நெல்லி  பொடி

Spread the love

நெல்லி  பொடி பயன்கள்

நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு சுவை தவிர மற்ற ஐந்து வகை சுவையும் அடங்கியுள்ளது. நெல்லிக்காய் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

நெல்லி பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து நன்கு கொதிக்க வைத்து சூடு ஆறியதும் தலையில் தேய்க்கவும். இந்த எண்ணெயை உபயோகிப்பதனால் தலைமுடி கருமையாக பளபளப்புடன் அடர்த்தியாக வளரும்.

நெல்லிக்காய் பிராண வாயுவை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது. இது உடலில் உள்ள கழிவுகளை சிறந்த முறையில் வெளியேற்ற உதவுகிறது.

நெல்லிக்காய் பொடியை குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் சக்தி அதிகரிக்கும். மேலும் வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், ஜீரணக் கோளாறுகள் போன்றவற்றுக்கு நெல்லி சிறந்த மருந்தாகும்.

நெல்லி   பொடி  சாப்பிடும் முறை 

நெல்லி பொடி ஒரு டீஸ்பூன், நாவல்பழப் பொடி ஒரு டீஸ்பூன், பாகற்காய் தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.

நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி இவற்றை 2 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வர சளி, மூக்கடைப்பு நீங்கும்.

உடல் சூடு காரணமாக ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிலக்கு கோளாறுகள், சினைப்பை கட்டிகள் போன்றவற்றிற்கு நெல்லிக்காயை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேன் அல்லது சுடுநீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். இதனால் குடல், மூளை, இருதயம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் பலம் பெறும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் கண் பார்வை திறன் குறைபாடு, முடி உதிர்தல் ஆகியவற்றை சரிசெய்கிறது.

நெல்லிப்பொடி டீ

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய்பொடி    –     ஒரு ஸ்பூன்

வெல்லம்       –          ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், ஒரு தம்ளர் நீர் ஊற்றி மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து இறக்கவும். நெல்லிப்பொடி டீ தயார்.

இதனை  தினமும் ஒரு முறை குடித்து வர உடல் எடை, தொப்பை குறையும். இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை உடனடியாக குறைக்க உதவுகிறது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love