உடல் நலத்திற்கு – அமிருத வல்லி

Spread the love

சிறந்த மூலிகைகளில் ஒன்றான அமிருத வல்லி பெயருக்கேற்றபடி தேவாமிர்தம் தான். ஆயுர்வேதம் கொண்டாடும் இந்த மூலிகை உடல் பலத்தையும், ஆயுளையும் நீடிக்க வல்லது. வியாதிகளிலிருந்து வருமுன் காக்கும். வந்த பின்னும் நிவாரணம் அளிக்கும். சமஸ்கிருதத்தில்

குடூச்சி எனப்படும். குடூச்சி என்றால் நோய்களிலிருந்து காக்கும் காவலன் என்று பொருள்.

இதன் தாவர இயல் விஞ்ஞான பெயர்-டினோஸ்பரா கோர்டிஃபோலியா      

சமஸ்கிருதம்- குடூச்சி. ஹிந்தி-கிலோய். தமிழ்-அமிருத வல்லி

கன்னடம்-அமிருத வல்லி தெலுங்கு-திப்பாதிகா.

ஆங்கிலம்-குலான்சா டினோஸ்போரா

தாவர விவரங்கள்                                                

அமிருத வல்லி சாறுநிறைந்த, பசுமையான படரும் கொடி. உயரமாக படர்ந்து, மெல்லிய நூல் போன்ற விழுதுகளை தரைக்கு அனுப்பும். வேப்பமரங்களை விரும்பி படரும் தாவரம். இந்திய தேசம் முழுவதிலும் காணப்படும். பல்வேறு மண்களிலும், சீதோஷ்ண நிலைகளிலும், வளரும் இயல்புடையது. தண்டுகள் பச்சை நிறமுடையவை, கோடுகளிருக்கும். மரப்பட்டை கிரீம் – வெள்ளை வண்ணத்தில், மிருதுவாக, சொர சொரப்பில்லாமல் இருக்கும்.

வெட்டுச் செடிகள் மூலம் அமிருதவல்லி பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் வேப்பமரம் அல்லது மாமரங்களில் மேல் படரும் செடியாக பயிரிடப்படுகிறது. காரணம் – இம்மரங்களால் கொடியின் மருத்துவ குணங்கள் மேன்படும்.

தண்டுகளில் உள்ள வேதிப்பொருட்கள்

ஸ்டெரால், கார்போஹைடிரேட்கள், டானின், ஆல்கலாய்ட்ஸ், சுண்ணாம்பு-அமிலங்களுக்கு எதிர்மாறான பெர்பெரின், தேவையான எண்ணைகள், கொழுப்பு அமிலங்கள். இவைதவிர கிலாயின், கிலேனின் மற்றும் கிலோஸ்டிரால் இவைகளும் உள்ளன. தவிர சில கசப்பு பொருட்களும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

பொதுவான குணங்கள்

அமிருதவல்லி கருமை, கசப்பு, உஷ்ணமான, குணங்கள் உடையது. உடல் வலிமையை மீட்கும். ஆண்மை சக்தியை அளிக்கும். மூன்று தோஷங்களையும் (வாத, பித்த, கபம்) கண்டிக்கும்.

அமிருதவல்லியிலிருந்து எடுக்கப்படும் மாவுச்சத்து “குடூச்சி சத்வா” எனப்படும். இது ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவர்கள், வேப்பமரத்தை சார்ந்து வளர்ந்த அமிருதவல்லி, அதிக மருத்துவ சக்தியை உடையது என்று கருதுகிறார்கள்

இலைகளில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் இவை உள்ளன.

மருத்துவ பயன்கள்

அமிருதவல்லியின் சிறப்பு குணம், நம் உடலின் நோய் வராமல் தடுக்கும் சக்தியை ஊக்குவிப்பது. இதில் உள்ள பாலிசாக்ரைட்ஸ், தடுப்பு சக்தியை அதிகரிக்கும்.

குடூச்சி சத்வா நல்லதொரு டானிக் பலவீனத்திற்கு உள்ளானவர்களை, மீண்டும் வலிமை பெற உதவும் மருந்து.

பாக்டீரியாவை தடுக்கும் சக்தி அமிருதவல்லிக்கு உண்டு. ரத்தத்தில் உள்ள பாக்டீரியா கொல்லிகளை அதிகரிக்கும். நியூட்ரோபில்ஸ், தைமோசைட்ஸ் இவைகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.

தவிர இதிலிருந்து எடுக்கப்பட்ட ஆல்கஹால் சாறு என்ற பரவலான பாக்டீரியாவை எதிர்க்கும்.

புற்றுநோய் அதுவும் மார்பக புற்று நோய் சிகிச்சை மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கப்பட்டால் அமிருதவல்லி, அம்மருந்துகளின் செயல்பாட்டை அதிகரித்து, மருந்தின் பக்க விளைவுகள் இல்லாமல் பாதுகாக்கும்.

நீரிழிவு, ஜுரம், சர்ம வியாதிகள், நரம்பு மண்டல பாதிப்புகள், ஆர்த்தரைடீஸ், சோகை, மஞ்சள்காமாலை போன்றவற்றுக்கு அமிருதவல்லி அருமருந்தாகும்.

