அல்லல்படுத்தும் அல்சிமர்

Spread the love

அல்சிமரைக் குணப்படுத்துவதற்குரிய வழிமுறைகள்\சிகிச்சைகள் என்ன?  

இதற்கு பதில் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒன்றுமே இல்லை என்று தான் கூறவேண்டும். தற்போதைய காலத்தில் நோய் எதனால் ஏற்படுகிறது என்று தெளிவாக கூற முடியாமல் இருக்கும் பொழுது, மருந்து உலகில் உள்ள மருந்துக் கம்பெனிகள் எவ்வாறு ஒரு தீர்வை தர இயலும். பெரும்பாலான நோய்கள் தொற்று நோயாக பரவுவது என்பதுடன் அதனைப் பரப்பும் உயிர்களினைக் கண்டு கொள்வதால் மேற்கூறிய நோய் தொற்றுகளுக்குரிய வழி என்ன என்று கண்டுபிடித்து சரிசெய்ய இயலுகிறது. இவ்வாறு காரணம் அறிந்து கொள்ள முடிந்து, தோன்றும் நோய்களுக்கு நோய் ஆராயும் துறையானது அதற்குரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதும் எளிதாகிறது. ஆனால் அல்சீமர் ஏற்படுகிறது என்பதை அறிய முடியவில்லை என்பதால் சரியான மருந்தோ, மருத்துவ சிகிச்சையோ இல்லை. அல்சீமர் நோயிற்கு சற்றே ஏற்பட்ட பாதிப்பு முதல் மிதான பாதிப்பு நிலை வரை ஏற்படும். பாதிப்புகளுக்கு டோனிபெசில் என்ற மருந்து உதவுகிறது. ஆனால் அது மிக குறுகிய காலத்திற்கு மட்டும் ஓரளவு முன்னேற்றத்தை தருகிறதே தவிர அல்சீமர் நோயின் அதிகரிக்கும் நிலையை தடுத்து நிறுத்துவது கடினம் என்பதுடன் திறன் உபயோகம் 5 மிலி என்ற அளவுக்கு மேலாக அல்லது 10 மி.கி என்ற அளவில் பயன்படுத்தும் பொழுது வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பயமுறுத்தும் கனவுகள், மன அழுத்தம், மூக்கில் நீர் ஒழுகுதல், பசியின்மை, எடைக் குறைவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், ஆர்த்தரைடிஸ் என்ற எலும்பு மூட்டு நோய், தூக்கமின்மை, தசைப் பிடிப்பு,  தலை வலி மற்றும் பல வலிகள் தோன்றுகின்றன.

அல்சீமர் நோயிற்கு இதைத் தவிர வேறு மருந்துகள் இல்லை என்பதால் மருத்துவ உலகம் டோனிபெசிலை பரிந்துரைக்கிறது. ஆனால் முற்றிலும் பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பதை எதிர் நோக்கியே இருக்கிறது.

மாற்று வழிகள்

ஆயுர்வேத மருத்துவத்தில் அல்சீமர் என்ற பெயரில் நோயை குறிப்பிட்டு கூறவில்லை எனினும் மனிதனின் மூளை சார்ந்த, மனரீதியான மற்றும் உணர்வுகளால் உந்தப்பட்டு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க பல விதமான சிகிசிச்சை முறைகளை வழங்கியுள்ளன. அல்சீமர் நோயை பற்றி ஆராயும் பொழுது, மறைக்கப்பட்ட பல்வேறு விஷயங்களை இதனுடன் இணைந்துள்ளது முக்கியத்துவத்தை வெளிக்கொணர முடிந்தது. அவற்றுள் ஒரு சில விஞ்ஞானரீதியாக ஆராய்பவர்களுக்கு முக்கிய ஆதாரங்களாக தரப்பட்டுள்ளன.

1. மூக்கு வழியே செய்யப்படும் சிகிச்சையினால், மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களைக் கடந்து மருந்து மூளைக்கு உடனே சென்று விடுகிறது. இதனால் அல்சீமர் நோய் குணப்படுத்துவதற்கு மூக்கு வழியாக (நாவித்துவாரங்களில் மருந்தை செலுத்தி) செலுத்தப்படும் மருத்துவ சிகிச்சை மிகச் சிறந்த வழியாக இருக்கிறது.

