அறுபது வயதிற்கு மேல் அல்சமர்ஸ் எனப்படும் மறதி வியாதி ஒருவரைத் தாக்கும். குறிப்பாக பெண்களைத் தாக்கும். குழப்பம், தெளிவற்ற சிந்தனைகள், அடிக்கடி மறத்தல், அல்சமர்ஸ் வரக்கூடிய அறிகுறிகள்.
ஒருவரின் மனதைப் பாதிக்கும் வியாதிகளை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால், குணப்படுத்த முடியும். Dementia யெனப்படும் ஞாபக மறதி வியாதி அல்சமர்சிடமிருந்து மாறுபட்டது. எவ்வாறு இவ்வியாதியை போக்குவது? மருந்துகளின் விளைவுகள்யென்ன என்பதையும் பார்ப்போம்.
வைட்டமின் குறைபாடுகள், மனச்சிதைவு, சிறுநீர் குழாயில் உபாதைகள், தைராய்டு சுரப்பி, சரியானபடி செயல்புரியாமல் இருத்தல், போன்றவை தெரியும். மருந்துகள் உண்டால் அதன் விளைவுகள் என்ன? ஆன்டிக்ளோரினர்ஜிக் மருந்துகள், டிக்ஆக்சின் மருந்துக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம்.
சரியானபடி மருத்துவ பரிசோதனை செய்து, நல்ல சிகிச்சைபெற்றால் மனதில் குழப்ப நிலை நீங்கும். ஞாபக மறதி மறையும் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றினால் மூளையிலுள்ள செல்கள் வலுப்பட்டு ஆரோக்யமாகயிருக்கும்.
தினசரி முப்பது நிமிடங்கள் நடக்கவும். மனதை அமைதிப்படுத்தவும். இதற்கு யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், எழுதுவது, மனதில் படம் வரைதல் / நோக்குதல் உதவும்.
மூளைக்குத் தேவையான உணவுகள், புதிய தானியங்கள், சாப்பிடவும். மூளைக்கு நலன்தரும் முயற்சிகள் தேவை. அவை.
கொலஸ்ட்ரால் (HDL) 60 க்கு மேல்
கொலஸ்ட்ரால் (LDL) 100 க்கு கீழ்
ட்ரை கிளினசரைடஸ் 100 க்கு கீழ்
இரத்த அழுத்தம் 115/75
இரத்தத்தில் க்ளுகோஸ் 90&100 (பட்டினியில்) (Fasting)
ஞாபகச் சக்தியை அதிகரிக்கும் பயிற்சிகள் தேவை. அவை, மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகள், குறுக்கெழுத்துப் புதிர் போடுதல், எழுதுதல், படித்தல் போன்றவை.
தலையில் அடிபடக் கூடாது, காயங்கள் ஏற்படக் கூடாது.