் அருந்தி வர வேண்டும்.

பெண்களின் ஹார்மோன்களை வலுப்படுத்தும். பெண்களின் மார்பகங்களின் அளவும், சதையும் கூடுவதுடன் ஒரு கவர்ச்சியையும் தரும். உறவை அதிகரிக்கும் மற்றுமொரு எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள் ஜாதிக்காய் ஆகும். ஜாதிக்காய் பொடி ஒன்று அல்லது அரை கிராம் அளவு எடுத்துக் கொண்டு தேன் கலந்து, பாதி வேக வைத்த முட்டையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனை உடலுறவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் செக்ஸ் உந்துதல் அதிகரிக்கும். விரைவில் விந்து முந்துதல் இன்றி, நீண்ட நேரம் உடலுறவு கொள்ள இயலும். கணவன், மனைவி இருவரும் இம்மருந்தை உட்கொள்ளலாம். ஜாதிக்காயைப் பவுடராகச் செய்து, நல்லெண்ணெய் சேர்த்து நல்ல பழுப்பு நிறமாகும். வரை வறுத்தெடுக்கவும். சூடு ஆறிய பின்னர், அதை ஆணுறுப்பில் தடவி அரை மணி நேரத்திற்குப் பின்னர் உறவு கொண்டால் நல்ல இன்பம் கிடைக்கும் அதிக அளவில் ஜாதிக்காய்ப் பவுடரை பயன்படுத்தக் கூடாது. அதிக அளவு பயன்படுத்தினால் வாந்தி, மயக்கம், திக்பிரமை முதலியவற்றை உண்டாக்கும்.


Spread the love