மூளையின் நுழைவுவாசல் என்பது மூக்கு என்ற உறுப்பு தான் என்று ஆயுர்வேதம் தெளிவாக கூறுவதுடன் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும் நோய்களை நாசித்துவார வழி மருத்துவ சிகிச்சையில் மட்டுமே வெற்றிகரமாக குணப்படுத்த இயலும் என்றும் கூறுகிறது.

நாசித்துவாரம் வழியே செய்யப்படும் மருத்துவ சிகிச்சையினால் பலவித நன்மைகள் உள்ளது என்று மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளின் (அமெரிக்க) கழகம் தனது ஆராய்ச்சிக் கட்டுரை வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளது. உடலில் மூளைப் பகுதி உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்ய அவசியமில்லாததும், மிக விரைவாக மருத்துவ சிகிச்சை செய்ய அவசியமில்லாததும்,  மிக விரைவாக மருத்துவ சிகிச்சை செய்ய முடியும் என்பதையும் முறையாக இரத்தம் கொண்டு செல்லும் கடத்திகளை தாண்டி மத்திய நரம்பு மண்டல இயக்கத்தில் சேர்வதால், வேறு பக்க விளைவுகள் ஏதுவுமின்றி ஒரு சிகிச்சையாக நாசித்துவார வழி அமைந்துள்ளது என்று ஆராய்ச்சிக்  கழகம் விரிவாக கூறியுள்ளது.

முதுமை ஒரு இனிய பயணமே!

மனிதர்களின் சராசரி ஆயுள் காலமானது, சென்ற நூற்றாண்டை விட இப்பொழுது கூடி இருந்தாலும் சுமார் 50 வயதை தாண்டிய பின்பு பெரும்பாலும் நோயும், கவலையுமாகத்தான் உயிர் வாழ்ந்து மருத்துவத்திற்காக செலவு செய்வது தான் அதிகமாக காணப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் குறைவாகவே நோய்வாய்ப்பட்டவர்களாக இருந்து மரணத்திற்கு சில நொடிகள் வரை ஆரோக்கியமான உடலும் மனநிலையுமாக இருந்தவர்களே அதிகம்.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்தால், மனிதனின் வாழும் சூழல், உணவு பழக்கவழக்கங்களில் காணப்படும் மாற்றங்கள், பணிபுரியுமிடங்களில் காணப்படும் மன அழுத்தம், அதன் காரணமாக உடல் களைப்புகளே…

மனிதர்களுக்கு முதுமையில் ஏற்படும் உடல் உபாதைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை என்று கணக்கிட்டால, அதில் முக்கியமானவைகள் சுமார் ஒன்பது, பத்து வியாதிகள் பொதுவாக பலரிடம் காணலாம். அவை…

1. நீரிழிவு

2. இதயநோய்

3. குறை/உயர் இரத்த அழுத்தம்

4. அல்சீமர்

5. மூட்டுவலி

6. கண்புறை

7. மலச்சிக்கல்

8. பிரஸ்டேட் சுரப்பி விரிவடிதல்

9. மெனோபாஸ்

10. இரத்தச்சோகை

11. எலும்பு தேய்மானம்

12. காசநோய்

13. உடல் பருமன்

14. சிறுநீரக்கற்கள்

15. பித்தபை கற்கள்

16. சிறுநீர் அடிக்கடி கழித்தல்

17. தலைச்சுற்றல், நிலை தடுமாறுதல் மற்றும் கீழே விழுந்து அடிபடுதல்

18. பக்கவாதம்

19. வலிப்பு நோய்

20. எடை இழப்பு

21. பார்க்கின்ஸன்

22. எய்ட்ஸ்

23. புற்றுநோய்

24. காது கேட்கும் திறன் குறைதல்

25. பற்கள் பலவீனம் மற்றும் உடலுறுவுப் பிரச்சனைகள் என்று கூறிவிடலாம்.

