ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத் தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு நிறத் திட்டுக்கள் மறையும். முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின் வெள்ளைக்கரு எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், கருப்பு நிறத் திட்டுக்கள் மறையும். முகம் புத்துணர்ச்சியாக இருக்க ஐஸ் கட்டிகளைகொண்டு முகத்தில் மசாஜ் செய்யலாம்.
உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும் பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும். தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம்.