அசைவ உணவை சாப்பிடுபவர்கள் மட்டன், சிக்கன் அதிகமாக எடுப்பதை விட மீன் வகைகளை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. ஆனால் எந்த மீனில் அதிக சத்து உள்ளது என அனைவருக்கும் சந்தேகம் இருக்கிறது. அதிக பணம் கொடுத்து வாங்கும் மீனை விட மிகவும் எளிமையாக குறைந்த விலையில் கிடைக்கும் நெத்திலி மீன் வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட நன்மைகள் தெரியுமா? இந்த மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகமாக இருக்கும்.
இந்த மீன் சாப்பிட்டால் உடலில் நிறைந்திருக்கும் கெட்ட கொழுப்புகள் குறைந்து இதய நோய்கள் ஏற்படாமலும் பாதுகாக்கும். நெத்திலி மீனில் புரோட்டீன், வைட்டமின் ஈ, செலினியம் ஒமேகா 3, ஃபேட்டி ஆசிட், மினரல்ஸ் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது. 2௦ கிராம் நெத்திலி மீனில் நமக்கு இரண்டு நாளைக்கு தேவையான மெக்னீசியம் இருக்கிறது. அதோடு 3% கால்சியம், 5% பாஸ்பரஸ் இருக்கிறது. இந்த சத்துக்களால் நமது எலும்புகள் வலுவடைய ஊக்கப்படுத்தும் ஹைட்ரோக்ஸிபைட்டின் வளர்ச்சி அதிகமாகும்.
உடல் செல்களுக்கு மிகவும் அவசியமான இரும்பு சத்து நெத்திலி மீனில் இருப்பதனால் உடலுக்கு தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து இரத்தத்தில் இருக்கும் பாக்டீரியாவை அழிக்கவும் உதவுகிறது.
இதில் இருக்கும் ஒமேகா 3, கொழுப்பு அமிலம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், பார்வை திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த ஒமேகா 3, வாய், உணவுகுழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் போன்ற பகுதியில் ஏற்படும் புற்றுநோயை 5௦% வரை குறைக்கிற ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. நெத்திலி மீனை சாப்பிடுவதினால் மழை காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்துமாவையும் விரட்டுகிறது.