உடல்ரீதியாக இவ்வளவு நோய்கள் காணப்படுகிறது என்றால் மனரீதியாக மனநலம் பாதிப்பு ஒரு நோயாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு நோயும் தோன்றுவதற்கு என்ன காரணம்? அதற்குரிய மற்றும் வராமல் இருப்பதற்குரிய வழிமுறைகள், உண்ணும் உணவுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது, விழிப்புணர்வு பெறுவது அவசியமாகும். நமது ஆயுர்வேதம் டுடே மற்றும் உணவு நலம் மாத இதழை தொடர்ச்சியாக படித்துவருபவர்கள் மேற்கூறிய விழிப்புணர்வை படித்து தெரிந்திருக்கலாம். முக்கியமாக இங்கு கூறப்பட்ட முதல் 10 நோய்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு

பொதுவாக ஒரு மனிதனின் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவு 200 mg/dl என்ற அளவு அல்லது அதற்கு மேல் காணப்பட்டால் முதுமையில்  நீரிழிவு நோய் வந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். வயது அதிகரிக்க, அதிகரிக்க இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் சிறிது சிறிதாக கூடும். முதுமைக் காலத்தில் சர்க்கரையினை வடிகட்டும் திறனானது சிறுநீரகத்தில் குறைந்து காணப்படும் என்பதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சிறிதளவே கூடினாலும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்குரிய அறிகுறிகளாக சிலவற்றை தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன் சிறிதளவு சந்தேகம் இருப்பினும், உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

அதிக தாகம், அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், எடைக்குறைவு, கண் புரை நோய், சிறுநீரகம் பாதிப்படைவது. சிறுநீர்த்தொற்று, மாரடைப்பு போன்றவைகள் காணப்படுகிறதா? நீரிழிவாக இருக்கலாம்.

நீரிழிவைத் தடுக்க என்ன செய்யலாம்?

நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கைகள் மிகவும் எளிமையானவை தான்.

1. நீங்கள் சரியான, தேர்ந்தெடுக்கப்பட்ட உணவை மட்டும் எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டை கொண்டு செல்ல வேண்டும்.

2. உங்கள் உடல் எடை மற்றும் இரத்தப் பரிசோதனையை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்.

3. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தால், ஹைப்போக்கினைசீமியா என்ற நோய் தாக்கம் ஏற்படும். இதன் காரணமாக உடலில் திடீரென ஏற்படும் நடுக்கம், அதிக வேர்வை, பதற்றம், பசி, களைப்பு, படபடப்பு தெரிந்து கொண்ட உடனேயே குளுக்கோஸ் கலந்த பானம் அல்லது சாக்லேட் என்று ஏதாவது ஒன்றை வாயில் இட்டு சுவைத்து விட மீண்டு விடலாம். இது உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடியது என்பதால் உடனே மருந்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.  

இதயநோய்

இதயம் சார்ந்த நோய்களை உயர், குறை இரத்த அழுத்த நோய், இதயத் தமனிக் குழாய் பிரச்சனைகள், மாரடைப்பு போன்றவைகளாக பிரிக்கலாம். முதுமையடையும் காலம் மனிதர்களின் இரத்தக்குழாய்களின் தடிமன் குறைந்து (சுருங்கி) இரத்தம் எளிதாகச் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, திடீரென்று இதயம் செயல்படாமல் நின்று விடும். இதனையே நாம் மாரடைப்பு என்கிறோம். மாரடைப்பு ஏற்பட காரணங்கள் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு, மது அருந்துதல், புகைப்பிடித்தல், அதிக கொழுப்பு, உடல் உழைப்பின்மை, மன அழுத்தம் ஆகும்.

மூட்டு வலி

சுமார் 60 வயதிற்குப் பின்பு மனிதர்களிடம் ஏற்படும் மூட்டு வலிக்கு குருத்தெலும்புகளில் ஏற்படும் மாற்றமே காரணமாக உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால், அதிக எடையைத் தாங்கும் முழங்கால் மற்றும் இடுப்பு எலும்பு மூட்டுகளில் அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. மூட்டுகளில் இருக்கும் ஜவ்வில் பாதிப்பு ஏற்படுகிறது. வயதான காலத்தில் ஏற்படும் மூட்டு வலியை எடைக்குறைப்பால், உடற்பயிற்சி செய்வதால் குணம் காணலாம். மூட்டு மாற்று சிகிச்சை, வலி நீக்கும் மருந்துகள் பிசியோதெரபி சிகிச்சைகளால் குணப்படுத்தலாம்.

எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு

வருடங்கள் அதிகரிக்க, அதிகரிக்க மனிதர்கள் உடலில் உள்ள எலும்புகள் பலவீனம் அடைகின்றன. எலும்பின் அடர்த்தி குறையும். எலும்பின் கட்டமைப்பு மாறுபாடு அடையும். எலும்பின் திசுக்கள் தங்கள் வலிமையை சிறிது சிறிதாக இழப்பதை எலும்புத் தேய்மானம் என்று அழைக்கிறோம். எலும்புத் தேய்மானம் காரணமாக எலும்பு முறிவு என்பது பொதுவாக வயதானவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. எலும்புத் தேய்மானம் ஏற்படுவதற்குரிய காரணங்களும் தடுப்பு முறைகளும் நாம் அறிந்து கொள்வோம்.

முக்கியமாக முதலில் கால்சியம்  சத்துக் குறைபாடு, உடல் உழைப்பின்மை, புகைப்பழக்கம், வலி மருந்துகள் (ஸ்ட்ராய்டு வகை), வயது மூப்பு, வைட்டமின் ’டி’ சத்துக் குறைவு, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், யோகா மற்றும் உடற்பயிற்சிகள் தினசரி செய்து வர, எலும்புகள் உறுதி பெறும். மது அருந்துதல், புகை பிடித்தல், வெற்றிலைப்பாக்கு போடுவதை நிறுத்தி விடுதல் அவசியம். தினசரி உணவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் காணப்படும் காய்கறிகளை தேர்ந்தெடுத்து சேகரித்துக் கொள்ள வேண்டும். ராகி, கொள்ளு, கடலைப் பருப்பு, பச்சைப் பயிறு, கருப்பு உளுந்து, ராஜ்மா, சோயா பீன்ஸ், கேரட், தேங்காய், வெல்லம், பேரிச்சம்பழம், பால், பாலாடைக்கட்டி,அகத்தி, பச்சைக் காய்கறிகள் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளே, எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.

கண் புரை (கேட்ராக்ட்)

கரு விழியில் ஒளி ஊடுருவும் தன்மையைக் குறைக்கும் ஒரு நிலையாகும். கண்ணில் திரை விழுந்து விட்டது என்று கூறுவார்கள். வயதானவர்களுக்கு ஏற்படும் கண் புரை, முதலில் சற்று ஒளி புகாத்தன்மையுடன் துவங்கி, லென்ஸ் பொறுத்து, பின்னர் முழுமையாக ஒளி புகா வண்ணம் சுருங்கும் தன்மையாகும். கேட்ராக்ட் என்பது லத்தினில் நீர் வீழ்ச்சி என்பதற்கான சொல் நீணீtணீக்ஷீணீநீt என்பதில் இருந்து வந்தது. கண் புரை முற்றிய நிலையில் பார்வை முற்றிலும் குறைபடுகிறது. இரவு நேரங்களில் வண்டி ஓட்டுபவர்கள் எதிரே வரும் வாகனங்களின் ஒளியால் தடுமாறுவர். சர்க்கரை நோய் காரணமாக புரை தோன்ற வாய்ப்புகள் உண்டு. வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளவும். கண் புரை நோய் வராமல் தடுக்க பசலைக் கீரையை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 5 நிமிடம் கழித்து வடிகட்டி, அக்கீரையை மை போல அரைத்து, அவித்த நீரில் கரைத்து உப்பு, மிளகு சேர்த்து கரைத்து தினமும் அருந்திவர வேண்டும்.

மலச்சிக்கல்  

வயதானவர்களுக்கு ஜீரண மண்டலத்தில் ஜீரண உறுப்புகளின் செயல்கள் சரிவர நடைபெறாமல் இருக்கும். இதன் காரணமாக தினசரி மலம் கழிப்பது சிரமமாக காணப்படும். மலம் கழித்தாலும் அது மிகவும் கெட்டியாக இறுகி காணப்படும். வயதானவர்கள் தினசரி உணவில் அதிகம் நார்சத்துக்கள் அடங்கிய கைக்குத்தல் அரிசி, ராகி, கொள்ளு போன்றவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நார்சத்துக்கள் குறைவான உணவு மட்டுமின்றி குடல் பகுதியில் ஹர்னியா என்றழைக்கபடும் குடல் இறக்கம் மற்றும் மூல நோயும் ஒரு காரணமாக உள்ளது. தைராய்டு சுரப்பி, சுரத்தல் குறைவாக இருப்பது, வலி நிவாரணி, தூக்க மாத்திரை, மன அழுத்தம், உடல்பயிற்சி இன்றி அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து / நின்று பணி செய்வது போன்றவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுகின்றது.