கண் கோளாறுகளுக்கும், அதுவும் நீரிழிவு உண்டாக்கும் கண்பாதிப்புகளை குணப்படுத்தும்.

உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கு அமிருதவல்லி மருந்தாக தரப்படுகிறது. இதயத்தை காக்கும்.

ஒரு நல்ல ஆண்மை பெருக்கும் மூலிகையாகும். தன்வந்திரி நிகண்டு, மூல வியாதி மற்றும் உடல் நமைச்சல் எரிச்சல் இவற்றுக்கு அமிருத வல்லி நல்ல மருந்து என்கிறது. தவிர ஆயுளை அதிகரிக்கும் என்றும் கூறுகிறது.

ஆயுர்வேத, ஏனைய இந்திய மருத்துவ முறைகளில், அமிருதவல்லி தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குஷ்டம், மேஹஜுரம், காசநோய், அருசி இத்யாதி நோய்களுக்கு இந்த மூலிகை மருந்தாகும் என்று சுச்ருதர் கூறியுள்ளார். இந்தியாவில் அப்போது இருந்த ஐரோப்பிய மருத்துவர்களும் இந்த அமிர்த வல்லியின் அருமை பெருமைகளை அறிந்திருந்தனர். இந்த மூலிகை சிறுநீர் இலகுவாக பிரிய மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு நல்லது, என்று அவர்களுக்கு தெரிந்திருந்தது. எலிகளை வைத்து நடத்திய சோதனையில், சிறுநீர் பாதை கற்களை குறைக்கும் தன்மை அமிருதவல்லிக்கு இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது.

யூரேமியா உள்ள நாய்களை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், அமிருதவல்லி, இரத்தத்தில் யூரியா அளவுகளை கணிசமாக குறைப்பது தெரியவந்தது.

அமிருதவல்லி செடியின் தண்டிலிருந்து எடுத்த சாறுடன், தேன் வெறும் வயிற்றில் கலந்து குடிக்க, மஞ்சள் காமாலை விலகும்.

இந்த தண்டு சாற்றுடன் நெய், நல்லெண்ணை கலந்து, மேல்பூச்சாக உபயோகித்தால் ஆர்த்தரைடீஸ் பாதிப்புகள் குறையும்.

மூல நோயாளிகள் வெறும் மோர் குடித்து வந்தாலே நல்லது. மோருடன் அமிருதவல்லியின் தண்டு சாறும் சேர்த்து குடித்தால் மிகவும் நல்லது.

நாட்பட்ட ஜுரத்திற்கு மிளகு, தேன் கலந்த அமிர்தவல்லிசாறு நிவாரணமளிக்கும்.

மண்ணீரல் வீக்கத்திற்கு, அமிர்தவல்லிவேரின் களிம்பு குணமளிக்கும்.

யானைக்கால் வியாதிக்கு நலலெண்ணண கலந்த அமிர்தவல்லி சாறை தடவலாம்.

அமிருதவல்லி கிலாய் சத்வா, குடூச்சி தைலம் போன்ற ஆயுர்வேத மருந்துகளின் முக்கிய பாகமாக உபயோகிக்கப்படுகிறது.

உடல் நலத்திற்கு அமிருதவல்லி, தாவர விவரங்கள், தண்டுகளில் உள்ள வேதிப்பொருட்கள், பொதுவான குணங்கள், மருத்துவ பயன்கள், மூலிகை,

ஆயுர்வேதம், உடல் பலம், வியாதி, குடூச்சி, டினோஸ்பரா கோர்டிஃபோலியா,      

குலான்சா டினோஸ்போரா, மருத்துவ குணங்கள், ஸ்டெரால், கார்போஹைடிரேட்கள், டானின், ஆல்கலாய்ட்ஸ், பெர்பெரின், கொழுப்பு அமிலம், கிலாயின், கிலேனின், கிலோஸ்டிரால், ஆண்மை சக்தி, மாவுச்சத்து, குடூச்சி சத்வா, ஆயுர்வேதா, ஆயுர்வேத மருத்துவர்கள், மருத்துவசக்தி, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பாலிசாக்ரைட்ஸ், பாக்டீரியா கொல்லிகள், நியூட்ரோபில்ஸ், தைமோசைட்ஸ், ஆல்கஹால், புற்றுநோய், மார்பக புற்றுநோய், சிகிச்சை, மருந்து, நீரிழிவு, ஜுரம், சர்ம வியாதிகள், நரம்பு மண்டல பாதிப்புகள், ஆர்த்தரைடீஸ், சோகை, மஞ்சள்காமாலை, கண் கோளாறுகள், நீரிழிவு நோய், கண்பாதிப்புகள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், இதயம், ஆண்மை பெருக்கி, மூலிகை, மூல வியாதி, ஆயுர்வேதம், இந்திய மருத்துவம், குஷ்டம், மேஹஜுரம், காசநோய்,  இத்யாதி நோய்கள், மூலிகை மருந்து, ஐரோப்பிய மருத்துவர்கள், சிறுநீரக பாதிப்புகள், மஞ்சள் காமாலை, ஆர்த்தரைடீஸ் பாதிப்புகள், மூல நோயாளிகள்,

மண்ணீரல் வீக்கம், யானைக்கால் வியாதி, ஆயுர்வேத மருந்து,


Spread the love
error: Content is protected !!