அளவில்லா ஆனந்தத்துக்கு அமுக்ரா

Spread the love

ஆயுர்வேத மருத்துவத்துக்கு விளம்பரம் இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் அலோபதி மருந்துகள் அனைத்து வியாதிகளிலும் கோலோச்சுகின்றன. தாது விருத்தி செய்யும், வீர்யத்தை உண்டாக்கும், ஆண்மை பெருக்கும் மருந்துகளிலும் இதே நிலைமைதான்.  ஆங்கில மருந்துகளுக்கு பக்கவிளைவுகள் உண்டு. ஆனால், ஆயுர்வேத மருந்துகளுக்கோ பக்கவிளைவுகள் கிஞ்சித்தும் இல்லை. ஆண்மை பெருக்கத்துக்கு அமுக்ராகிழங்கிற்கு ஈடு இணை ஏதுமில்லை. அதை பாலில் வேகவைத்து, அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரணமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு தாம்பத்ய சுகம் தாராளமாக கிடைக்கும். அளவில்லா ஆனந்தம் தரும்.

பெரும்பாலான ஆண்களுக்கு தாம்பத்யத்தில் ஈடுபடுவதற்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கு அவர்களுடைய உடல் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நினைத்த உச்சத்தை எட்ட முடியும். அதற்கு அவர்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மனிதர்களுக்கு நீடித்த ஆயுளும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் தரும் அற்புதமான மருந்துகள் ஆயுர்வேதத்தில் உண்டு.

அமுக்ரா கிழங்கை லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம், அமுக்ரா சூரணம், மாத்திரை எல்லா ஆயுர்வேத மருந்தகங்களிலும் கிடைக்கும். இவை எல்லாவிதமான ஆண்மைக் குறைபாடுகளையும் சரி செய்து தாம்பத்ய வாழ்வில் பீடுநடை போடவைக்கும்.

திரிபலாசூரணத்தை இரவில் மட்டும்  பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு பின் பசும்பால்  குடித்து வந்தால் 21 நாட்களில் அபாரமான  சக்தியை ஆண்கள் பெறலாம்.

அதைப்போலவே கருவேலம்பிசின். இதை சுத்தமாக்கி பொடி செய்து நெய்யில் பொரித்து எடுத்து சாப்பிட்டுவர விந்து இறுகும். ஆலம்பிசின், முருங்கை பிசின் போன்றவைகளுக்கும் இந்த அற்புத சக்தி உண்டு. இவ்விரண்டையும் நீரில் 12 மணிநேரம் ஊற வைத்து பின் வடித்து அந்நீரை அருந்தி வர வேண்டும்.

அமுக்ரா கிழங்குடன் உடலுக்கு வலிமையூட்டும் மற்ற பொருட்களும் சேர்க்கப்படுவதால், தாம்பத்ய சுகத்துக்கு மட்டுமல்ல.. ஆரோக்கியத்துக்கும் அது உத்தரவாதம் அளிக்கிறது.


Spread the love