மலச்சிக்கலை தடுக்கும் எளிமையான முறைகள்: 

தினசரி 2&-3  லிட்டர் அளவிற்கு குறையாமல் நீர் அருந்தவேண்டும். திட உணவுகளை விட திரவ வகை உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெது ஓட்டம் செய்து வருவது நல்லது. நார்சத்து அதிகமுள்ள உணவுகளில் கீரை, வாழைத்தண்டு, சுண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். பழ வகைகளில் மாம்பழம், கொய்யா, அத்திப்பழம், பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.

பிராஸ்டேட் சுரப்பி விரிவடைதல்:

இது வயதானவர்களில் ஆண்களுக்கு ஏற்படும் முதுமை கால நோய்களில் முக்கியமான ஒன்று. ஆண்களின் இடுப்பு பகுதியில் அமைந்துள்ள பிராஸ்டேட் சுரப்பிகளில் காணப்படும் தசைநார்கள் விரிவடைவதையே பிராஸ்டேட் சுரப்பி விரிவடைதல் என்று கூறுகின்றோம். இதன் காரணமாக வயதான ஆண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகின்றது.

பிராஸ்டேட் சுரப்பி விரிவடைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் என்ன? 

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, குறைந்த அளவு அல்லது அதிக அளவு சிறுநீர் கழிக்கும் பொழுது வலி உணர்தல், அடிவயிற்றில் வலி உணர்தல்.

பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருத்துவத்தில் பலவித மருந்துகள், மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் சிறு நெருஞ்சி, பெரு நெருஞ்சி என்று இரு வகைகளும் பயன்படுகின்றன.

மெனோபாஸ்:

மாதவிலக்கு முற்றிலும் நிற்றலையே இவ்வாறு கூறப்படுகின்றது. வயதான ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் எவ்வாறு பிரச்சனை தருகிறதோ அதுபோல பெண்களுக்கு மாதவிலக்கு முற்றிலும் நிற்கும் காலம் பிரச்சனை தருகிறது.

மெனோபாஸ் காலம் என்று எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

தலைவலி, களைப்பு, தலைச்சுற்றல், படபடப்பு, சரியான தூக்கமின்மை, மனநிலையில் மாறுபாடு அடைதல், மார்பகம், பிறப்புறுப்பு போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுதல் அடிக்கடி சிறுநீர் கழிதல் காணப்படும். மெனோபாஸ் காலத்தில், பெண்கள் அதிகம் கவனிக்க வேண்டியது, எலும்பு தேய்மானம் அதிகம் ஏற்படும் என்பதால் கால்சியம் சத்துக்கள், வைட்டமின் ‘டி’ சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும். எளியவகை உடற்பயிற்சி, தியானம், யோகா செய்துவருவதுடன் ஓய்வு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மன அழுத்தம், மனச்சோர்வு, எரிச்சல், களைப்பு போன்றவற்றிலிருந்து விடுபட இயலும். மாதவிலக்கு நின்ற பிறகும் இரத்தம் வெளியேறினால் மருத்துவரை அணுகி, தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொன்றும் ஒருவிதம் நாம் உண்ணும் உணவுகளில்     

நாம் அன்றாடம் சாப்பிடும் ஒவ்வொரு வகை உணவுகளுக்கும் பதார்த்த குணங்கள் உண்டு  என்பதுடன் அவைகளை ஜடம், வாயு, உஷ்ணம், சீதளம், பித்தம், சாந்தம், சிலேத்துவம் என ஆயுர்வேத மருத்துவ நூல்கள் பிரித்திருக்கின்றது. மனித உடலானது சதை, கொழுப்பு, எலும்பு, இரத்தம், நார், நரம்பு, சதை தோனம், ஈரல், மூளைப் பொருள் என்று பலவற்றால் ஆனது. ஒவ்வொரு உறுப்புகளின் பலமும், வளர்ச்சியும், நாம் சாப்பாட்டில் எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் தான் உள்ளது. சரிவிகித உணவாக அனைத்து சத்துக்களும் அடங்கிய ஒன்றை நாம் அறிந்து தினசரி சாப்பிடுதல் அவசியம். தென்னிந்தியாவில் பெரும்பாலானோர் அரிசியினை காலை, மதியம் மற்றும் இரவு என்று மூன்று வேளைகளிலும் பல்வேறு விதமான சமையல் செய்து சாப்பிடுகிறார்கள். அரிசியில் உள் தவிடு, வெளி தவிடு, முனை என்று பல்வேறு பாகங்கள் உண்டு. உடலை பாதுகாக்க இயற்கையில் இதில் புரதம், சர்க்கரை, வைட்டமின்கள், தாது உப்புக்கள் என்று பல உள்ளன. நெல்லின் மேல் உமியை மட்டும் நீக்கி மற்றவற்றை உண்ணுதல் வேண்டும்.

