இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஒரு நிமிடம் நன்றாகக் கண்களை மூட வேண்டும். கண்களில் ஈரப்பதம் குறைந்தால், அவ்வப்போது லேசாகக் கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து, கண்களைத் துடைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நன்றாகக் கண்களைச் சிமிட்டுவது அவசியம்.
இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்கள் பெருகி விட்டதால், இரு சக்கர வாகனங்களும் பெருகி விட்டன. இப்போதெல்லாம் பிளஸ் 2 மாணவர்களே சைக்கிளில் செல்வதில்லை. பைக்கில்தான் செல்கிறார்கள். போக்குவரத்து போலீசார் நிறுத்தினால்.. சால்ஜாப்பு சொல்லி சமாளிக்கிறார்கள். ஐந்து கிலோமீட்டருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு, கை, கால் மற்றும் முகத்தில் கருமை நிறத் திட்டுகள் உருவாகும்.
நாளடைவில் தோலின் பொலிவு மறைந்து, முதுமைத் தோற்றம் வந்துவிடும். இவர்கள் கருமை படர்ந்த இடத்தில், ஏலாதி தேங்காய் எண்ணெயும், பிண்டத் தைலமும் தடவி மசாஜ் செய்யலாம். பிறகு, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தின் உள்ளே இருக்கும் அழுக்குகள் நீங்கி, தோல் பொலிவு அடையும்.