அரிசியை சமைக்கும் பொழுது வடிகட்டிய நீரை பசுமாட்டிற்கு இன்றும் வழங்குவதுண்டு. அதில், உப்பு சிறிதளவு போட்டு அருந்துபவர்களும் உண்டு. மிகவும் சத்தான பானமாக அக்காலத்தில் பெரியவர்கள் கூறுவதுண்டு அரிசியில் மேல்பாகங்களில் தான் புரதம் அதிகமாக உள்ளது. அரிசியின் மேல்பாகங்களில் உள்ள சத்தை மிஷினில் அரைப்பதால் புரதத்தில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விடுகிறது. பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்கள் பாதியளவு இழப்பு ஏற்படுகிறது. வைட்டமின் பி சத்து 75% கழிக்கப்படுகிறது. புரதம் குறைவதால் உடலில் சதை வளர்ச்சி குறைந்து விடுகிறது. கால்சியம் சத்து குறைவால் எலும்பின் பலம் மற்றும் வளர்ச்சியை பாதிக்கிறது. இரும்புசத்துக் குறைபாட்டால் இரத்தத்தில் சிகப்பணுக்கள் குறைந்து இரத்த சோகை நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த சிகப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை நுரையீரலிருந்து தசைகளுக்கு கொண்டு போகிறது. இது குறைந்து கொண்டே வந்தால் துர்கதியே ஏற்படும். வைட்டமின் பி குறைவினால் சொறி, சிரங்கு, சரும நோய்கள் ஏற்படுகின்றன.

இளைஞர்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களைக் காட்டிலும் புரதச்சத்து அதிகம் தேவை. கர்ப்பமாக இருக்கும் காலத்திலும், குழந்தை தாய்பால் அருந்தும் காலத்திலும் தாய்மார்களுக்குப் புரதம் அதிகம் தேவையாக உள்ளது. அது பாலில் உள்ளது. பாலில் இருக்கும் அமினோ அமிலம் தான் சத்துக்களை புதுப்பிக்கிறது. புரதத்தின் அளவு எருமை பாலில் 100-க்கு 4.75%, பசும்பாலில் 100-க்கு 3.50% உள்ளது. இப்புரதமானது தானியம் மூலம் கிடைக்கும் புரதத்தை விட ஆறு மடங்கு அதிகமுள்ளது.

புரதம் அதிகம் உள்ள சில உணவுகள்   

உளுந்து              100-க்கு 24%

துவரம்பருப்பு         100-க்கு 22.5%

வறுத்த கடலை       100-க்கு 22.5%

சோயாபீன்ஸ் கொட்டையில் 100-க்கு 43%

வறுத்த நிலக் கடலையில் 100-க்கு 32% 

நாம் உண்ணும் உணவில், தினசரி ஒரு மனிதருக்கு 2600 கலோரி வெப்பம் கூட கிடைப்பது இல்லை என்பதால் மேலே கூறிய பருப்பு வகைகள், பால் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முழுக் கோதுமையை கால் கிலோ அரைத்த மாவு, அதில் மூன்றில் ஒரு பங்கு கடலை மாவு இவை இரண்டையும் கலந்து பசும் பால் சேர்த்து பிசைந்து சுமார் 30 கிராம் வெண்ணெய் அல்லது நெய் சேர்ந்து போதுமான உப்புப் பொடியும் போட்டு, பெரிய உருண்டைகளாக உருட்டி தட்டையாக்கி, ரொட்டியாக்கிச் சுட்டு, சிறிது வெல்லப் பொடி கலந்து உண்ணும் பொழுது, ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்குத் தேவையான கலோரி வெப்ப ஆற்றல் மற்றும் இதரச் சத்துக்களும் கிடைத்துவிடுகின்றன.

பா. முருகன்


Spread the love